Posts

ஈஸ்டர் முட்டை

Image
ஈஸ்டர் முட்டை  கிறிஸ்துமஸ் என்றால் கேக் .   பொங்கல் என்றால் கரும்பு.  தீபாவளி என்றால் விளக்கு.  ஹோலி என்றால் வண்ணம்.  இப்படி சில அடையாளங்களைக்  கொடுத்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக்  கொண்டிருக்கிறோம்.    ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவது  எது என்றால் கிறிஸ்து கல்லறையில் இருந்து  உயிர்த்தெழுதல்  என்று சட்டென்று  சொல்லி விடுவோம்.  கிறிஸ்துமஸ் கேக் போலவே  ஈஸ்டருக்கும் ஏதாவது   ஒரு பொருள்  சிறப்பானதாக  இல்லாமலா இருந்திருக்கும்? அந்தத் தேடலில் கையில் வந்து அகப்பட்டது ஒரு முட்டை. ஆஹா....அழகியதொரு முட்டை அந்த முட்டையைக் கையில் எடுத்தபடி ஈஸ்டர் நாட்களை நோக்கிப் பயணித்தேன். இந்த வருடம் ஈஸ்டர் கொண்டாட்டம் முட்டையோடு தொடங்கட்டும்  என்று மனக்கணக்குப் போட்டு வைத்தேன். இந்த வருடம் என்ன எல்லா வருடமும் ஈஸ்டர் என்றால் முட்டைதான் நினைவுக்கு வரும். வர வேண்டும் .   கிறிஸ்துமஸ் நாட்களில் எப்படி கேக் முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல ஈடஸ்டர் நாளில் முட்டை சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கான வர...

ஆவாரை யாரே அழிப்பார்

Image
ஆவாரை யாரே அழிப்பார்  நாம் நினைத்தபடி வாழ்க்கையில் எல்லாம் அமைந்துவிடுகிறதா? ஒருவருடைய வாழ்க்கை வசதி வாய்ப்போடு நன்றாக இருக்கிறது. அதற்குக் காரணம் முன்னோர் சேர்த்து   வைத்த பொருளாக இருக்கலாம். புண்ணியமாக இருக்கலாம். உழைப்பாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணம் ஒருவரின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்திருக்கிறது. மாறாக இன்னும் ஒரு சாரார் வாழ்க்கை வயிற்றுக்கான போராட்டமாகவே கடந்து போகிறது. அவர்கள் உழைக்க வில்லையா? அவர்கள் பெற்றோர் புண்ணியம் செய்யவில்லையா? ஆனால் அவர்கள் எது செய்தாலும் தடை. முன்னேற முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன? சிலர் கஷ்டப்படுவதைப் பார்த்தால் கடவுளைப் பார்த்தால் நிற்க வைத்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றும். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ள வாழ்க்கை  நிகழ்வுகள் கண் முன் வந்து ஏதேதோ எண்ண வைக்கின்றன. யாரையெல்லாமோ கேள்வி கேட்க வைக்கின்றன. யாரை கேள்வி கேட்டு என்ன பயன்?  இந்த நிகழ்வுகள் எல்லாம்  அவரவர் வாங்கி வந்த வரம் என்று சொல்லி  சிலநேரங்களில் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வே...

திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து  நன்றென இறைவன்  நினைத்திருக்க நல்லோர் கூடி இணைத்து வைக்க மகிழ்வாய் மணமகன் கரம் பிடிக்க சிறு புள்ளாய் மனம் சிறகடிக்க தேவதையாய் மணமகள் உடன் நடக்க ஆல்போல் வாழ்வு தழைத்திருக்க அருகுபோல் பரம்பரை நிலைத்திருக்க மூங்கில் போல் சுற்றம் தழுவி நிற்க இல்லறம் இன்பம் இனித்திருக்க  வாழ்வீர் என்றும் இணையாக வாழ்த்துகிறோம் உறவுகள் மகிழ்வாக வாழ்க பல்லாண்டு நலமாக!           - செல்வபாய் ஜெயராஜ் 

ஆற்றங்கரையின் மரமும்...

Image
ஆற்றங்கரையின் மரமும்... வாழ ஆசை . ஆனால் முடியவில்லை. வாழ்க்கை எங்கெங்கோ கொண்டு  நிறுத்தி வேடிக்கை காட்டுகிறது. கையேந்தி நிற்க வைத்து கண்ணாமூச்சி விளையாடி கலங்க வைக்கிறது  என்னடா பொல்லாத வாழ்க்கை புலம்புகிறேன் புவியில் யாருக்கும்  கவலையில்லை  எதைப்பற்றியும் புரிதலில்லை. இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று  சொல்வதில்லை என்று சொன்னார்கள் யார் இறைவன் என்று மட்டும்  சொல்லித் தரவில்லை  தந்திருந்தால் அவரிடம் மட்டும் கையேந்தியிருப்பேன் அவர் என்னை வாழ வைத்திருப்பார் யாரையெல்லாமோ கும்பிட்டுத் திரிந்தேன் யார் தொழத்தக்கவர் யார் என்று தெரியாமல்" என்று புலம்பினேன். "அட போடா.... யார் தொழத்தகக்கவர் என்று நான் சொல்லட்டுமா? யார் இந்த உலகில் வாழ்கிறாரோ  யார் பிறரை வாழ வைக்கிறாரோ அவர்தான் தொழத்தக்கவர்" என்ற குரலோடு வள்ளுவர் என்முன் வந்து நின்றார். "தானும் வாழ்ந்து  பிறரையும் வாழ வைக்கும்  நல்லுள்ளம் படைத்த மனிதர் இந்த உலகில் உளரோ?"என்றேன். "ஏனில்லை.....உழவர் இல்லையா" என்றபடி  “ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்  தொழுதுண்டு ...

அதே கண்கள்

அதே கண்கள். கடந்த ஒரு வார காலமாக என் தூக்கத்தைக் கெடுத்த அதே கண்கள். இதைத்தானே கடந்த ஒரு வாரகாலமாக நான் தேடிக் கொண்டிருந்தேன். இவ்வளவு சீக்கிரமாக பார்க்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. பார்த்த அந்தக் கணத்தில் தடுமாறிப் போனேன்.தலைகுப்புற  விழுந்தது போல் இருந்தது.  முன்னும் பின்னுமாக  கால்கள்  பின்ன ஆரம்பித்தன. ஏன் இந்தத் தடுமாற்றம்? அப்படி அந்தக் கண்கள் என்னதான்  பேசின? விடை தெரியாமல் மறுபடியும் என் கண்கள் அந்தக் கண்களைத் தேடின. ஒரு ஐந்து வினாடிதான். அதற்குள் அந்தக் கண்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று என்னை அதற்கு மேல் போகவிடாமல் கட்டிப் போட்டுவிட்டன. கண நேரக் காட்சி வந்து வந்து  மறைந்து போனது.  மறுபடியும் அந்தக் கண்களைக் காண மாட்டோமா என்ற ஏக்கம். துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தேன். நேரில் பார்க்க வேண்டும். பேச வேண்டும் . மனம் தவித்தாலும் என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. யாரும் பார்த்துவிட்டால்...? அதற்குமேல் வேறு வினையை வேண்டாம். அங்கேயும் இங்கேயும் பார்த்தேன். நல்ல வேளை யாரும்  பார்க்கமில்லை. உடம்பெல்லாம் வியர்த்துக் கொண்டு வந்தது. என...

காரவீடு

காரவீடு இருபத்தைந்து ஆண்டுகால குடிசை வாழ்க்கை நினைவுக்கு வர  கண்கலங்கி நின்றார் அன்னக்கிளி அத்தை. செம்பு லிங்கம் மாமா வீட்டில்  வெயில் காலங்களில் ஓட்டைவழியாக சூரியவெளிச்சம் அத்துமீறி அடாவடித்தனம் பண்ணும். மழைக்காலங்களில் எங்கு எல்லாம் ஓட்டைத் தெரிகிறதோ அந்த இடங்களைத் தேடிப் பிடித்து தாராளமாய் தண்ணீர் ஊற்றுவதும் சொட்டுச் சொட்டாக சொட்டிச் சேட்டை செய்துவதுமாய் மழை விளையாட்டுக் காட்டும். இது பலநாள் நிகழ்வானதால்  இதை எல்லாம் அன்னக்கிளி அத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருநாள் பாடென்றால் பெரிதாகத் தெரியும். நித்தம் நித்தம் இதே பாடுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டதால் எல்லாமே அவர்களுக்கு பழகி விட்டது. வெயில் அடித்தாலும்  தாங்கிக் கொள்ளும். குளிரும் மழையும் வந்து கும்மாளம் போட்டாலும் தாங்கிக் கொள்ளும். அப்படி ஒரு உடல்வாகு அன்னக்கிளிக்கு அமைந்துபோனது காலம் செய்த கோலம் என்பதா இயற்கை கொடுத்த வரம் என்பதா? எது எப்படியோ எதையும் தாங்கும் இதயம் இதையும்தாங்கும் என்ற நினைப்பில் அப்பப்போ பேரிடர்வந்து பெரும் புயலாய்த் தாக்கி விட்டுச் செல்லும்.    மழைக்காலங்களில்  ஓட்...

உன்னோடு வாழ்தல் அரிது

Image
உன்னோடு வாழ்தல் அரிது "வாய் வாழ்த்துகிறதோ இல்லையோ வயிறு வாழ்த்தும்'"  என்பது பழமொழி. வயிறார உண்டால்  மனமார வாழ்த்து வரும். "எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற நிலை மாறி எண்சாண் உடம்புக்கு  ஒரு சாண் வயிறே பிரதானம்" என்ற நிலைக்கு வந்து விட்டோம். வயிற்றுக்காகத்தானே இந்த ஓயா உழைப்பும் ஓட்டமும். அன்றொரு நாள் ... நடந்த களைப்பு தீர  ஒரு மரத்து நிழலில் அமர்ந்திருந்தார் ஔவை. நாவறள  கண்கள் கானல் பின்னால் ஓட வயிறு தா தா என்று  தாவா நடத்த காது கருங்குயிலின் கானம் கேட்க  தடாயிட்டு மறுத்து  மல்லுகட்டி நிற்க ஏன் ஏனென்ற கேள்வியோடு மனசு பதில் கேட்டு நிற்க உன்னாலே எல்லாம் உன்னலே வயிறே  உன்னாலே எல்லாம் உன்னாலே ஒருநாள் ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏற்க மறுக்கிறாய் என் நோவறியா  வயிறே! உன்னாலே  எல்லாம் உன்னாலே கூழுக்குப் பாடிய  கூனக்கிழவி என்றார்  கூனிக்குறுகிப் போனேன் உப்புக்கும் புளிக்கும் பாடுவேனென  ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மனதை ஆற்றியிருந்தேன் வயிறே! உன்னாலே  எல்லாம் உன்னாலே நாளும் துன்பம் தரு...