Posts

சங்க இலக்கியத்தில் உவமை

சங்க இலக்கியத்தில் உவமை  சங்க இலக்கியம் என்றதுமே  அது படித்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதுபோல முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு ஒதுங்கி  நின்று விடுவோம். காரணம் பல சொற்கள் பொருள் புரியாததுபோல இருப்பதுதான். படித்தவர்களும் இதைப்போய் யார் படிப்பார்கள் என்று சாதாரணமாகக் கடந்து போய்விடுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள் மட்டும் மாங்குமாங்கென்று படித்து தமிழ் இலக்கிய இன்பத்தை நுகர்ந்து மகிழ்ச்சியில் வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே சங்க இலக்கியம் படித்தவர்களுக்காக எழுதி வைக்கப்  பட்டதா? நமது வாழ்வியலைச் சொல்வதுதான் இலக்கியம். நாம் பார்த்த... நம்மோடு பழகிய ..! இன்றும் நாம் கண்டு சுவைக்கத் கூடிய நடைமுறை செயல்பாடுகளைக் கண்முன்  கொண்டு நிறுத்துவதாகவே இலக்கியங்கள்  இருக்கின்றன.   படிக்கப் படிக்கத் தான் இந்த  உண்மை புரியும்.   அந்த அழகியலை  அருமையான சொல்லோவியத்தை சங்க இலக்கியப் பாடல்களில்  நான் கண்டு வியந்ததுண்டு. நான் வியந்து பார்த்த அந்தக் காட்சியை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்த விழைகிறேன். அந்தக் காட்சி உங்களுக்குள்ளும்  இல...

ஜெபிக்கும் கரங்கள்

ஜெபிக்கும் கரங்கள்     ஜெர்மனி நாட்டில்   ஆல்பிரெச் ,ஆல்பிரட்  என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.    இருவருக்கும் ஓவியம் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை. ஆனால் ஆசையை நிறைவேற்ற பணம் வேண்டுமே. பணத்திற்கு எங்கே போவது?  வீட்டில் வறுமை.  போதுமான பண வசதி இல்லாததால் இருவராலும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.     ஆனாலும் இருவருக்கும் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைந்தபாடில்லை. இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர். இறுதியாக ஒருவர் வேலைக்குப் போகலாம். ஒருவர் வேலை செய்து இன்னொருவரை படிக்க வைக்க வேண்டும்.     ஒருவர் படிப்பு முடித்து வந்ததும் அவர் வேலைக்குச் சேர்ந்து இன்னொருவரைப் படிக்க வைக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.     இப்போது யார் முதலாவது படிக்க செல்வது என்பதில் குழப்பம்.      பூவா ...தலையா ...போட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை.      பூ ...விழுந்தவர்  முதலி...

நூற்றுக்கு நூறு

நூற்றுக்கு நூறு மகுடம் சூட்டிய நாள்முதலாக மணிமுடியில் வைரக்கற்களென நாளொரு திட்டம்  தந்து மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி செய்கின்றீர்! தங்கள் திட்டங்கள் அத்தனையும் படைத்து வருகிறது  புதிய வரலாறு அதனால் பெற்றுவிட்டீர் மதிப்பெண் நூற்றுக்கு நூறு! புகுந்த வீட்டில் மகிழ்வாக வாழ்ந்தாலும் பிறந்தவீட்டுப் பெருமை பேசும் சராசரி பெண்ணாக  தமிழகம் என் தாய்வீடு என்பதில்  எனக்குப் பெருமிதம் உண்டு தாயை இழந்தபின்  தாய்வீட்டுப் பெருமை பேசுவதில் ஏது மதிப்பு? ஏதிலியான மனநிலைதான் எம்மிடம் எப்போதும் உண்டு! தாயின் மடிமீது அமர்ந்திருந்து நிலாச்சோறு உண்டிருக்கும் குழந்தையை ஏக்கத்தோடு பார்த்து நிற்கும் அண்டை வீட்டுக் குழந்தை போல ஏக்கத்தோடு தமிழகத்தைப் பார்த்து நின்றேன்! "புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் "என்ற  ஒற்றை அறிவிப்பைத் தந்து உலகத் தமிழரின் உள்ளங்களைக் கற்றையாய் அள்ளிக் கொண்டீர்! "வா..தாய்வீட்டு அரவணைப்பும் பாதுகாப்பும் உனக்கும் உண்டு" என்றுரைத்த உம் கரிசனத்தை என்னவென்பேன்?  ஏது சொல்லி பாராட்டுவேன்? நன்றி என்ற மூன்றெழுத்தைச் சொல்லி அந்நியப்பட்டு நிற்க மனமில்லை உணர்...

சித்தியும் மீன் குழம்பும்

சித்தியும் மீன்குழம்பும் எங்க சித்தியை மாதிரி சுவையாக யாரும் சமையல் செய்துவிட முடியாது. மகராசி அவள் கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது என்று எங்கள் பாட்டி சொல்லிச் சொல்லிப் பெருமைப் படுவார். ஆனால் என்ன சுவையாக சமைத்து என்னப் பிரயோஜனம்? வாழ்க்கை சுவையாக அமையவில்லையே!  அந்தக் குழம்புதாங்க அவர் வாழ்க்கைக்கே எமனாகப் போய்விட்டது. சித்தப்பா  சாப்பாட்டை அவ்வளவு ருசித்துச் சாப்பிடுபவர் இல்லை. சொல்லப் போனால் ஏதோ கடமைக்கு சாப்பிடுவதுபோல சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுவார். ஒரு ரசனையே இல்லாத ஆள்  உன் சித்தப்பா என்று சித்தி அடிக்கடி சொல்லி  வருத்தப்பட்டுக் கொள்வார். ஆனாலும் சித்தி எந்த இடத்திலும்  சித்தப்பாவைவிட்டுக் கொடுத்துப் பேசமாட்டார். சித்தப்பா அதற்கு எதிர்மாறானவர். எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ  அங்கெல்லாம் சித்தியை குறைகூறாமல் இருக்க மாட்டார். ஒருநாள் என்றால் பரவாயில்லை. நித்தம் நித்தம் இதுதான் என்றால்.... கேட்டுக் கேட்டு சித்திக்கு மரத்துப் போய்விட்டது. இப்போ எல்லாம் சித்தப்பா குறைகூறாமல் இருந்தால் அதுதான் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும...

மண்சட்டியும் மீன் குழம்பும்

Image
மண்சட்டியும் மீன் குழம்பும் அசைவம் சாப்பிடுகிற அனைவர்க்கும் விருப்பமான குழம்பு ஒன்று உண்டென்றால் அது மீன் குழம்பாகத்தான் இருக்கும். எங்க சித்தி வைக்கும் மீன்குழம்புக்கு ஈடாக யாரும் மீன் குழம்பு வைக்க முடியாது. அது என்னவோ ஓடுகிறத் தண்ணீரில் மீனைத் தேடிப் பார்ப்பது போல குழம்பு தண்ணியாக இருந்தாலும் ருசி மட்டும் குறையவே குறையாது. கொஞ்சம் கெட்டியாக வைத்தால் என்ன என்று கேட்டால் எட்டு தட்டுக்கு ஊற்றணும். அதுவும் இரண்டு நேரத்துக்கு.... ஆளுக்கு இரண்டு அகப்பை ஊற்றினாலும் பதினாறு அகப்பை ஊற்றணும். கொஞ்சம்போல மிச்சம் இருந்தால் சுண்ட போட்டு பழைய சோத்துக்கூட கூட்டிகிட்டோம்ன்னா கூடுதலா ஒரு தட்டு கஞ்சி குடிச்சிடலாம் இல்லியா என்பார் சித்தி. மீன்குழம்பு செய்வதே ஒரு கலை. வெறுமனே பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று செய்தால் சுவை இருக்காது. பார்த்துப் பார்த்துப் பக்குவமாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்தீர்கள் என்றால் சட்டி பத்தலைக்கூட விட்டு வைக்க மாட்டீர்கள்.  சொல்லும்போதே இப்போதே மீன்குழம்பு செய்து சாப்பிடணும் என்று தோணுது இல்லலையா? அப்படிச் சொல்லித் தருவாங்க எங்க சித்தி. சித்தி மீன...

ஹோலியும் ஹோலிகாவும்

ஹோலியும் ஹோலிகாவும்  தீபாவளி என்றால் பட்டாசு .  பொங்கல் என்றால் கரும்பு.  கிறிஸ்துமஸ் என்றால் கேக்.  ஹோலி என்றால் வண்ணம்.  இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும்  ஒரு தனி அடையாளம் உண்டு.   பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தானாக வந்து குடி கொண்டுவிடும். ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியைத் தரும். எல்லா பண்டிகைகளும் ஏதோ ஒரு சிறப்பைப் பெறுவதாக இருக்கும்.  ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள சிறப்பு அது கொண்டாடப்பட்டதன் வரலாறு ஆகியவற்றை அறியும்போது எந்த ஒரு பண்டிகையும்  வெறுமனே பொழுது போகாமல் கொண்டாடப்பட்டதல்ல என்ற உண்மை புரிய வரும். புராண கதைகளாக இருக்கலாம் அல்லது வரலாற்று உண்மை நிகழ்வுகளாகக்கூட இருக்கலாம். பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி ஒன்றையே  குறிக்கோளாக கொண்டிருக்கும். இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கியது. அப்பாடா...இனி எந்த அச்சமும் இல்லை. கொண்டாடுவோம் வாருங்கள் என்று  அழைப்பு விடுப்பதாகவே இருக்கும்.  வண்ணங்களின் பண்டிகையான ஹோலி கொண்டாடப்பட்ட  வரலாறு  சுவாரசியமானது. பால்குன் மாதத்தில் வரும் முழுநிலவு நாளில் ஹோலி கொண்டாடப்படுவது வழக...

உண்டாலம்ம இவ்வுலகம்

உண்டாலம்ம இவ்வுலகம்.... உலகம் ரொம்ப கெட்டுப் போய் விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை ,கொள்ளை பாலியல் வன்கொடுமை, சண்டைச் சச்சரவு, நாட்டுக்கு நாடு போர் .வீட்டுக்கு வீடு  போட்டி, பொறாமை, எங்கெங்கு நோக்கினும் அமைதி இல்லாச் சூழல் என்று சொல்லிச் சொல்லிப் புலம்பாத ஆளில்லை. அப்படியானால் உலகமே அவ்வளவு தானா.? இனி உருப்படவே உருப்படாதா.? உருப்படியான ஆள் ஒருவர் கூட இல்லையா  என்ற ஐயம் எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. ஏன் இல்லை. ...அப்படி இல்லாதிருந்தால் உலகம் என்றோ அழிந்து போயிருக்குமே... உலகம் இன்று வரை நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் நல்லவர்களும் உள்ளனர் என்பதுதானே அர்த்தம். "நல்லார் ஒருவர் உளரேல்அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை " என்று வள்ளுவர் கூறியிருக்கிறாரே என்ற உங்கள் மனவோட்டம் எனக்குப் புரிகிறது. மழையும் பெய்கிறது...உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் யார்...யாராக இருக்க முடியும்... நல்லவர்கள்....நல்லவர்களேதான். வேறு யாரும் இதற்குக் காரணம் அல்லர். இன்றும் உலகில் நல்லவர்கள் இருப்பதால்தான் உலக இயக்கம் தடை இல்லாமல் சீராக போய்க்  கொண்டி...