சென்ற இடமெல்லாம் சிறப்பு
சென்ற இடமெல்லாம் சிறப்பு பேரும் புகழுமாய் வாழ வேண்டும். சீரும் சிறப்பும் பெற வேண்டும். பணம் மிகுதியாய்க் குவிய வேண்டும். பதவி வந்து அணியம் செய்ய வேண்டும். இவைதான் அனைவரின் ஆசையாக இருக்கும். இதற்கு நானும் நீங்களும் விதிவிலக்கல்ல. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஏதாவது வழி இல்லாமலா இருக்கும்? இதோ அதற்கு ஒரு வழி சொல்லித் தருகிறார் பாரதிதாசன் . " ஏழையையும் நல்ல பணக்காரன் ஆக்கும் படிப்பு" என்கிறார் பணக்காரன் ஆக வேண்டுமா? படியுங்கள் என்று சொல்லித் தந்துவிட்டார் . அப்படியானால் எப்படியாவது படித்து கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் . காணி நிலம் வாங்க வேண்டும். அதில் என்னென்னவெல்லாம் இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவு மனதினுள் வந்து போக அண்ணாந்து பார்த்து கட்டிலில் மல்லாந்து கிடந்து மனக்கோட்டைக் கட்டினேன். இடையில் இன்னும் சில கேள்விகள் குறுக்கே வந்து கட்டையைப் போட்டு நிற்க....நெடிய சிந்தனையில் கண்மூடிக் கிடந்தேன். பணம் என்ற ஒன்றை மட்டும்தான் கல்வி தருமா? பேரும் புகழும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமே. அதற்கு என்ன செய்வது? பணக்காரன் உள்ளூர்விட்டு வெ...