Posts

உவமை அணி

உவமை அணி என்றால் என்ன ? அணி இல்லாத கவிதை மணி இல்லாத மாலை போன்றது. கவிதையின் அழகுக்கு அழகு சேர்ப்பது அணி இலக்கணம். அழகோடு மட்டுமல்லாமல் சொல்ல வந்த கருத்தை எளிதாக புரிய வைப்பதற்காகவும் செய்யுளில் உவமை கையாளப்படுதல் உண்டு. அணி இலக்கணத்தில் முதன்மையான அணி உவமை அணியாகும். ஒரு பொருளை விளக்குவதற்காக அதனோடு ஒப்புமை உடைய இன்னொரு பொருளை உவமையாகக் கூறி விளங்க வைப்பதை உவமை அணி  என்கிறோம். உவமை நாம் அன்றாடம் கேட்ட சொற்களாகத்தான் இருக்கும். "ஆஹா.....இந்த மாம்பழம் தேன் போல  இனிக்கிறது "என்று சொல்லிச் சொல்லி  சுவைத்திருப்போம். ஏதாவது மருந்தைப் குடிக்கும்போது "பாகற்காய் போல கசக்கிறது "என்று சொல்லி குடிக்க மறுத்திருப்போம். "நீர் அருவி போல கொட்டியது" என்று சொல்லக் கேட்டிருப்போம் . "ஒத்த பிள்ளை என்று கறிவேப்பிலை  கண்ணுபோல வளர்த்தேன் "என்று அம்மாக்கள்  சொல்லுவதைக் கேட்டிருப்போம். "பிள்ளை என்றால் பக்கத்து வீட்டு   ரவி போல இருக்கணும்.நீயும் இருக்கியே...." என்று அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். "அந்தப் பெண்ணுக்குப்  பூப்போல மனசு " என்று  சொல்லியிர...

பூசணிக்காய் சோத்துக்குள் மறைத்த கதை

Image
பூசணிக்காய் சோத்துக்குள் மறைத்த கதை முழு பூசணிக்காயைச் சோத்துக்குள் மறைக்க முடியுமா?  அதெப்படி முடியும்? இந்தக் கதை எல்லாம் எங்களிடம் வேண்டாம். பொய்யைச் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தும்படியாகச் சொல்ல வேண்டாமா? என்று தானே கேட்கிறீர்.  என் மனதிலும்  இதே கேள்விதான். ஆனால் இப்படியொரு பழமொழி ஏன் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறது? ஒரு வேளை சின்ன பூசணிக்காயாக இருக்குமோ? அதெப்படி? ஒரு முட்டையை மறைத்து வைத்தாலே உள்ளேன் ஐயா என்று வெளியே பிதுங்கிக் கொண்டு வந்து நிற்கிறது. முட்டையைவிட சிறிய பூசணிக்காயை எங்கே போய் பறிப்பது? ஆனாலும் பழமொழி பழக்கமொழி  அல்லவா?  பழக்கமொழி முதுமொழி எப்படி  பொய்மொழியாகும்.    இல்லாத ஒன்று எப்படி நம் காதுகளுக்கு  வந்து சேரும்.?  பொருள் மாறுபாடு உருட்டல்  பிரட்டலாக வந்து சேர்த்திருக்கலாம்.   ஆனால் பூசணிக்காய் இருந்ததென்னவோ  உண்மையாகத்தான் இருக்கும்   இந்தப் பூசணிக்காயை எப்படியாவது பறித்துவந்து பொரியல் செய்து உங்கள் முன் படைத்துவிட வேண்டும் என்று  வெகு நாட்களாக ஆசை. அதற்கான தேடுதல் வேட்டையில் ...

சின்னஞ்சிறு கிளியே

சின்னஞ்சிறு கிளியே... பாரதியின் கண்ணன் பாட்டு  தெரியும். கண்ணம்மா பாட்டு தெரியுமா?  பாரதி கண்ணனை குழந்தையாக உருவகித்துப் பாடிய பாடலான  சின்னஞ்சிறுக் கிளியே என்ற பாடலைத்தான் நான் கண்ணம்மா பாட்டு என்கிறேன். இந்தப் பாடலில்  பாரதி ஒரு குழந்தையாக எப்படி எப்படி எல்லாம் கொஞ்சி மகிழ்கிறார்  என்பதைப் பாருங்கள்.  கண்ணம்மா பாரதியின் மனதை என்ன  பாடுரபடுத்தியிருக்கிறாள்  என்பதைச் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டிருக்கிறார். கண்ணம்மா பாரதியின் துன்பம் எல்லாம் நீக்க வந்திருக்கிறாள். திக்குமுக்காட வைத்திருக்கிறாள். சஞ்சலப்படுத்தியிருக்கிறாள். ஓடி விளையாட வைத்திருக்கிறாள் உச்சி குளிர வைத்திருக்கிறாள். உள்ளம் கர்வம் கொள்ள வைத்திருக்கிறாள். கள்வெறி கொள்ள வைத்திருக்கிறாள். இமைக்குள் இருந்து இன்பம் தந்திருக்கிறாள் உயிராய் உணர்வாய் உறவாய் இருந்து ஆனந்தப்பட வைத்திருக்கிறாள். அதனைப் பாரதி தனது சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலில் சொல்லிப் சொல்லிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். பாரதியின் கண்ணம்மாவை நாமும் கொண்டாட வேண்டாமா? வாருங்கள் நாமும் பாரதியோடு சேர்ந்து கண்ணம்மாவைக் கொண்டாடுவ...

கடவுள் ஏன் கல்லானார்

Image
கடவுள் ஏன் கல்லானார்..? கேள்வி கேளுங்கள். கேட்க கேட்கத்தான் அறிவு வளரும். கேள்வி கேட்கும்போது  புதியனவற்றைத் தெரிந்து கொள்கிறோம். அதிகம் கேள்வி கேட்கப்படும் இடங்கள் மூன்று என்பர். முதலாவது வீடு. ஏன் ? எதற்கு ? எங்கே ?  என்ற கேள்விகள் கேட்காத வீடுகள் இருக்க முடியாது. சண்டைக்கான அடித்தளமே கேள்வியில்தான் தொடங்குகிறது. வீடு தான் கேள்வி கேட்கும் உரிமையைக் கொடுக்கும் இடம். சுதந்திரமாக எந்தக் கேள்வியும்  கேட்கலாம். விடை சரியாக கிடைக்கும். எதிர்மறையாகவும்  வந்து விழும். சில நேரங்களில் தாறுமாறாக முட்டி மோதி எட்டிப் பார்க்கும்.   எது எப்படியோ கேள்விக்கான விடை எந்த வகையிலோ வந்து  சேர்ந்து விடும். இரண்டாவதாக  கேள்விகள் கேட்கப்படும்   இடம் வகுப்பறை. மாணவர்களை அதிகம் கேள்வி கேட்க அனுமதியளிக்காத இடம் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களைக் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை.  மாணவர்களை அதிகம்  கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு புரிதலோடு கற்க அனுமதியளித்ததாக இருக்கும். மூன்றாவது நீதிமன்றம் கேள்வி க...

பழிக்கக்கூடாதவை

Image
பழிக்கக்கூடாதவை தாயைப் பழிக்கக் கூடாது.  மதத்தைப் பழிக்கக் கூடாது.  உடலமைப்பைப் பழிக்கக் கூடாது. இந்த  மூன்று விழுமியங்களையும் கடைபிடித்து வந்தால் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாது. நாடும் அமைதியாக சென்று கொண்டிருக்கும். முதலாவது தாயைப் பழிக்கக்கூடாது தாயைப் பழித்தால்... என்ன நடக்கும் என்பதை நீங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே கண்டு வந்திருப்பீர்கள். இரண்டு மாணவர்கள் சண்டைப் போடுகிறார்கள். ஒருவன் வெறியோடு  மற்றவன் மேல் கையைப் போடுகிறான். என்ன சண்டை என்று கூப்பிட்டு விசாரித்தால் அம்மாவைப் பழித்துப் பேசிவிட்டான். அதனால்தான் அடித்தேன் என்பான். பெரும்பான்மையான நேரங்களில் சாதாரணமாகத் தொடங்கிய சண்டை உக்கிரமாவதற்குக் காரணம் அம்மாவைப் பழித்தும் பேசியதாலேயே இருக்கும். அவரவர்க்கு அவரவர் அம்மா பெரிது. அதனால் தன் தாயை யாரும்  பழித்துப் பேச அனுமதிக்க மாட்டார்கள். இந்த உலகத்திலேயே ஒருவரால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு நபர் ஒருவர் உண்டு என்றால் அவர் அம்மாதான். அம்மாவை எதற்காகவும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மனம் வராது. இந்தப் பாசம் தாயை...

திண்தேர் வளவன்

திண்தேர் வளவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ‘திண்தேர் வளவன்’ என்று போற்றப்படுகிறான்.  திண்தேர் வளவன் என்றால் தேர்மேல் இருந்து வலிமையாகத் தாக்க வல்லவன் என்பது பொருள்.  அத்துடன் இவனிடம்  பெரும் படையும் இருந்தது. தா என்று சொன்னால் மறுக்காமல் வழங்கும்  வலிமை மிக்க இவனுக்கு எதிரில் நின்று உயிர் வாங்கும் கூற்றுவன் தாக்கி இவன் உயிரை வாங்கிவிட முடியாது.  இந்த வளவன் பாடுபவர்களுக்கெல்லாம் வாரி வழங்குபவன்.  இதனை அறிந்த கூற்றுவன் இவருக்கு முன்னே கைகூப்பித் தொழுது நின்று ‘உன் உயிரைத் தா’ என்று பிச்சையாகக் கேட்டால் மறுப்பு கூறாது கூற்றுவனுக்கு தன் உயிரையும் கொடுத்துவிடுவான் வளவன்.  அவனைப் பற்றிய பாடல் இதோ உங்களுக்காக... " செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ; பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, இரந்தன்று ஆகல் வேண்டும் பொலந் தார் மண்டு அமர் கடக்கும் தானைத் திண் தேர் வளவற் கொண்ட கூற்றே." கூற்றுவன்  கால இறுதியில்  எல்லா  உயிரையும் எளிதில் எடுத்துவிடுவான். ஆனால்  அவனாலும் எளிதில் எடுத்துவிட முடியாத ஓர் ...

தை மகளே வா

Image
தை மகளே வா எழுந்தது கதிரவன் புலர்ந்தது பொழுது மலர்ந்தன கண்கள் தொழுதன கைகள் புதுப்பானை வந்தது புதுப்பால் பெய்து புத்தரிசி இட்டு பொங்கலிட புத்தாடை அணிந்த பூவையவள் வந்துவிட்டாள் குலவையிட்டு வரவேற்க  குடும்பமாய் யாம் வந்தோம் தை மகளே வா ! மையிருட்டு விலக்கி பைய நின்கண் திறந்து வையம் உவப்ப  வாழ்வு வளம்பெற தை மகளே வா! தரணி செழித்திட வளங்களை அள்ளித் தா!