Posts

புலவர் பாடாது வரைக...

புலவர் பாடாது வரைக  " உள்ளத்துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத்தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை" என்பார் கவிமணி. ஆனால் கவிதைக்குப் பொய்யழகு என்று ஒரு கற்பனையான கருத்தியலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதனால் எந்தப் பாடலைக் கேட்டாலும் அதில் உண்மை இருக்காது.மிகைப்படுத்தலாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் படிக்கத் தொடங்குவோம். இது கவிதையைப்பற்றி நேற்று இன்று நாளை  என்று எல்லாக் காலத்திற்கும்  சேர்த்தே உருவான கருத்தியலா? இன்றைய புதுக்கவிதைக்கு மட்டும் உரியதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதே கருத்து உங்களுக்குள்ளும்  எழுந்திருக்கலாம்.. அதற்கான விடை தேடலில் ஈடுபட்டபோது கிடைத்த ஒற்றை வரி இப்படியாக இருக்குமோ என்று இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது. கண்டிப்பாக இவை காலமாற்றத்தில் ஏற்பட்ட கருத்தியலாகத்தான் இருக்கும். காரணம் "புலவர் பாடாது வரைக என் நிலவரை " என்ற ஒற்றை வரி. இந்த வரி என்னை முன்பின் நகர விடாமல்  அங்கேயே நிற்க வைத்தது. யார் இதைச் சொன்னது என்பதை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. இது வஞ்சினம் உரைத்த ஒரு மன்னன் வாயிலிரு...

வைகறை துயிலெழு

வைகறை துயிலெழு  அதிகாலையிலேயே எழும்பணுமா    என்னால் எல்லாம் முடியாதுப்பா... எட்டுமணி வரை யாராவது கிட்ட வந்தா எட்டி உதைச்சுடுவேன் "  என்று சொல்லும் பிள்ளைகள்  வாழும் காலம் இது.  இப்போது "வைகறைத் துயிலெழு" என்று சொல்வது சாத்தியப்படுமா?     வேண்டாமப்பா உங்கள் துயிலெழு படலம் என்று புலம்பலா...? எவ்வளவு நேரம் தான் தூங்கிக் கொண்டே இருப்பது? தூங்குவதற்கும் ஓர் அளவு வேண்டாமா? தூங்கலுக்கும் அளவா...?  எத்தனை நாளைக்குத்தான் இந்த புலம்பலும் சிணுங்கலும்.  அதிகாலையிலேயே எழும்பித்தான் ஆக வேண்டும். இதை நான் சொல்லவில்லை. யார் சொல்கிறார் என்று கேளுங்கள்.  இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்று  படுக்கையில் கிடந்தால் "சோம்பேறியே எறும்பினிடத்துப் போய் கற்றுக்கொள் "என்று எறும்பின் இடத்தில் பாடம் கற்க அனுப்பிவிடுவார்கள்.       அதிகாலையில் எழும்பும் பழக்கம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் கிடைத்த முதல் வெற்றி.                 வெற்றி பெற்ற ...

குயில் சொன்ன பாடம்

குயில் சொன்ன பாடம் சொல்ல முடியாத சோகங்கள் மீள முடியாத தோல்விகள் தாங்க முடியாத  அவமானங்கள்  இவைதான்  வாழ்க்கையா? தடுமாற்றங்கள்  தடமாற்றங்கள்  விழிகள் நீர் சிந்த விடை தெரியாக் கலக்கம்  உள்ளம் உளைச்சலில் உள்ளிருந்து புலம்ப எங்கிருந்தோ கேட்டதொரு இன்பத் தேன்குரல் குரல் வந்த  வழி நோக்கி விழி உயர்த்திப் பார்த்தேன்  அருகிலுள்ள  தென்னை மரத்தில்  ஆடிக்கொண்டிருக்கும் தென்னங்கீற்றுக்  கிடையில் தெரிந்ததொரு கருமை உருவம் கருமை வெறுமை எதுவும் என்னைப் பாதிப்பதில்லை  கண்களில்  கவினுண்டு குரலின் தேனினிமை கொண்டு பாடிக்கொண்டிருந்தது குயில்  தென்னம்மட்டை  தெற்குப் வடக்கு மார்ச் சாய்ந்தாட சரிந்து சாய்ந்து விழுந்து மாய்ந்து போவோமோ? மானிடர் கையில் அகப்பட்டு அடைபட்டு போவேனோ? அச்சம்  குயிலின் குரலை தடுமாற வைக்கவில்லை வீசும் காற்று  விழத்தட்டி வேடிக்கை பார்க்குமோ ? குழப்பம் கிஞ்சித்தும் இருப்பதாகத் தெரியவில்லை  ஓவென்று  ஒப்பாரி வைக்கும்  ஓலைகளால்  குரலுக்கு  அவமானம் நேர்ந்திடுமோ ? கலக்கம்  கடுகளவேனும்...

கடவுள் ஏன் கல்லானார்

கடவுள் ஏன் கல்லானார்  கேள்வி கேளுங்கள். கேட்க கேட்கத்தான் அறிவு வளரும். கேள்வி கேட்கும்போது  புதியனவற்றைத் தெரிந்து கொள்கிறோம். அதிகம் கேள்வி கேட்கப்படும் இடங்கள் மூன்று என்பர். முதலாவது வீடு. ஏன் ? எதற்கு ? எங்கே ?  என்ற கேள்விகள் கேட்காத வீடுகள் இருக்க முடியாது. சண்டைக்கான அடித்தளமே கேள்வியில்தான் தொடங்குகிறது. வீடுகள் தான் கேள்வி கேட்கும் உரிமையைக் கொடுக்கும் இடம். சுதந்திரமாக எந்தக் கேள்வியும்  கேட்கலாம். விடை சரியாக கிடைக்கும். எதிர்மறையாக வரும் வந்து விழும். சில நேரங்களில் தாறுமாறாக தட்டியும் வந்து சேரும். எது எப்படியோ கேள்விக்கான விடை எந்த வகையிலோ வந்து  சேர்ந்து விடும். இரண்டாவதாக  வகுப்பறை . அதிகம் கேள்விகள் கேட்கப்படும்   இடம் வகுப்பறை. மாணவர்களை அதிகம் கேள்வி கேட்க அனுமதியளிக்காத இடம் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களைக் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை.  மாணவர்களை அதிகம்  கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு புரிதலோடு கற்க அனுமதியளித்ததாக இருக்கும். மூன்றாவது நீதிமன்றம் கேள்வி கேட்கப்படும் ...

வாடி இருக்குமாம் கொக்கு

வாடி இருக்குமாம் கொக்கு  மௌனம் ஓர் அழகான மொழி என்று சொல்வார்கள். எல்லாராலும் அமைதியாகவும் மௌனமாகவும் இருந்துவிட முடியாது. மௌனமாக இருப்பது கூட அறிவுள்ள ஒருவர்க்கு மட்டுமே  இயலக்கூடிய ஒன்று அமைதியாக இருக்கும் ஒருவரை அலட்சியமாக எண்ணிவிட வேண்டாம். அடக்கமாக இருப்பதால் எல்லாவற்றிற்கும் அடங்கிப் போய்விடுவார் என்று  தவறாக எண்ணிவிடவும் வேண்டாம். அந்த அமைதிக்கும் அடக்கத்திற்கும் காரணம் தேவையில்லாத இடத்தில் பேசுவதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம். சாதகமான சூழலுக்காகக்  காத்திருப்பதற்காகவும் இருக்கலாம். சாதகமான சூழல் என்றதும்  ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்குதான் கண்முன் வந்து நிற்கிறது. கொக்கு ஒருபோதும் மற்ற  பறவைகளைப் போன்று பரபரப்பாக சுற்றிக்கொண்டு திரியாது. வயலோரமாகவோ குளத்தோரமாகவோ  ஒன்றுமே தெரியாதது போல ஒற்றைக்காலில் நின்று  கொண்டிருக்கும். எதிலும் கவனம் செலுத்தாதது போலவே நின்றிருப்பதால் மீன்குஞ்சுகள் கொக்கின் கண்  முன்னாலேயே நீரில் நீச்சலடித்து  விளையாடும். ஆனால் கொக்கு இதனைக்  கண்டுகொள்வதே மில்லை.  அதனால் மீன்களுக்குக் கொக்கு  மீத...

தக்காளி

Image
தக்காளி  டாலரை விஞ்சி விட்ட  தக்காளியே யூரோவைத் தாண்டி எட்டடி தள்ளி நின்று  எட்டிப் பார்த்து மெல்லக் கண்சிமிட்டி   கள்ளவிளையாட்டு காட்டுவ‍தில் யாது நீ ஞாயம் கண்டாய்?  கனிந்த முகம் பார்த்து  கன்னல் கனியமுதம்   கன்னத்தில் முத்தமிட்டு  கன்னிவாய்ச் சிவக்க  கடித்த நாட்களை   நினைத்துப் பார்க்கிறேன்  அந்நாள் நினைவுகளில்  செம்மலர் உன் நினைவில்  உள்ளம் நைந்து  உருக்குலைந்து போகிறேன்!    தகதகக்கும்  நின்னுரு  காணாது தன்னுரு இழந்து தன்னிலை மறந்து வெந்நீராய்க் கொதிக்கிறது என் வீட்டுக் குழம்பு! நீயோ உன்னிலை மறந்து என்னிலை துறந்து அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆலோகணம் பாடுகின்றாய்! எளியவர்  எம் பக்கம் எட்டிப் பார்ப்பதெப்போது?  எம்வீட்டுக் குழம்பு  எட்டும் தொலைவு மட்டும் உன் மணம் சொல்லி பெருமைப் பேசும் தப்பாது தேவதை நின் திருமுகத் தரிசனம் வேண்டும்  எமக்கு இப்போது! வானம் திறந்திருந்ததால் வாட்டம்  கொண்டாயோ? மாடி வீடெல்லாம் தோட்டமானதால் மண்ணில் வாழத் தோதில்லையென்று ...

அஞ்சறைப் பெட்டி

Image
அஞ்சறைப் பெட்டி  உணவே மருந்து" நாம் உண்ணும் உணவு மருத்துவ குணம் கொண்டதாக இருந்தால் எளிதில் எந்த நோயும் நம்மை அண்டாது. அதற்காகத்தான் நம் முன்னோர்கள்  உணவுப் பொருட்கள் தயாரிக்கும்போது  சில மருத்துவ குணம் உள்ள மசாலாக்களையும் சேர்த்து உணவு தயாரிப்பர். அந்த பாரம்பரிய முறைப்படி தான் பெரும்பாலான உணவுப்பண்டங்கள் இன்றுவரை நம் வீடுகளில்  தயாரிக்கப்பட்டு வருகின்றன. எல்லாவற்றையும் பாதுகாப்பாய் வைத்திட ஓரிடம் வேண்டுமல்லவா? தனித்தனிக் தனியாக அங்கேயும் இங்கேயும் எங்கேயும் வைத்துவிட்டால் மசாலா அரைக்க அம்மியில் போய் உட்கார்ந்து பின்னர் எங்கே போய் தேடுவது? அதனால் நம் முன்னோர்  அம்மியின் அருகிலேயே ஓர் அஞ்சறைப் பெட்டியை வைத்திருந்தனர். சில குறிப்பிட்ட மசாலாப் பொருட்கள் எப்போதும் சமையலறையில்  உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும். அஞ்சறைப் பெட்டியா?  அது என்ன  அஞ்சறைப் பெட்டி என்கிறீர்களா?   டிரங்கு பெட்டி, கொட்டாப் பெட்டி மரப் பெட்டி, கடாப் பெட்டி  கிண்ணிப் பெட்டி வண்ணப்பெட்டி நார்ப் பெட்டி  ஓலைப் பெட்டி பிளாப் பெட்டி இப்படி பெட்டிப் பெட்டியாப...