Posts

ஞானம்ம பாட்டி

ஞானம்ம பாட்டி "மேலத் தெருவுல சுடலைமாடன் கோவில் பக்கத்துல சர்க்காரு அதிகாரிக வந்துருக்காவளாம். நீரும்  சட்டுன்னு ரெண்டு மொடக்கு நீத்தண்ணி குடுச்சிபுட்டு  ஓடிப் போய் என்ன யாதுன்னு பாரும் "  தோட்டத்துக்குப் போயிட்டு வந்ததும் வராததுமா தாத்தாவை  துரத்தாத  குறையா துரத்தித் கொண்டிருந்தாள்  ஞானம்ம பாட்டி.   "எதுக்கு வந்துருக்காவளாம்?" என்று கேட்டபடியே கட்டிலில் போய் உட்கார்ந்தார் வேதநாயகம் தாத்தா. "உக்காந்துட்டீரா? இனி எழும்ப ஒருமணி நேரம் ஆக்குவீர...." "எதுக்கு வந்துருகாவன்னு  கேட்டதுக்குப் பதில் சொல்லு" "என்கிட்ட சொல்லிகிட்டு தான் வந்துருக்காவ ஓடிப் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாரும்னா... எடக்குமடக்கா கேள்வி கேட்டுட்டு கிடக்கீரு" "என்னத்துக்கு யாதுக்குன்னு தெரியாம எதுக்குப் போகணும்?" "உம்மட்ட எல்லாத்தையும் ஒண்ணு விடாம எழுதணும்..போய் பாத்துட்டு வாரும்ன்னா பார்த்தூட்டு வாரும்ம...." "கூனுகுறுக்கு முறிய ஒரு ஏர் உழுது கிட்டு வந்துருக்கேன். செத்த குறுக்க அனத்த விட மாட்டாள... நொய்...நொய்ன்னுட்டு"?" . "நீரு தூங்கு...

தாலாட்டு

தாலாட்டு பாட்டு  ஆராரோ ஆரிராரோ-என் ஆனந்தமே ஆராரோ ஆடிவரும் பூங்காற்றோ _ எம்மை ஆளவந்த மகராசரோ ஆராரோ ஆராரோ _ என் ஆனந்தமே ஆராரோ  பாட்டி மடியினிலே பஞ்சு மெத்தை தொட்டினிலே தாத்தா வருமுன்னே  தங்கமே நீ கண்ணுறங்கு!  முத்தமிழே செங்கரும்பே மூடி வைத்த நறுந்தேனே செல்லமே என் சிங்கராசாவே சிணுங்காமல் நீயுறங்கு! அன்னமே என் அழகு ரதமே அம்புலியே அதிசயமே அம்மான் தந்த தொட்டிலிலே செம்மாந்து நீயுறங்கு! ஆராரோ ஆராரோ_ என் ஆனந்தமே ஆராரோ ஆடிவரும் பூங்காற்றோ_ எம்மை  ஆள வந்த மகராசரோ ஆராரோ ஆராரோ _என் ஆனந்தமே ஆராரோ அம்மா வரும் வரையில் ஆச்சி துணை இருந்திடுவேன் ஆடிவரும் தூலிகையில் அரசன்போல்  நீயுறங்கு! புட்டிப்பால் தருவாரோ போக்குக் காட்டி வைப்பாரோ பொழுதுமட்டும் கலங்காமல் பொன்மகனே நீ கண்ணுறங்கு! அம்மா குரல் கேட்க அலைபேசி அருகில் வைப்பேன் அன்னமே என் அழகு ரதமே அது கேட்டு நீயுறங்கு! ஆராரோ ஆராரோ_என் ஆனந்தமே ஆராரோ ஆடி வரும் பூங்காற்றோ_ எம்மை  ஆள வந்த மகராசரோ ஆராரோ ஆராரோ _ என் ஆனந்தமே ஆராரோ கலையே என் காவியமே _ உன்னைக் கன்னமிட்டுச் செல்லாமல் கண்ணுக்குள்ளே வைத்திருப்பேன் கனவு கண்டு  நீயுறங்...

நெஞ்சம் திறப்போர் காண்குவர்...

நெஞ்சம் திறப்போர் காண்குவர்.... வாழ்த்துகள் எழுத வார்த்தைகள் தேடி புறநானூற்றுப் பாடல்களைப் புரட்டியபோது கண்ணில் பட்டது ஆத்திரையனார் என்ற புலவர் எழுதிய ஒரு பாடல். எந்தை வாழி என்று தொடங்கிய அந்தப் பாடல் மறுபடியும் மறுபடியும் என்னை படிக்கத் தூண்டியது. சங்ககாலப் புலவர்கள் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெற்று செல்வது வழக்கம். அப்படிப்பட்ட பல பாடல்களை நாம் படித்திருக்கிறோம். பரிசில் பெறுவதற்காகப் பாடிய பாடல்களாக இருந்தாலும் தகுதிவாய்ந்த மன்னர்களை மட்டுமே பாடும் பண்பு புலவர்களிடம் இருந்தது என்பது பாடப்பட்ட அரசர்களைப் பற்றிச் சொல்லப்படும் செய்திகளிலிருந்து நாம் அறிகிறோம்.  இங்கே  புலவர்  ஒருவர் அரசனைப் பற்றி வாழ்த்திப் பாடி இருக்கிறார். மன்னன் பெயரைப் பாடலின் முதல் வரியிலேயே சொல்லிவிட்டார். பாடியவர் யார் என்று அறிய வேண்டாமா? கள்ளில் ஆத்திரையனார் என்பவர்தான் ஆதனுங்கன் என்ற மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர். ஆத்திரையனாருக்கு மன்னன் ஆதனுங்கன்மீது பேரன்பு உண்டு. அந்த அன்பை கவியாக்கி மன்னன் முன் படைக்கிறார். பாடல் மன்னனுக்காக.... பாடலின்  நயம் நமக்காக..... " எந்தை வாழி ஆதனுங்க!என் நெஞ...

அம்மா

அம்மா...! இந்தச் சொல்தான் எத்துணை இனிமை! முதலும் முடிவுமாய் நம்மோடு பயணமாகும் இந்தச் சொல்லை எத்தனை நாள் எத்தனை இடங்களில்  உச்சரித்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? ஓராயிராம் முறை.... இல்லை....இல்லை . ஒரு கோடி முறை.... ம்கூம்.... எண்ண முடியாத நாட்கள்? அதுவும் இல்லை.  ஒருநாளும் இல்லை. அம்மா என்று ஒருநாளும் நான் அழைத்ததில்லை. என்ன அம்மா என்று அழைத்ததில்லையா? அம்மா என்று அழைக்காத உயிரில்லையே! இங்கே அம்மா என்று அழைக்காத ஓர் உயிருள்ளதே! அம்மா.....அம்மா.... நீ சுமந்த பிள்ளை பொய் சொல்லும் கிள்ளை என்று புலம்பணும்போல் இருக்கிறதல்லவா! பொய்யுமில்லை புரட்டுமில்லை மெய்யாலுமே அதுதாங்க உண்மை உண்மையா? நம்பமுடியவில்லை...வில்லை. அதுதானே உங்கள் உள்ளத்தின் ஒலி. என் காதுவரை கேட்குதுங்க.... நான் ஒருமுறைகூட அம்மா என்று கூப்பிட்டதில்லை.  ஏன்? அம்மா என்றால் உங்களுக்குப் பிடிக்காதா என்பீர்கள்? அம்மா என்றால் பிடிக்காதோர் உலகில் உளரோ?  அம்மா என்று கூப்பிட்டதில்லை என்கிறீர்கள்.  பிடிக்கும் என்கிறீர்கள்....  ஒரே குழப்பமாக இருக்கிறதில்லையா?   இந்தக் குழப்பம்தாங்க நான் அம்மா என்று கூப...

ஏழு எழுபது முறை

ஏழு எழுபது முறை .சார்..போஸ்ட்....என்ற போஸ்ட்மேனின் சத்தம்   கேட்டு வாசலுக்கு ஓடிவந்தேன்.           போஸ்ட்மேன் கவரைக் கையில் கொடுத்து விட்டுத்  திரும்பு முன்னே வீட்டுக்குள் துள்ளிக் குதித்து ஓடிப்போய் அம்மா முன் நின்றேன்.   "அம்மா... எனக்கு வேலை கிடச்சிருக்கு..." " எங்க..எங்க... காட்டு" ஓடி வந்து கையில்  இருந்த கவரைப் பிடித்து இழுத்தாள் தங்கை. "போ... ...போ ...அம்மா...வான்னா..." சத்தம் போட்டபடியே அம்மா இருக்கும் இடத்திற்கு வந்தேன். " ஏன் கத்துற... முதலாவது கவரை  பிரிச்சிப் பாரு...அதற்குமுன் எதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுரா...." சாதாரணமாகச் சொல்லிவிட்டு கடந்துபோனார் அம்மா. "வா ...வா.. எங்கே போற.....என் கிட்ட இரு." அம்மாவை வலுக்கட்டாயமாக இழுத்து பக்கத்தில் அமர்த்தி வைத்துவிட்டுக்  கவரைப் பிரித்தேன்.   அப்படியே தூக்கிவாரிப் போட்டது.   "ஆ....என்ன இது ....இன்டர்வியூக்கு  வரச் சொல்லி இருக்கு" " எங்கிருந்து.. வந்திருக்குது.... அதைச் சொல்லு முதல்ல" முந்திரிக்கொட்டையாட்டும் முன்னே வந்து நின்று கேள்வி கேட்டாள் தங்கை. "திருந...

நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம்

நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம்.... உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்" என்பார்கள். நண்பன் எப்படியோ அப்படித்தான் அவன் சேர்க்கையும் இருக்கும் . இதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். நட்பு யாரோடு அமையும்? என்னென்ன காரணங்களுக்காக அமையும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லலாம். உதவிக்காக...பணத்துக்காக.... ஒரே கருத்து இருப்பதற்காக..... என்று மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் அதிகப்படியான வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்றால் ஒத்திசைவு அதாவது ஒத்தக் கருத்துகொண்டோர்  மாட்டு மட்டுமே நட்பு அமையும் என்பதாகத்தான்  இருக்கும். எப்போதுமே ஒத்த குணத்தாரோடு மட்டுமே சேர்க்கை ஏற்படும். இது இயல்பாக அமையும் ஒரு செயல் என்றுதான் சொல்லவேண்டும். மூடனோடு அறிவாளி கைகோர்த்துச் சென்றால் பார்ப்பவருக்கே வேடிக்கையாக இருக்கும். ஒரு புதுமை நடைபெறுவது போல வினோதமாகப் பார்ப்போம். ஒத்திசைவு இருந்தால் நாட்டமும் ஈர்ப்பும் தானாய் நிகழும். தேனீக்களுக்குத் தேன் இருக்கும் இடம்தான் விருப்பமாக இருக்கும். வண்டுகளுக்கு மலர் மீதுதான்  ஈர்ப்பு உண்டு. இவை எல்லாம் பயன்...

தவறவிட்ட தருணங்கள்

Image
தவறவிட்ட தருணங்கள்  மழை பெய்ததும் கலப்பையை எடுத்துச்  செல்லாத உழவன் படிக்க வேண்டிய நேரத்தில்  படிக்காது புத்தகத்தின் மீது தலை வைத்து தூங்கும் மாணவன் வேலையின்போது சிரத்தை எடுத்துக் கொள்ளாத வேலைக்காரன் இளமையில் விளையாட வேண்டிய விளையாட்டைத் தவறவிட்ட இளைஞன் உடலும் உள்ளமும் உறுதியாக இருக்கும்போது உழைக்கத் தயங்கும் மனிதன் சோம்பேறி பணம் புரளும் போது சேமிக்கத் தவறியவர்கள் இவர்கள் எல்லாம் தங்களுக்குக் கிடைத்த நல்ல தருணத்தைத் தவற விட்டவர்கள்.    இவர்கள் மட்டுமல்ல... இன்னும் நிறையபேர் வெவ்வேறு வழிகளில் நமக்கு வரவிருந்த  வாய்ப்பைத் தவறவிட்டவர்களாகத்தான் இருக்கிறோம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும்  ஏதோ ஒன்றைத் தவறவிட்ட தருணம் கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும். அதை நினைத்து நினைத்து நித்தம் நித்தம் வருந்திய காலம் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் இழந்தது போன்ற விரக்தி இனி எனக்கு நல்லதே நடக்காதா என எண்ணி எண்ணி புலம்பல் இப்படித்தான் பலருடைய வாழ்க்கைக்  கடந்திருக்கும். இளமையில் காதலைச் சொல்ல முடியாமல் தவறவிட்டுவிட்டு  இன்றுவரை தவித்துக் கொண்டிருப்பவர்கள் நிற...