Posts

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

பிறந்தநாள் வாழ்த்து பால்நிலா வானுலா வந்து பிறந்தநாள் வாழ்த்துப் பாடலா கைபேசி கலகலவெனச் சிரித்து ஒத்தைச் சொல்லால் ஓயா இசையில் நனைத்தலா இறையருள் இல்லம் நிறைத்தலால் இன்பம் நிரந்தர குடியுரிமை வாங்கலா நலமும் வளமும் கூட்டாட்சி நடத்தலால் நிலைத்த புகழ் உனக்குரித்தாதலா கண்டுலா வந்திட விழைதலால் என்றன் வாழ்த்துலா வந்தது இன்பச் சிற்றுலா வாழ்க...பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு  வளர்பிறையன்ன வளர்நிலை கண்டு !                      - செல்வபாய் ஜெயராஜ் 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்  "பசி ருசி அறியாது "என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.       "பசித்தபின் புசி "என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.      இது என்ன பசி வந்தால் பத்தும் பறந்து போகும்?       அது என்ன பத்து ? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா!       கொஞ்சம் பொறுங்கள். பசியாறிவிட்டு வருகிறேன்.       அதாவது ஔவையின் பாடலைப் படித்து அறிவுப் பசி ஆற்றிவிட்டு வருகிறேன் என்று சொன்னேன். அப்பாடா... என்ன இது? நானொன்று நினைக்க இந்த ஔவை வேறொன்று சொல்கிறாரே! நான் என்ன நினைத்தேன் என்றால்  பசி வந்தால் சட்டி பத்த இருக்கும் பருக்கையையும் வழித்து உருட்டி உள்ளே உள்ளே தள்ளி விடுவோம் இல்லையா? அதைத்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஔவை என்னடா வென்றால் வேறு ஒரு பதிலைச் சொல்கிறார்.       பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்கான பதிலை ஔவையிடமிருந்து வாங்கி வந்திருக்கிறேன். கேளுங்கள். " மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை    தானம் தவம் உயர்...

தாயோடு அறுசுவை போம்

தாயோடு அறுசுவை போம்  " தாயில் சிறந்த கோவிலுமில்லை  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"  பெற்றோருக்கு   கணக்குப் போட்டு மாதம் ஒரு மகன் என்று கஞ்சி ஊற்றும் பிள்ளைகள் உள்ள காலம் இது.        கணக்குப் போடாமல் தருபவள் தாய்.        பங்குபோட்டுக் கொடுத்தாலும் தன் பங்கையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு மிச்சம் இருப்பதை உண்பவள் தாய்.       தான் உண்ணும் உணவு கஞ்சியாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு சுவையாக சமைத்துக் கொடுத்து இன்பம் காண்பாள்.       இப்படி அம்மாவின் கையால் சுவையாக சாப்பிட்டு பழகிப் போய்விட்டோம்.சுவைக்கு அடிமையாகிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.         சுவை என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒன்று.         சுவை இல்லாமல் சப்பென்று இருக்கும் உணவை உண்ண யாரும் விரும்புவதில்லை.      பசி ருசி அறியாது.      கொடுத்ததைச் சாப்...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமிகு :செ.செல்லப்பா                     ஆசிரியர்,                     சீத்தா கேம்ப்,                      மும்பை. முட்டி நிற்கும் மஞ்சு தனை தொட்டு விளையாடும் காற்றாலை எட்டு நிற்போரையும் ஏந்தி முகம்  பார்க்க வைக்கும் ஆவரை குளத்தில் கட்டழகு செல்லத்துரை இணையர் பெற்றெடுத்த தலைமகன் செல்லப்பா ஆசிரியர்  வட்டமிட்டு மணமகள் லதாவைத் தொட்டநாள்  திட்டமிட்டு இறைவன் வகுத்தநாள்! ஆஸ்திக்கும் ஆசைக்குமாய்ப் பிள்ளைகள் அன்புக்குக் கிடைத்தப் பரிசுகள்  வானும் நிலவும் போல வாய்த்த திந்த இனிய இல்வாழ்க்கை தேனினும் இனிய திவ்விய நாமத்தைத் தீர்க்கமாய்ப் பற்றி அருட்பணி செய்தலால் வானாதி வானவராம் வல்ல நல்நாதர் வரமாய்த் தந்தணி செய்த நல்வாழ்க்கை! வாணிக்கு வார்த்தையால் தோரணங்கட்டி மணியாம் மாணவரணிகூட்டி அறப்பணி செய்தீர் பணிசெய் இடமெங்கும் பேச்சுக்கலை வளர்த்தீர் பேரணி திரட்டி பெரும்பெயர்ச் சேர்த்தீர் அறப்பணி பொதுப்ப...

அப்பாவின் வலி

அப்பாவின் வலி எட்டாவதும் பொட்டப் பிள்ளை பிறந்திருக்கு....பிள்ளை மூக்கும் முழியும் சரியா அப்பாவைப் போலவே இருக்கு...." வீட்டுக் கதவை மெல்லத் திறந்து கதவிடுக்கு வழியாக தகவல் சொல்லிவிட்டு போனார் மருத்துவச்சி. அதைக் கேட்டதும் வெளியில் நின்றிருந்த அனைவர் முகத்திலும் ஒரு சோகம் அப்படிக் கொண்டது. அப்பா பதிலுக்கு ஒரு வரிகூட பேசாமல் அப்படியே நின்றார். அப்படியே ஒரு மாதம் ஓடி போயிற்று. அடுத்த ஒருமாதம் அப்பா சிடுசிடு என்று நின்றார். எதற்கெடுத்தாலும் கோபம். அம்மா இது எதையும் கண்டு கொள்வதே இல்லை. ஒரு மாதத்திற்குள் தோட்ட வேலைக்குச் சென்று விட்டார். போகும்போது தங்கச்சியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள் என்று என் கையில் தூக்கித் தந்து விட்டுச் போய்விட்டார். ஒரு டம்ளர் போல பசும்பால் சட்டியில் இருக்கு .கூட கொஞ்சம் தண்ணீர் ஊற்றி காச்சி சூடு ஆறியதும் சங்குல ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக கொடு. பத்திரம்....விக்கிறாம  மெதுவா கொடுக்கணும் என்று பக்குவம் சொல்லிதந்துவிட்டுப் போய் விட்டார். இப்போ நான்தான் இந்த குழந்தைக்குப் பொறுப்பு.இதற்காவே எட்டாவது படித்துக் கொண்டிருந்த என்னை பிள்ளையைப் பார்க்கணும் என்று சொல்லி பள்ளிக்...

ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி யாவது உண்மையா?

ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி யாவான்  ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பது உண்மையா? உண்மைதாங்க...ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் அரசன் என்ன? யாராக இருந்தாலும் ஆண்டிதான். தங்கம் என்ன வாங்கும்படியாகவா இருக்கிறது? என்ற உங்கள் புலம்பல் என் காதுகளில் விழுகிறது. ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து, சீர் செனத்தி என்று ஒவ்வொவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து முடித்து எழும்பும்முன் கூன் குறுக்கு எல்லாம் ஒடிந்தே போய்விடும். அரசனாலேயே இதனை எளிதாகச் செய்துவிட முடியாது. சாதாரண எளிய மக்களால் எப்படிச் செய்துவிட முடியும் ?  கையில் இருக்கும் ஊறுனது பாருனது எல்லாம் கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாகப் போக வேண்டியதுதான். இப்படி எத்தனை குடும்பங்களைப் பார்த்திருப்போம். அதனால்தான் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழி சொல்லப்பட்டிருக்கும். இதுதானே உங்கள் நினைவில் ஓடிக்கொண்டிருக்கும். உங்கள் நினைவில் என்ன என் நினைவிலும் அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பழமொழிக்கான பொருள் நாம் நினைப்பதுபோல் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் ஆண்டியாகிவிடுவோம் என்பதாகத்தான் இருக்குமோ?...

காணாமல் போன கடிதங்கள்

காணாமல் போன கடிதங்கள்  செப்டம்பர் முதல் நாள். உலக கடிதம் எழுதும் தினம். கடிதம் எழுதுவது... கடிதம் வருமா என்று காத்திருப்பது எல்லாம் ஓர் அலாதியான இன்பம் என்று தான் சொல்ல வேண்டும். கடிதமா?எப்படி இருக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். இன்லாண்ட் லட்டர்,போஸ்ட் கார்டு, எல்லாம் காணாமல் போய்விட்டது. அனைவர் கைகளிலும் கைபேசி. நினைத்த வேளையில்  வாட்சப்பில் மெசேஜ் ,கைபேசியில் சுக துக்கங்கள்  விசாரிப்பு என்று மிக நெருங்கி  வந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால் கடிதம் எழுதும்போது இருந்த எதிர்பார்ப்பு, நெகிழ்ச்சி, மகிழ்ச்சி இன்று காணாமல் போய்விட்டது  என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக்காலம் அது ஒரு கனாக்காலம்... கிராமப்புறங்களில்  ஒரு வீட்டுக்குத் தபால்காரர் வந்தால்  அவர் சைக்கிள் பின்னால்  பத்து பிள்ளைகள் நடந்து வரும். யானை வரும் பின்னே மணியோசை  வரும் முன்னே என்பதுபோல ஒன்றிரண்டு சிறுவர்கள் பாட்டியோ...  பாட்டியோ... பாட்டியோ.... உங்கள் வீட்டிற்கு  லட்டர் வந்துருக்கு என்று  மூச்சிரைக்க ஓடிவந்து  சொல்வார்கள். அந்த வீட்டுப் பாட்டிக்க...