Posts

உப்புக்கும் புளிக்கும் பாடலா...

Image
உப்புக்கும் புளிக்கும் பாடலா? கூழுக்குப் பாடியவரைத் தெரியும். உப்புக்கும் புளிக்கும் பாடியவரைத் தெரியுமா? யார் அந்தப் புலவர்? புலமை இருக்கும் இடத்தில் வறுமை இருக்கத்தான் செய்யும் . வயிற்றுக்காகத்தானே இந்தப்  பாடலும் ஓய்வில்லா ஓட்டமும். வயிற்றுப்பசி இல்லையேல்...?  வாழ்க்கைச் சக்கரம் ஓட வேண்டும். ஓட்ட வேண்டும். அதற்காக ஓடியாடி உழைக்க வேண்டும். இது உழைப்பவர்களுக்குச் சரியாக இருக்கும். ஆனால் புலவர்களுக்கு? ஏன் அவர்கள் உழைப்பாளிகள் இல்லையா? அவர்களும் உழைப்பாளிகள் தான். தங்கள் வறுமை நீங்க வள்ளல்களை நாடி, தேடித் தேடிப் போய் பாடல்கள் பாடி பொருட்களைப் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்கள். அப்படிப்பட்ட புலவர்கள் வரிசையில் இங்கே ஒருவர் பொருளுக்காக மட்டுமல்ல....உப்புக்கும்  பாடுவேன் என்கிறார். அத்தோடு நிறுத்திவிட வில்லை. புளிக்கும் பாடுவேன் என்று ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கிறார். கூழாயிருந்தாலும் சற்று உப்பு இருந்தால்தானே குடிக்க முடியும். அதனால் அப்படி சொல்லி இருப்பாரோ? சொல்லியவர் யார் அறிந்து விடுவோம் வாருங்கள். அப்படி என்ன வறுமை? பாடுபவரிடம்...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி சித்ரா பாலசுப்பிரமணியம் ஆசிரியை, கே.டி.காய்க்வாட் தமிழும் பள்ளி சயான்-கோலிவாடா மும்பை  சேலத்து மாங்கனிச் சுவையானவளைச் சீர்மிகு நரசிம்மன் லட்சுமி இணை வளைகரம் சுமந்தவளை மாதவளை மன்னன் பாலசுப்பிரமணியம் மனையானவளை ஆயிழை சித்ரா நற்பருவ மாமழை! ஆரே காலனியில் பெய்த முதல்மழை மாதுங்கா முலுண்ட் கோலிவாடா மாணவர் வளை மாயம் கற்றவளை பேரருள் பெருமதியானவளை மாணிழை சித்ரா கற்பவர்க்கு மாமழை! நினைவுவளை  நிறைகுடமானவளை புரிந்தவரைப் புடமிடச்செய்தவளை உயர்ந்தவளை உள்ளம் கவர்ந்தவளை உண்மைவளை நற்பண்பானவளை தேன்குவளை சித்ரா பண்பு நிறைமழை! தமிழானவளை தமிழாய்ந்தவளை தக்கவரைத் தரமாக்கும்வளை தளராதவளை தனித்துவமானவளை தூதுவளை போலானவளை சேயிழை சித்ரா தமிழுக்கு நல்மழை! கனிந்தவளை கல்வி மொழிந்தவளை அன்னவளை அன்பு தந்தவளை புன்னகையிழை பொலிமுகமானவளை என்னவளை  என்நெஞ்சில் நிறைந்தவளை பூவிழை சித்ரா எமக்குப் பூமழை! ஓதும்பணி நிறைவானவளை ஓர்ந்துநலம் சூழ்ந்தவளை ஒத்திருகை தொழுதவளை வாயார வாழ்த்துதும் யாம் இப்பொன்மகளை நேரிழை சித்ரா என்றென்றும் மழை!

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி: ஜூலியட் ராஜன்                    ஆசிரியை                    கே. சி. மாதுங்கா தமிழ்ப்பள்ளி                     மும்பை- 19 நாள் :29.06.2024 கத்தும் கடல் கடந்த புகழாறு கன்னிமாதா கருணைக்கு நிகர் யாரு பண்டாரகுளம் சந்தானமரியான் ராஜம்மாள் தேனூர செவியோதி வைத்தார் ஜூலியட்  என்ற நற்பேரு ! களிகை ராஜனோடு இணைந்த இந்தத் துணையாறு இராஜாங்கம் நடத்திப் பெற்றதிரு பொன்னாறு அகவை இவருக்கு என்றும் பதினாறு - அதுதான்  ஆண்டவன் கட்டளை அதற்கு மறுப்பேது? ஆர் எஸ் நகரில் சிற்றடி பதித்த சிற்றாறு ஆரேகாலனி கே.டி காய்க்வாட்  எங்கும் தெண்ணீராறு ஐயாறு ஆண்டுகள் மாதுங்காவில் நிறைவான வரலாறு ஐயமில்லை  இவர் மாநகராட்சித் தமிழ்ப்பேராறு! கற்பித்தலில் புதுமை அள்ளிவரும் புத்தாறு கற்பவர்க...

இல்லாள் அகத்திருக்க இல்லாதது உண்டோ

இல்லாள் அகத்திருக்க... அனைவருக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக  இருக்கும்.வீடு இல்லாதவர்களுக்கு வீடு வேண்டும் என்று ஆசை. வீடு கிடைத்துவிட்டால் வீட்டைச் சுற்றி தென்னைமரங்கள் இருந்திடல் வேண்டும் என்று ஆசை. தென்னை மரங்கள் இருந்துவிட்டால் போதுமா?  அதில் குலைக்குலையாக இளநீர் காய்த்துத் தொங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதுவும் நடந்துவிட்டது. இப்போது முற்றத்தில் முத்துச் சுடரொளி பரப்பி நிலவு  வந்து எட்டிப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை. இரவினில் நிலவு வந்து போயிற்று. இனி அதிகாலையில் குயில்கள் கூடி வந்து கத்திச் செல்ல வேண்டும் என்று ஆசை. குயில்கள் கத்தினால் மட்டும் போதுமா? கூடவே பூந்தென்றல் காற்று வர வேண்டாமா? தென்றல் வந்து காதோடு கவிபாடிச் செல்ல  வேண்டும் என்று ஆசை. இத்தனை ரம்மியமான சூழலில் அழகானவீடு இருந்தால் மட்டும் போதுமா?  இல்லத்தில் இருந்து ஆட்சி செய்ய ஒரு பத்தினிப் பெண் வேண்டாமா? அவள் இல்லாமலா?  இல்லம் என்று இருந்தால் அதில் இல்லாள் இருந்தால்தானே மகிழ்ச்சி. இப்படி ஒரு ஆசை யாருக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். நம்ம பாரதிய...

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து  நல்வழி ஔவையாரால் பாடப்பட்ட  நீதி நூல். மக்களை நல்வழிப்படுத்த அக்கால புலவர்கள் மெனக்கெட்டிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ நமக்குப் பாட வருகிறது பாடிவிட்டுப் போவோமே என்று கடமைக்காக ஏனோதானோவென்று எழுதப்பட்டவை அல்ல. பார்த்துப் பார்த்து  செதுக்கி வடிவமைக்கப்பட்டவை. மனங்களைப் பண்படுத்த உலக எதார்த்தத்தைச் சொல்லித் தர விழிப்புணர்வு ஏற்படுத்த எச்சரிக்கை செய்து கவனமாக இருக்க வைக்க நம் புலவர்களைத் தவிர கரிசனம் மிக்க இன்னொருவர் உலகில் இருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஒருவரா இருவரா அனைத்துப் புலவர்கள் எழுதிய பாடல்களும் ஏதோ ஒரு வகையில் நம் மனதிற்கு நெருக்கமாக அமைந்துவிடுகிறது. நம்மை நல்வழிப் படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது. அருமையான நூல்களைப் படைத்த புலவர்கள் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஔவையார் என்றால் மிகையாகாது. ஔவை எழுதிய ஆத்திசூடியைப் படிக்காமல் யாரும் அரிச்சுவடு கற்றிருக்க முடியாது. அதுபோல ஔவையார் நீதிநூல்களைக் கற்றிடாமல் கடந்திட முடியுமா? கற்றவர் என்று சொல்லிடத்தான் முடியுமா?  உங்களுக்காக ஔவையின் நல்வழி பாடல்களிலிருந்து நா...

அன்புள்ளவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி

அன்புள்ளவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி ? எதற்கெடுத்தாலும் நான் அன்பானவன்  நான் அன்பானவள் என்று சொல்கிறவர்களைப் பார்த்து ...நிஜமாகவா ? என்ற ஒரு சொல்லை மட்டும் கேட்டுப் பாருங்கள். அப்போது  அவர்கள் முகம் ஒருமாதிரியாக  மாறும் பாருங்க ...அதன் பிறகு ஒருபோதும் அவனோ ..அவளோ அந்தச் சொல்லை உங்களிடம் சொல்லமாட்டார்கள். ஏய்....சந்தேகப்பட்டுட்டாம்பா. இவனிடம் கொஞ்சம் உஷாராக இருக்கணும் என்று ஒதுங்கிப்  போய்விடுவார்கள். என்மீது நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை உங்கள் நண்பனிடமோ நண்பியிடமோ கேட்டுப் பார்த்து நான் சொல்வது உண்மையா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 99 விழுக்காடு இதுதாங்க உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒரு விழுக்காடு விதிவிலக்கு மனிதர்கள் இருப்பார்கள். அவர்களை விட்டுவிடுவோம். அன்பு...அன்பு..அன்பு என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பக்கம் திரும்புவோம். அன்பு வாயால் பேசுவதோடு நில்லாது. செயலில் அதை உறுதி செய்யும். செயலில் ஒன்றுமே இல்லையா?  அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். அப்படியானால் ஒருவர் அன்பானவர்  என்பதை எப்படித்தான்  கண்டு கொள்வது...

என் அப்பா

    என் அப்பா முந்நூறு நாள் சுமந்து முழு உருவம் தந்து  தாலசைத்துத்  தமிழ்ப் பாலூட்டி   எ ட்ட நிற்கும் நிலவினை   கட்டி இழுத்து வந்து   கட்டில் அருகில் வைத்து   கதைகள் பல பேசி   காதோடு உறவுகூறி   கன்னம் உரசி   கன்னல் மொழி கூறி   கலையாத கவினோடு   நிறைந்த உணர்வோடு   நம்மில் கலந்திருப்பவர்  அம்மா . அம்மாவின் முதல் அறிமுகம்   என் அப்பா பெண்  எந்தன் குரல் கேட்டு அப்பாவும் முகம் சுழித்து முத்தாய்ப்பாய் யாத்திரைக்கு நேர்த்தியாய்    வழி ஒன்று சொல்ல.... அடங்காத நானும் ஓயா குரல் குரலெழுப்பி உறங்கவிடாது ஊறு செய்ய  தாங்காது இனி என்றெண்ணி குரல் நிறுத்தம் செய்ய  காந்தியார் வழியில் ஆட்டுப்பால் அருந்திட வைத்து என் இறுதி யாத்திரைக்குத் தற்காலிக தடையிட்டவர் அப்பா  அந்திப்பொழுதினிலும் அரசியல் அரட்டையில் பங்கு கொள்ளவரும் பெரியோர் முன்னிலையில் தந்தியின் உலக அரசியலை உரக்க உச்சரிக்க வைத்து வாசிப்புப் பயிற்சிக்கு வாய்க்கால் அமைத்துத்  தந்தவர் அப்பா! வெள்ளந்திய...