Posts

உலக மகளிர் தினம்

உலக மகளிர் தினம்  மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்ஸ்பயர் இன்க்ளூஷன் இந்த 2024க்கான தீமாக  அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பெண்கள் முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துதல் மற்றும் விரைவுப்படுத்துதல். இந்த நாளில் வாழ்த்துகள்  பரிமாறப்படும். கொண்டாட்டங்கள் ,போட்டிகள்  பட்டிமன்றங்கள் என்று ஊடகங்கள் எங்கும்  பெண்கள் நிகழ்ச்சிகள் களைகட்டும். நாளிதழ்கள், வார இதழ்கள்,மாத இதழ்கள் அனைத்தும் சாதனைப் பெண்களின் கட்டுரைகளால் நிறைக்கப்பட்டிருக்கும். தன்னார்வ அமைப்புகளும் அரசும் சாதனைப் பெண்களைக் கண்டறிந்து விருதுகள்  கொடுத்து மரியாதை செய்யும். இவற்றை எல்லாம் பார்க்கும் நாம்  அடேங்கப்பா...பெண்களுக்கு இவ்வளவு அங்கீகாரமா  என்று அண்ணாந்து பார்த்து மலைத்து நிற்போம். நாமும் இப்படி ஒரு சாதனை புரிந்தால் உலகம் நம்மைக் கொண்டாடும் என்று கனவு காண வைக்கும். நாளைய சாதனையாளர் நான்தான் என்று கனவில் மிதக்க வைக்கும். ஒருவகையில் இந்தக் கொண்டாட்டம் நம்மை ஊக்குவிப்பதாகவே இருக்கும். இருக்க வேண்டும். அப்படி ஊக்குவிப்பதாக இர...

ஒழுங்கும் ஒழுக்கமும்

ஒழுங்கும் ஒழுக்கமும்  " ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்  உயிரினும் ஓம்பப் படும் " என்றார் வள்ளுவர்.  அதாவது ஒழுக்கம் உயர்வைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரினும் மேலாக  பேணப்படும். உயிரினும் மேலானது ஒழுக்கம். அதனால்தான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுகிறோம். அடுத்து ஒழுக்கம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒழுக்கம் என்பது ஒரு நியதிக்கு உட்பட்டு பண்போடு வாழ்வது. நற்பண்பு இருந்தால் நல்லொழுக்கம் தானாக வந்து குடியேறிவிடும். ஒழுக்கத்திற்கும் ஒழுங்கிற்கும் என்ன தொடர்பு? அனைவருக்கும் ஒழுங்கின்மீது அலாதி பிரியம் உண்டு. ஒழுங்காக இருக்கும் பொருள் தனிக்கவனம் பெரும். ஆனால் ஒழுங்காக வைப்பதில்தான் சிக்கல். யாராவது ஒழுங்குபடுத்தித் தரமாட்டார்களா    என்று நினைப்போம்.   வீட்டிற்கு யாராவது வந்தால் கண்கள்    முதன் முதலாக வீட்டில் எல்லாம் சரியாக    வைக்கப்பட்டிருக்கிறதா  என்றுதான் பார்க்கும்.   பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக   கிடந்தால் முதன் முதலாக அவற்றை சரிபடுத்திவிட்டு...

யார் அறிவாளி

Image
யார் அறிவாளி  கூடு கட்டுவதில் தூக்கணாங்குருவிக்கு  இணையான அறிவார்ந்த பறவை  வேறொன்றும் இல்லை. பின்னல் போன்ற அதன் கூடு  கலையார்வம் கொண்டோரும்  வியக்கும் வண்ணம் மிகவும்  நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல . தன் கூட்டிற்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக கூட்டின் உள்பக்கம் முழுவதும் சேற்றை அள்ளிப் பூசி , சேறு காய்வதற்கு முன்பாக  மின்மினி பூச்சிகளைக் கொண்டுவந்து  சேற்றில் ஒட்டி வைத்துவிடுமாம். இதன் மூலம் கூட்டிற்கு நல்ல வெளிச்சம்  கிடைக்கும். இந்தச் சின்ன பறவைக்குள் இத்தனை அறிவா? வியப்பாக இருக்கிறதல்லவா!  தூக்கணாங்குருவியைப் போன்று   அனைவருக்கும் அறிவார்ந்த செயல்களில்   ஈடுபட வேண்டும் என்று ஆசைதான்.  ஆனால் நடக்கிற காரியமா என்ன?  அனைவருக்கும் அறிவின் மீது ஒரு   தாகம் உண்டு.  யாருமே தன்னை அறிவற்றவர் என்று  ஒத்துக் கொள்வதில்லை.  யாராவது தப்பித்தவறி முட்டாள்  என்று சொல்லிவிட்டால் போதும் ,  கோபம் தலைக்கு ஏறிவிடும் . என்னை முட்டாள் என்று சொல்லிவிட்டான்... நான் மு...

நீரளவே ஆகுமாம் நீராம்பல்...

Image
நீரளவே ஆகுமாம் நீராம்பல்... ஔவை என்றதும் கையில் கோலூன்றிய பாட்டி  ஒருவர் கண்முன் வந்து நிற்பார்.  முதல் வகுப்பில் படித்த" அறம் செய விரும்பு'" " ஆறுவது சினம்"  ...எல்லாம் மனதிற்குள் வரிசை கட்டி நின்று எட்டிப் பார்க்கும். "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று மனப்பாடம் செய்த பாடல் எல்லாம் ஓடி வந்து மறுபடியும் ஒருமுறை மனதிற்குள் ஒப்பித்துப் பார்க்க வைக்கும். மறுபடி  மறுபடி எனைப்படி எனத் தூண்ட வைக்கும். ஔவை என்ற இந்தப் பாட்டிக்குள் எங்கிருந்து வந்தது  இத்தனை பாடும் திறன் என வியக்க வைக்கும். இப்படி பார்த்து, படித்து மகிழ்ந்த பாடல்கள் எத்தனையோ எத்தனையோ உள்ளன. மூதுரையில் ஔவை எழுதிய முப்பது  பாடல்களும் நல்ல விழுமியங்களை சொல்லித் தருவனவாக இருக்கும். மூதுரைக்கு வாக்குண்டாம் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஔவையின் இந்த வாக்கினை அதாவது பாடல்களைப் படிக்கப் படிக்க  பாடலுக்குள் இருக்கும் சிலநுட்பமான உண்மைகள் தெரியவரும். அவற்றுள் மறுபடியும் என்னைப் படிக்க வைத்து , பாடலின் நுட்பத்தை அறிய வைத்து மகிழ்வித்தப் பாடல் இ...

மரங்களின் தாய் திம்மக்கா

Image
திம்மக்கா  "நாளிதழைத் திறந்தாலே லஞ்சம் ஊழல், கொலை, கொள்ளை, அப்பப்பா ..."சலித்தபடி செய்தித்தாளைக் கையில் கொடுத்தாள் பக்கத்து வீட்டுப்பெண் மல்லிகா. "அதை எல்லாம் தெரிவிப்பதற்குத்தானே செய்தித்தாள் ....வேறு என்ன செய்தியை எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டேன். "ஒரு நல்ல செய்தியாவது  சொல்லணுமில்லையா? நாட்டில் நல்லதே நடக்கலியா? " "ஏன் நடக்கல?  நாளும் நல்லது  நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதையும் செய்தித்தாள்கள் சொல்வதற்கு மறப்பதில்லை. உன்  கண்களுக்குத்தான் அது தெரியவில்லை" "ஏன் ? நான் என்ன குருடா?" "அப்படிச்சொல்லவில்லை.நீ செய்தித்தாளைச் சரியாகப் படிக்கவில்லை என்கிறேன்" "முதல் பக்கத்தில் இருந்து  கடைசி பக்கம்வரை ஒன்றுவிடாமல் வாசிப்பேன்." "அப்படிப் படித்துமா நல்ல செய்திகள் கண்ணில்  தெரியவில்லை?.." " பெரிய எழுத்தில்  போட்டால்தானே கண்ணுக்குப் பளிச்சென்று தெரியும். இந்த பத்திரிகைக்காரங்க நல்லகாரியத்தை பெருசா  போடமாட்டேங்கிறாங்க "என்று பொங்கினாள் மல்லிகா. "ரொம்ப பொங்காத ... நீ செய்திகளைச் சரியாக பட...

நில்லாய் நெடுஞ்சுவரே

நில்லாய் நெடுஞ்சுவரே  "ஒரு சொல் வெல்லும்; ஒருசொல் கொல்லும் "என்று சொல்வார்கள். சொல்லுக்கு அவ்வளவு பெரிய ஆற்றல் உண்டு. அதுவும் புலவர்களின் சொல்லுக்குப் பேராற்றல் உண்டு. அதனால்தான் காளமேகம் மண்மாரிப் பொழியட்டும் என்றதும் மண்மாரிப் பொழிந்ததாகப் படித்திருக்கிறோம். புலவர்கள் அறம்பாடி அழித்த  வரலாறுகளும் உண்டு. இங்கு ஒருவர் தன் சொல்லால் நெடுஞ்சுவரேயே நிற்க வைத்து விட்டாராம். யாரப்பா அந்தப் பேராற்றலுக்குக்குரிய பெரும்புலவர் என்று அறிய ஆவலாக உள்ளதல்லவா? சோழ மன்னன்னோடு ஏற்பட்ட மாறுபாட்டால் மன்னனும் நீயோ வளநாடு முன்னதோ உன்னை நினைத்தோ தமிழை யோதினேன் என்று கோபமாகப் பேசிவிட்டு சோழ நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் கம்பர். ஏதோ கோபத்தில் வெளியே வந்துவிட்டார். வந்த பின்னர்தான் எங்கே செல்வது? யாரிடம் போய் நிற்பது? என்று கம்பருக்கு ஒன்றும் புரியவில்லை. கால் போன போக்கில் நடக்கிறார். எவ்வளவு தூரம் நடப்பது? இப்போது வயிறு மெதுவாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தது. வயிற்றுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அதற்கு கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன? அதற்காக யாரிடமாவது இரந்து பொரு...

சும்மா

சும்மா...சும்மா... சும்மா  என்ன பாலாமணி அக்கா... வேலை எல்லாம் முடிந்துட்டுதா... சும்மா இருந்தாப்ல இருக்கு... "உனக்கு என்ன மகராசி நீ சும்மா  இருப்பதற்கு என்றே கொடுத்து வைத்தவள்" " ஏன் உனக்கு என்னாயிற்று...  நீயும் சும்மாதானே இருக்கிறாய் ." "சும்மாவா...ஒருமணி நேரம் இந்த வீட்டுல  சும்மா இருக்க விட்டுருவாகளா என்ன " "சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேம்பா... அதுக்குப்போய் ....ஆமா.. உங்க அத்தை சும்மா இருக்காங்களா? " "அவுங்களுக்கென்ன ...சும்மா தின்னுட்டு தின்னுட்டு...சும்மா இருக்க முடியாமல் ஊர்வம்பு  இழுத்துக்கிட்டு இருப்பாங்க..." "நீ சும்மா இருக்க சொல்ல மாட்டியா.." "சும்மா சும்மா...எத்தனை தடவைதான் சொல்றது...கேட்கணுமில்லையா..." "உன் தங்கை ஒருத்தி சும்மா இருந்தாளே... அவள் எப்படி இருக்கிறாள்.." "அவள் வீட்டில் சும்மாதானே இருக்கிறேன். கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போகிறேன் என்றாள். வீட்டில் சும்மாவே இருப்பதற்கு ஏதாவது சும்மா படிச்சுட்டு வரட்டுமே என்று அனுப்பி வைத்தேன்." "சும்மா இருப்பதற்கு அது தேவலதான்.. அப்பட...