Posts

திருநெல்வேலி வட்டார வழக்கு

திருநெல்வேலி வட்டார வழக் கு   திருநெல்வேலி என்றாலே அல்வா. அதுவும் இருட்டுக்கடை அல்லாவுக்கு அடிமைப்பட்டுக் போன நாக்கு வேறு எந்த அல்வாவையும் ருசி பார்க்காது. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீருக்குக்கூட தனி ருசி உண்டு. நெல்லை மக்கள்  பேச்சில் இனிமை இருக்கும். மரியாதையோடு பேசும் பண்பு உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் தனி அடையாளம் இருக்கும். பேசும் பேச்சிலிருந்து இது எந்த வட்டார வழக்குச் சொற்கள் என்பதைச் சொல்லிவிடலாம். பேரைச் சொல்லாமலேயே ஊரைக் கண்டுபிடித்துவிடலாம். திருநெல்வேலி என்றதும் 'ஏல' என்ற சொல் உள்ளேன் ஐயா என்று முந்தி வந்து தலை தூக்கி நிற்கும் அண்மை காலமாக நம் காதுகளில் அடிக்கடி வந்து விழும் ஒரு சொல் 'ஏல ' என்பதுதான். ஏல...போல...வால.... இது எல்லாமே எங்கள் பகுதியில் பேசப்படும் சொற்கள்தான். மறுக்கவில்லை. ஆனால் இந்த ஏல...ஏல...என்பது மட்டும் தொலைக்காட்சியில்  அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல்லாகிவிட்டது. திரைப்படங்களால் இந்தச் சொல் தனிக்கவனம் பெற்று வருகிறது. இதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் உண்மையிலேயே அந்தச் சொல் உண்மையான பொருளில் சொல்லப் படுகிறதா...? அல்லது திசைமாறிப் போகிறதா ?என்று...

செவியிற் சுவையுணரா....

செவியிற் சுவையுணரா... செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் "                               குறள்- 420 செவியிற்-காதினால் கேட்டறியும்  சுவையுணரா - அறிவுச் சுவை அறியாதவர் வாயுணர்வின் -வாயால் உண்ணும்                                   உணவின் சுவை அறியும் மாக்கள் - விலங்குப் பண்பு கொண்ட                      மக்கள் அவியினும் - இறந்தாலும் வாழினும் -வாழ்ந்தாலும் என் - என்ன செவிச்சுவை இல்லாமல் வாயினால் நுகரும்  உணவின் சுவை மட்டும் அறியும் பகுதறிவில்லா மக்கள்  இருந்தாலும் இறந்தாலும்  என்ன பயன்? விளக்கம்: செவிச்சுவை என்பதுசொற்சுவை, பொருட்சுவை என இருவகைப்படும். சொற் சுவை  பொருட்சுவை  இரண்டும் கேட்டு அறியும் சுவையின் பாற்படும். வாயின் சுவை அறுசுவைகளாகும். ஒருவன் செவிச்சுவை அதாவது கேள்வி அறிவு இல்லாதிருக்கிறான். உணவின் சுவை அறியும்...

தமிழ்ப் போட்டி

Image
தமிழ்ப் போட்டி  ஒரு மாலை வேளை. அங்குமிங்கும் உலாவிய சிங்கம் காதுகளில் எங்கிருந்தோ வந்த இனிய பாடல் ஒன்று கேட்க ஆரம்பித்தது. என்னே இனிமை! என்னே இனிமை! மெய்மறந்து அப்படியே நின்றார் காட்டுராசா. "தமிழுக்கு அமுதென்று பேர் -அந்தத்  தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்...." மறுபடியும் மறுபடியும் அந்தப் பாடல் வரிகள் நினைவில் வந்து இனிமை தந்தன. இப்போது சிங்கத்திற்கு காட்டிலுள்ள விலங்குகளின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது என்று அறிய வேண்டும் என்று ஒரு ஆசை. அதனால் காட்டில் வாழும் விலங்குகளுக்கு எல்லாம் ஒரு போட்டி அறிவித்தார் காட்டு ராசா சிங்கம்.          ஆலமரம் போட்டி நடை பெறும் இடமாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் பதினொரு மணிக்கு எல்லா விலங்குகளும ஆலமரத்தடியில் வந்து கூடும்படி  அறிவிப்புக் கொடுக்கப்பட்டது.    அதன்படி  எல்லா விலங்குகளும் வந்து ஆலமரத்தடியில் வந்து கூடின.          சிங்கத்தின் தலைமையில் போட்டி தொடங்கியது.          ஆசி...

நல்லை அல்லை

நல்லை அல்லை  நிலவைப் பார்த்துப் பாடாத புலவர்கள் இல்லை. நிலவின்மீது காதல் கொள்ளாத கண்கள் இல்லை. காதலர்கள் கண்களில் முதலில் தெரிவது நிலவென்னும் அழகு தேவதை தான். அதனை மூடி மறைத்து , வெட்கப்பட வைத்து, எட்டிப் பார்க்க வைத்து , ஓடி ஒளிய வைத்து  முந்நூற்று அறுபது  பாகையிலும் நின்று பார்த்துப் பார்த்து கவிதை எழுதியதை வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். .நிலவு சுடுகிறது என்பார்கள். மகிழ்ந்திருக்கிறோம். நிலவு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறது என்பார்கள். நாமும் கூடவே ஒளிந்து விளையாடியிருப்போம். ஆனால் நிலவைப் பார்த்து நீ நல்லவளே  இல்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கிறீர்களா? யாருங்க நிலவைப் பார்த்து நல்லவள் இல்லை என்று சொல்லுவார்? சொல்லியிருக்காளே.... இங்கு ஒரு பெண்ணே நீ நல்லவள் இல்லை என்று சொல்லியிருக்கிறாளே ஒருவேளை பொறாமையாக இருக்குமோ? பெண்ணுக்குப் பெண் எதிரியாகி விட்டாளோ? ஏன் அப்படிச் சொன்னாள்? எதற்காக நிலவு அவளுக்கு நல்லவள் இல்லாதவள் ஆகிவிட்டாள். அப்படி என்ன குற்றம் கண்டுவிட்டாள் அவளிடமே கேட்டுவிடுவோம் வாருங்கள். அவள் குற்றஞ்சாட்டிய பாடல் இதோ உங்களுக்காக... " கருங்கால் வேங்கை வீயுகு...

பினாங்கு மாப்பிள்ளை

பினாங்கு மாப்பிள்ளை  கண்ணம்மோ ... கண்ணம்மோ... மூச்சிரைக்க கண்ணம்ம வீட்டு வாசலில் வந்து நின்றான் முத்துசாமி. "ஏல...என்ன இந்த ஓட்டம் ஓடியார... என்னமும் அவசரமா?" "அம்மதான் உங்கள் கையோட கூட்டிவரச் சொன்னாவ" "இந்தா வாரேன்னு சொல்லு" "வாங்க... உடனே வரணுமாம்" "அப்படி என்ன தல போற அவசரம்" "வாயேன்....நேரதாத போக்கிட்டு எங்க பசு கூட்டிப் போடப்போவுது... அதுதான் அம்ம கூப்பிட்டாவ..." கையைப்பிடித்து இழுத்தான் முத்துசாமி. கூடவே போனார் கண்ணம்ம. இப்படி நாளும் கண்ணம்மயை தேடி யாராவது வந்துவிடுவர். மாட்டுக்கு ஒண்ணுன்னாலும் மனுசனுக்கு ஒண்ணுன்னாலும் கூப்பிடுங்க கண்ணம்மய என்பார்கள். கண்ணம்மாவைத்  தெரியாதவர் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது.  அவ்வளவு பிரபலம். எல்லாருக்காகவும் ஓடி ஓடி  உதவும் குணம்.  ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால்  முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது  கண்ணம்ம மட்டும்தான். கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா... கண்ணம்மயத் தவிர யாரும் அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது. எந்த வீட்டுல குழந்தை பிறந்தாலும் கண்ணம்மாவின் ஆஜர் இருக்கும். கண்ண...

உண்ணுநீர் விக்கினான்

உண்ணுநீர் விக்கினான்  காதலும் வீரமும் இல்லாமல் தமிழரின் வாழ்வியலைச்  சொல்லிவிட முடியாது. வீரத்தை சொல்லும்போதும் காதல் சொல்லப்படும். காதலைச் சொல்லும்போதும் வீரம் சொல்லப்படும். இப்படி தமிழரின் வாழ்வியலில் காதலும் வீரமும் இணைந்தே தான் போய்க்கொண்டிருக்கும். காதல் வருவது ஒன்றும் இயற்கைக்கு முரணான ஒரு செயலல்ல. அனைவருக்கும் காதல் வரும். ஒரு தரப்பினர் முளையிலேயே  காதலைக் கிள்ளி எறிந்துவிட்டு தான் உண்டு. தன் வேலை உண்டு என்று பொருளீட்டும் சிந்தனையில் போய்க்கொண்டே இருப்பர். மற்றொரு தரப்பினரோ  காதலே வேலையாகச்   செய்து கொண்டிருப்பர். எந்தக் தரப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் முளைவிட்ட காதல் நினைவுகள் என்றும் நெஞ்சோடு நிலைத்திருக்கும். அதனைக் காலத்தாலும்  அழித்துவிட முடியாது. அப்படியே கால வெள்ளத்தில் காணாமல் போயிருந்தாலும்  அங்கங்கே படிக்கும் சில செய்திகள், கவிதைகள் நம்மை இளமை கால நினைவுகளில் மூழ்கடிக்க வைக்கும். காதல் செய்வது அவரவர் விருப்பம். காதல் செய்யாதிருந்தவர்கள் அடுத்தவர் செய்யும் காதலை எட்டிப் பார்த்து மகிழ்தல் உண்டு.  காதலித்தவருக்கும் காதல் செய்ய...

திருமண வாழ்த்து

Image
திருமண வாழ்த்து  நன்றென இறைவன்  நினைத்திருக்க நல்லருள் மணமகன் கரம் பிடிக்க சிறு புள்ளாய் மனம் சிறகடிக்க தேவதையாய் மணமகள் உடன் நடக்க ஆல்போல் வாழ்வு தழைத்திருக்க அருகுபோல் பரம்பரை நிலைத்திருக்க மூங்கில் போல் சுற்றம் தழுவி நிற்க இல்லறம் இன்பம் இனித்திருக்க  வாழ்வீர் என்றும் இணையாக! வாழ்த்துகிறோம் உறவுகள் மகிழ்வாக வாழ்க பல்லாண்டு நலமாக!           - செல்வபாய் ஜெயராஜ்