Posts

பிளாக் காமடி என்றால் என்ன?

பிளாக் காமடி என்றால் என்ன? நகைச்சுவையை விரும்பாதவர்  எவரும் இருக்க முடியாது. எப்படிப்பட்ட முரட்டு சுபாவம் உள்ளவராக இருப்பினும் நகைச்சுவையான பேச்சினைக் கேட்டதும்  அப்படியே தன்னை மறந்து சிரித்துவிடுவார். தன் கவலைகளை மறக்க வைக்கும் ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு. நகைச்சுவை மட்டும் இல்லை என்றால் நம் மனது எப்போதோ வறண்டு போயிருக்கும். இருட்டு போயிருக்கும் . இதனை காந்தியடிகள் கூட தன் சத்திய சோதனை என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். பாலைவனப் பசுஞ்சோலை போல்  அங்கங்கே சில நகைச்சுவைகள் வந்து நம் மன இறுக்கத்தை தளர்வு செய்து சற்று  அமைதிபடுத்திச் செல்வதால்தான் ஓரளவிற்கு இயல்பாக வாழ முடிகிறது. திரைப்படங்கள் '  வார மாத இதழ்கள் , பத்திரிகை  என்று எல்லா இடங்களிலும் நகைச்சுவை  நிரம்பிக் கிடக்கின்றன.  அவற்றைத்  தூக்கி வந்து நம் கைகளில்  கொடுத்து   சிரிக்க வைக்கும் பணியை அவை  ஓரளவுக்குச் செய்து வருகின்றன.  சிலரிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு மிகுந்திருக்கும். எதையும் நகைச்சுவையாகப் பேசி கடந்துபோய்விடுவார்கள். தான் இருக்கும் இடத்தை மகிழ்...

மரமது மரத்திலேறி

Image
மரமது மரத்திலேறி..... ஓர் அரசனுக்கு தனியாக வேட்டைக்குச் செல்ல ஆசை. வேட்டைக்குச் செல்ல வேண்டுமானால் காட்டிற்குச் செல்ல வேண்டும். காட்டிற்கு நடந்து செல்லவா முடியும்?  தேர் வேண்டும்.  தேர் வேண்டும் என்றால் மரம்  வேண்டும்.  மன்னன் பேச்சுக்கு மறு பேச்சு ஏது? மரம் வெட்டி வரப்பட்டது. இப்போது மரத்தாலான தேர்  தயாராயிற்று. தேரை இழுத்துச் செல்ல  குதிரை வேண்டும். குதிரையும் வந்தாயிற்று. வேட்டையாட வெறுங்கையோடு போக முடியுமா? தோளில் மூங்கில் மரத்தின் வளைந்த கொம்புகளால் செய்யப்பட்ட வில் ஒன்றை எடுத்துக் கொண்டான். தோளில் வில்லிருக்க கை வெறுங்கையுடன் இருந்தால் எப்படி? கையில் ஒரு மரப் பிடியாலான வேல் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். இப்படி ஒரு முழு வேட்டைக்காரனாக மாறி காட்டிற்குள் சென்றான் அரசன். காட்டிற்குள் சற்று தொலைவு  சென்றிருப்பான். ஏதோ ஒரு சலசலப்பு  மேலே செல்லவிடாமல் தடையிட்டது. சற்று நின்று நிதானமாக  கவனிக்கிறான் இப்போது வேங்கை ஒன்று அரசனை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. சற்றும் தாமதியாமல்  கையிலிருந்த வேலை வேங்கையை நோக்கி வீச வேங்கை சாய்ந்...

நீலச் சிற்றாடைக்கு நேர்

நீலச் சிற்றாடைக்கு நேர்  கடையேழு வள்ளல்களுள் முதல் வரிசையில் வைத்து  எண்ணப்படுபவர் பாரி.  முல்லைக்கு  தேர் கொடுத்தார் பாரி என்று காலமெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பாரியை அறிந்திருக்கிற நாம் பாரி மகளிர் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாரி மகளிர் என்றால் அங்கவை,சங்கவை  அவ்வளவுதான் நாம் தெரிந்து வைத்திருப்பது. அவர்கள் வரலாறும் நெடியது. இலக்கியத்தோடு தொடர்புடையது. பாரி தன்  இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் முன்பாகவே  இறந்து விடுகிறார். அதனால்  இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை பாரியின் நண்பரான  கபிலர் என்ற புலவர் கையிலெடுத்து வேற்று நாட்டு மன்னர்களோடு பேசிப் பார்க்கிறார். யாரும் பாரி மகளிரை மணம் முடிக்க முன்வரவில்லை. அந்தக் கவலையில்  இறுதியில் கபிலரும் உயிர் துறந்து விடுகிறார். மன்னன் இல்லா நாடு கதவு இல்லா வீடு போன்றது. யாரும் எந்த நேரத்திலும் வீட்டிற்குள் நுழைந்து அத்தனை பொருட்களையும் அள்ளிப் செல்லலாம். இந்தச் சூழலை மூவேந்தர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மூவேந்தர்கள் பறம்பு நாட்...

இட்டார் பெரியோர்....

Image
இட்டார் பெரியோர்.... இவ்வுலகில் வாழும் மக்களுள் யார் பெரியவர் என்பதில் போட்டாப் போட்டி. கோவில் திருவிழாவா...நான்தான் பெரியவன். எனக்குத்தான் முதல் மரியாதை வேண்டும். குடும்ப விழாக்களா...நான்தான் மூத்தவன். என்பெயர்தான் அழைப்பிதழில் முதலாவது இருக்க வேண்டும். ஒரு சபையிலா? என்னைத்தான் முதல் வரிசையில் இருத்த வேண்டும். என்னைத்தான்  முதலாவது கூப்பிட வேண்டும். நான்தான் பணக்காரன். எனக்குத்தான் முதல் மரியாதை கிடைக்க வேண்டும். இப்படி  தன்னை பெரியவன் என்று காட்டிக்கொள்ள போட்டா போட்டி நடத்தும் மக்கள் நிறைந்த உலகம் இது. அந்தப் போட்டிதான் பல இடங்களில் பகையாக மாறி பிரிவினையை உண்டுபண்ணி விடுகிறது. இப்படி நீயா நானா என்று அடித்துக் கொள்வதால் ஒருவர் பெரியவர் ஆகிவிட முடியுமா? பெரியவர் என்பது நாமாக முடிவு செய்யக்கூடியது அல்ல. உலகம் நம் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளைப் பார்த்து முடிவு செய்து கொள்ளும். இதற்கிடையில் சாதி என்ற ஒன்று இடையில் வந்து தொக்கி நின்று கொள்ளும். என் சாதி உயர்வு. உன் சாதி தாழ்வு என்று குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும். அட..போங்கப்பா நீங்களும் உங்கள் சாதியும்...

தீதொழிய நன்மை செயல்

Image
தீதொழிய நன்மை செயல் மனித மனங்கள் வேறுபடுகின்றன. ஆனால் மதங்கள் என்றும் எங்கும் வேறுபடுவதில்லை. சொல்ல வந்த கருத்தில் மாறுபடவுமில்லை. மாறுபடப்போவதுமில்லை. எல்லா மதங்களும் போதித்ததும் போதித்துக்கொண்டிருப்பதும் அன்பை மட்டும்தான். தீமை செய்யுங்கள்  என்று எந்த மதமும் சொல்வதில்லை. தீமையை அனுமதிப்பதும் இல்லை. நன்மை செய்தால் நல்லது கிடைக்கும். தீமை செய்தால் தீமைதான் கிடைக்கும்  என்ற கருத்துக்களை ஆழ விதைத்துச் செல்கின்றன மதங்கள். ஆனால் மதங்களுக்குள் ஏன் இத்தனை மாறுபாடுகள்? வேறுபாடுகள்? மதத்தின் பெயரால் ஏன் சண்டைப் சச்சரவுகள் ? யாருமே மதம் என்ன போதிக்கிறது என்பதை கேட்பதில்லையா? இப்படி ஓராயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம்  மனித மனங்களுக்குள்  நிரம்பிக் கிடக்கும் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் அன்றி வேறென்ன சொல்வது? அதனை மக்களுக்கு எப்படி புரிய வைப்பது? நானும் நீங்களும் சொன்னால் கேட்டுவிடவா போகிறார்கள்? மதம் சொல்லியே புரியவில்லை. நாம் சொல்லியா புரியப்போகிறார்கள்? நமக்கென்ன வந்தது? இப்படி ஒவ்வொருவரும்  நமக்கென்ன ...நமக்கென்ன ... என்று வ...

வல்வில் ஓரியின் சிறப்பு

Image
வல்வில் ஓரியின் சிறப்பு  கடையேழு வள்ளல்கள் யார்யார் என்றால் பாரி, காரி ,ஓரி ,பேகன் ,அதியமான், ஆய் ,நல்லி என்று வரிசையாக சொல்லி விடுவோம். இதில் பாரியைப்பற்றிக் கேட்டால் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று சொல்லி விடுவோம். அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி  கொடுத்தான் என்பது நாடறிந்த செய்தி. ஓரி யார் என்றால்....சற்று தடுமாறி நிற்போம். வல்வில் ஓரி என்று சொல்லுவோம். வல்வில் ஓரிதான் .ஏன் அவருக்கு அந்த பெயர் வந்தது.? அந்தப் பெயருக்கும் அவரை  கடையேழு வள்ளல்களுள் ஒருவராக கொண்டாடுவதற்கும் காரணம் என்ன? இந்தக் கேள்விகளை முன் வைத்தால்.... சற்று  சிந்திக்க ஆரம்பிப்போம். கோயபல்ஸ் பொய் என்பதுபோல உண்மையையும்  மறுபடியும் மறுபடியும் உரக்கச் சொல்ல  வேண்டும். அப்போதுதான் உண்மை என்று நம்பப்படும். .அப்போதுதான் நம் மனதும் அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும். அல்லது ஒரு ஓரத்தில் தூக்கி வைத்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருக்கும். வாருங்கள். யாரிந்த வல்வில் ஓரி என்று பார்ப்போம். எல்லா மன்னர்களுக்கும் இயல்பாக ஒரு குணம் உண்டு. தங்களைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்குப் பர...

தாயுமானாள்

தாயுமானாள் வெகு நேரமாகியும்  ஆட்டுக்குட்டியைக்  காணவில்லை. டேய்... குட்டி எங்கடா...கேட்டாள் செல்லம்மா. செல்லம்மாவின் கேள்வியைப் புரிந்துகொண்ட ஆடுகள் ஒட்டு மொத்தமாக வந்த  வழியை திரும்பிப் பார்த்தன. பக்கத்து ஒடங்காட்டு வரைதான் போகும். எங்கே சுத்திச்சுத்தி வந்தாலும் நாலுமணி ஆனா போதும் டாண்ணு  செல்லம்மா முன்னால்  வந்து நிற்கும்.  இன்று என்னாயிற்று....  நாலரை ஆகப் போகுது.  அந்த ஒத்த குட்டிய காணலியே....  எங்கேயும் நிற்காத.....  ஏதும் காட்டு விலங்கு வந்து  இழுத்துட்டு  போயிற்றோ?.... ஏதோ ஒரு இனம்புரியாத கவலை வந்து அப்பிக் கொண்டது. ஒரு பரபரப்போடு  அங்கேயும் இங்கேயும் பார்த்தாள். எல்லா ஆடுகளும் செல்லம்மா உட்கார்ந்திருந்த புளியமரத்துக்குக் கீழ வந்து வரிசை கட்டி  நின்றன. வீட்டுக்குப் போகணுமே  சின்னக்குட்டியைக் காணலியே  என்று ஏக்கத்தோடு குரல் கொடுத்துப் பார்த்தன. எந்த அனக்கமும் இல்லை. "குட்டிய எங்களா காணோம். உன்கூடதான வந்தது" தாய் ஆட்டிடம் மறுபடியும் கோபமாகக் கேட்டாள் செல்லம்மா. புரிந்தது போல...மே...என்று குரல் கொடுத்தபட...