Posts

வல்வில் ஓரியின் சிறப்பு

Image
வல்வில் ஓரியின் சிறப்பு  கடையேழு வள்ளல்கள் யார்யார் என்றால் பாரி, காரி ,ஓரி ,பேகன் ,அதியமான், ஆய் ,நல்லி என்று வரிசையாக சொல்லி விடுவோம். இதில் பாரியைப்பற்றிக் கேட்டால் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று சொல்லி விடுவோம். அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி  கொடுத்தான் என்பது நாடறிந்த செய்தி. ஓரி யார் என்றால்....சற்று தடுமாறி நிற்போம். வல்வில் ஓரி என்று சொல்லுவோம். வல்வில் ஓரிதான் .ஏன் அவருக்கு அந்த பெயர் வந்தது.? அந்தப் பெயருக்கும் அவரை  கடையேழு வள்ளல்களுள் ஒருவராக கொண்டாடுவதற்கும் காரணம் என்ன? இந்தக் கேள்விகளை முன் வைத்தால்.... சற்று  சிந்திக்க ஆரம்பிப்போம். கோயபல்ஸ் பொய் என்பதுபோல உண்மையையும்  மறுபடியும் மறுபடியும் உரக்கச் சொல்ல  வேண்டும். அப்போதுதான் உண்மை என்று நம்பப்படும். .அப்போதுதான் நம் மனதும் அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும். அல்லது ஒரு ஓரத்தில் தூக்கி வைத்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருக்கும். வாருங்கள். யாரிந்த வல்வில் ஓரி என்று பார்ப்போம். எல்லா மன்னர்களுக்கும் இயல்பாக ஒரு குணம் உண்டு. தங்களைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்குப் பர...

தாயுமானாள்

தாயுமானாள் வெகு நேரமாகியும்  ஆட்டுக்குட்டியைக்  காணவில்லை. டேய்... குட்டி எங்கடா...கேட்டாள் செல்லம்மா. செல்லம்மாவின் கேள்வியைப் புரிந்துகொண்ட ஆடுகள் ஒட்டு மொத்தமாக வந்த  வழியை திரும்பிப் பார்த்தன. பக்கத்து ஒடங்காட்டு வரைதான் போகும். எங்கே சுத்திச்சுத்தி வந்தாலும் நாலுமணி ஆனா போதும் டாண்ணு  செல்லம்மா முன்னால்  வந்து நிற்கும்.  இன்று என்னாயிற்று....  நாலரை ஆகப் போகுது.  அந்த ஒத்த குட்டிய காணலியே....  எங்கேயும் நிற்காத.....  ஏதும் காட்டு விலங்கு வந்து  இழுத்துட்டு  போயிற்றோ?.... ஏதோ ஒரு இனம்புரியாத கவலை வந்து அப்பிக் கொண்டது. ஒரு பரபரப்போடு  அங்கேயும் இங்கேயும் பார்த்தாள். எல்லா ஆடுகளும் செல்லம்மா உட்கார்ந்திருந்த புளியமரத்துக்குக் கீழ வந்து வரிசை கட்டி  நின்றன. வீட்டுக்குப் போகணுமே  சின்னக்குட்டியைக் காணலியே  என்று ஏக்கத்தோடு குரல் கொடுத்துப் பார்த்தன. எந்த அனக்கமும் இல்லை. "குட்டிய எங்களா காணோம். உன்கூடதான வந்தது" தாய் ஆட்டிடம் மறுபடியும் கோபமாகக் கேட்டாள் செல்லம்மா. புரிந்தது போல...மே...என்று குரல் கொடுத்தபட...

இலவு காத்த கிளி போல....

  தமிழில் உவமைகளுக்குப்   பஞ்சம் இருக்காது.  ஆனால் அவை யாவும் வெறுமனே  பொழுதுபோகிற்காகச் சொல்லப்பட்டவை அல்ல. மக்கள் உள்ளங்களின்  பழுதை நீக்கி மனிதகுலம் பண்படுத்தப் பட வேண்டும். நல்வழிப்படுத்தப்பட வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே சொல்லப்பட்டவை. நேரடியாக ஒரு கருத்தைச் சொல்லும்போது எளிதில் புரிந்து கொளாள முடியாது. சில செயல்களைப் புரிய வைக்க  வேண்டும் என்றால் தெரிந்த ஒரு பொருளை  உவமையாக கூறி புரிய வைக்க வேண்டும். அது இது போல  இது அது போல என்று தெரிந்த ஒரு பொருளை முன்னிருத்திப் புரிய வைப்பது வழக்கம்.   அவ்வாறு சொல்லப்பட்டவை தான் பழமொழிகளும் பழக்கமொழிகளும்.  புரிய வைப்பதற்குத்தான்  பழமொழிகள் உவமைகளைச் சுமந்து வருவதுண்டு. அதுவும் நம் கண்முன்னால்  இருக்கும் ஒரு பொருளை உவமையாகச் சொல்லும்போது நம்மால் எளிதில்  புரிந்து கொள்ள முடியும். அப்படிச் சொல்லப்பட்ட எல்லா பழமொழிக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும். இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதை முழுமையாக நம்புவோம். அப்படி இல்லை என்ற...

தக்காளி

Image
தக்காளி  தங்கத்தை விஞ்சி விட்ட  தக்காளியே மண்டி தாண்டி எட்டடி தள்ளி நின்று  எட்டிப் பார்த்து மெல்லக் கண்சிமிட்டி   கள்ள விளையாட்டு காட்டுவ‍தில் யாது நீ ஞாயம் கண்டாய்?  கனிந்த முகம் பார்த்து  கன்னல் கனியமுதம்   கன்னத்தில் முத்தமிட்டு  கன்னிவாய்ச் சிவக்க  கடித்த நாட்களை   நினைத்துப் பார்க்கிறேன்  அந்நாள் நினைவுகளில்  செம்மலர் உன் நினைவில்  உள்ளம் நைந்து  உருக்குலைந்து போகிறேன்!    தகதகக்கும்  நின்னுரு  காணாது தன்னுரு இழந்து தன்னிலை மறந்து வெந்நீராய்க் கொதிக்கிறது என் வீட்டுக் குழம்பு! நீயோ உன்னிலை மறந்து என்னிலை துறந்து அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆலோகணம் பாடுகின்றாய்! எளியவர்  எம் பக்கம் எட்டிப் பார்ப்பதெப்போது?  எம்வீட்டுக் குழம்பு  எட்டும் தொலைவு மட்டும் உன் மணம் பரப்பி உள்ளங்களை ஈப்பதெப்போது ? தேவதை நின் திருமுகத் தரிசனம் தந்து எம் இல்லமத்தை ஆனந்தக் கூத்தாட வைப்பது எப்போது? வானம் திறந்திருந்ததால் வாட்டம்  கொண்டாயோ? மாடி வீடெல்லாம் தோட்டமானதால் மண்ணில் வ...

கோயபல்ஸ்

Image
கோயபல்ஸ் " பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் " அதாவது நன்மை தரும் என்றால் பொய்யும் வாய்மையாகவே கருதப்படும் என்கிறார் வள்ளுவர். யாருக்கு நன்மை பயக்கும் என்பதெல்லாம் அடுத்தக்கட்ட விவாதம். வள்ளுவரே பொய் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார்? அப்படியானால் என்ன?  நாளும் நாலு பொய் சொல்லிவிட்டு வள்ளுவரைக் கூட்டி வந்து வக்காலாத்து வாங்க வைத்துவிடலாம் என்று மனம் கும்மாளம்  போடுகிறது. சும்மாவே பச்சைக் காக்கா பறக்குது என்போம். இனி என்ன... பச்சைபச்சையாகப் பொய்யை அவிழ்த்துவிட வேண்டியதுதான் என்று ஒரு  மனக்கணக்கு ஓடுகிறது. அப்படியானால்.... அப்படியானால்... "பொய் சொல்லக்கூடாது பாப்பா" என்று  பாரதி சொல்லியது எல்லாம் சும்மாவா? "நெஞ்சார பொய்தன்னைச்  சொல்ல வேண்டாம் " என்று சொல்லித் தந்தது சும்மா ஒரு பேச்சுக்குத்தானா? மனம் குறுக்கும் நெடுக்குமாக கேள்விகளைப் போட்டு முட்டி மோத  வைக்கிறது. பொய் சொல்வது பாவம். இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம். "பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்" என்று பொய் சொல்லக்கூடாது என்பதைச சொல்ல...

வெற்றிக்கான வழிகள் மூன்று

 வெற்றிக்கான வழிகள் மூன்று அனைவருக்கும் வெற்றிபெற வேண்டும் என்று ஆசை. ஆனால் எல்லோராலும் அது சாத்தியமாகிறதா என்றால் இல்லை  என்பதுதான் உண்மை. அது ஏன்? ஏன்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு. அதற்கான காரணம் ஆளாளுக்கு வெவ்வேறாக இருக்கும். ஆனால் கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதுதான் நம்மில் பலரது கருத்தாக  இருக்கும். கடின உழைப்பு மட்டும் இருந்தால் வெற்றி சாத்தியமாகுமா? அப்படிப் பார்த்தால்  கூலித் தொழிலாளியும்தான்  அல்லும் பகலும் அயராது  உழைக்கிறார். ஆனால் அவருடைய வாழ்வில்  எந்தவித முன்னேற்றத்தையும்  காணோமே என்பீர்கள். அப்படியானால் வாழ்வில் வெற்றிபெற கடின உழைப்பு தேவை இல்லையா? என்ற கேள்வி நம்மை முன்னே நகரவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. சோர்ந்து போக வைக்கிறது. இமயமலையில் ஏறுவது மட்டும் வெற்றியல்ல. ஒரு பாறையின் மீது ஏறி நிற்பது கூட ஒரு சிலருக்கு வெற்றியாகத்தான் இருக்கும். நம் இயல்புக்கு ஏற்ற வெற்றியைப் பெறுதல் கூட அசாத்திய வெற்றியாகவே கருதப்படும். வெற்றி வேண்டும் என்ற வேட்கை மட்டும் இருந்தால் போதுமா? அந்த வெற்றிக்கான அடித்தளமிடுதல்  ச...

கனவுக்காரி

கனவுக்காரி நார்க்கட்டிலில்  நாடி வானம் பார்க்க மூடி கண்கள் இருக்க மெல்ல தொட்டதொரு விரல் விழிகள் திறக்க மறுக்க கைகள் மட்டும் சிலிர்க்க  கேள்வி கேட்க  மனம் நினைக்க நா எழும்ப மறுக்க செவிமடலுக்குக்குள்  ஒரு  சலசலப்பு சிற்றெறும்பு கடித்ததொரு  சிலுசிலுப்பு செவி மடலைத் தழுவி செவி தீட்டி கவனம் திரட்டி குரல் அடையாள வகுப்பு நடத்தி குழம்பிய மனதோடு   காத்திருந்தேன் வெற்றுக் காற்று  வெப்பமொடு வந்து முட்ட கண் முன் ஏதோ  அசைவாடும் உணர்வு கிட்ட யாரென்று  குரல் அதட்ட முட்ட வந்தவள்  இதழ் குவிக்க முத்துச் சிதற  வேசக்காரியோ  இவள் மோசக்காரியோ  என்று மயங்கிய வேளையில் தமிழ் மகள் நான்  வேசக்காரியுமல்ல மோசக்காரியுமல்ல  யாரென்று நீர் உரைத்தால் சாகா மருந்தொன்று தருவேன் வேகா வெயிலில்  சுட்டப் பழம் எடுத்து வந்தேன் சுவைத்திட விருப்பமோ  எனக் கரம் நீட்ட சாகா மருந்து தர இவள் சஞ்சீவி பர்வதத்துக் காரிகையா? முட்டுக் கொடுத்து நடக்கும் இவள் மூதுரை  தந்த முதுமகளோ? மனம் ஆறேழு  கேள்வி கேட்டு அலைக்கழிக்க  விடுகதை அவிழ்ப்...