Posts

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவு பாராட்டு மடல் திருமதி   வசந்தி டேவிட் தலைமை ஆசிரியை, கே.டி. காய்க்வாட் மாநகராட்சி தமிழ்ப்பள்ளி, சயான் கோலிவாடா,  மும்பை - 37. பணி நிறைவு நாள் : 01.04.2023 பொருநைநதி பொங்குநுரை கோநகர் நெல்லை எங்கும் புகழ் மணக்கும் ஆரைகுளம் ஊரு வஞ்சமில் ராஜன் பூமணி இணையர் சேர்வலாறு நெஞ்சம் மகிழ  ஓதினர் வசந்தியெனும் நற்பேரு! அன்பர் டேவிட்டோடு இணைந்த இச்சிற்றாறு இன்பமாய்ப் பிள்ளைஇருவர்  தந்த  கூட்டுத் தேனாறு புன்னகையாள் வசந்திக்குப் பருவம் என்றும் பதினாறு  விழியுயர்த்திப் பார்க்க வைத்தது நின் ஒழுகலாறு! கே.டி..காய்க்வாட் பள்ளியில் பாய்ந்த முதலாறு ஷஹாஜி நகர் சர்தார் நகர் எங்கும் இவர் கிளையாறு கே.டி.காய்க்வாட்டில் தலைமையாசிரியை எனும் தனிப்பேரு  தன்னிகரில்லா வசந்திக்கு வாய்த்தோர் பெரும்பேறு! ஆறாறு ஆண்டு ஆசிரியப் பணி என்பது வரலாறு தேனாறாய்க் கற்பித்தலில் உண்டு தீஞ்சுவைப் பாலாறு ஓராறு நாட்கள் போதாது இவரொரு பேராறு சீராறு தீஞ்சுவையாறு இவருக்கு நிகராரு?   கள்ளமில்லாப் பேச்சு என்றும் குளிரிளநீராறு   உள்ள வோட்டமோ தெளிந்த தெண்ணீராறு  அள்ளும்மடையெனப்...

திருவும் இன்பமும்....

திருவும் இன்பமும்....! "வாழ்க்கையின் ஓட்டமே செல்வத்தை நோக்கியதாகவே இருக்கும். எனக்குப் பணமே வேண்டாம் என்று சொன்னால்  நீ இந்த உலகில் இருக்க தகுதியற்றவன் ஆகிறாய். இதை நான் சொல்லவில்லை.  வள்ளுவர் சொல்கிறார். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார். வள்ளுவரே சொல்லிவிட்டார் . அப்படியானால் பொருளைத் தேடித்தான்  ஆக வேண்டும். இல்லானை இல்லாளும் வேண்டாள்  ஈன்றெடுத்தத் தாய் வேண்டாள் .... என்று சொல்லிவிட்டார் ஔவை. தாயைக்கூட தள்ளி நிற்க வைத்துவிடும் வல்லமை பெற்றதா பொருள்? இப்படி ஒரு கலக்கம். அப்படியானால் வேண்டும் வேண்டும் பொருள் வேண்டும் என்று மனம் பொருள் பின்னால் ஓட்டம் பிடிக்கும். பொருள் இருந்தால்தான்  இன்பத்தை அடைய முடியும். விரும்பியதைப் பெற முடியும். விரும்பியதை அடைந்துவிட்டால் இன்பம் இல்லம் வந்து சேரும். இல்லத்தில் இருப்பவர்களும் நம்மைத் கொண்டாடுவர். பொருளும் இன்பமும் இருந்தால் சிறப்புக்கு ஏது குறை? போகுமிடமெல்லாம் சிறப்பு. இத்தோடு மனம் போதும்  என்று நின்றுவிடுமா? புகழ் வேண்டும் ஐயா புகழ்.... அதற்...

வாய்மை எனப்படுவது யாதெனின்....

வாய்மை எனப்படுவது யாதெனின்... " வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இல்லாத சொலல் "                            குறள் : 291 வாய்மை- உண்மை எனப்படுவது- என்று சொல்லப்படுவது யாதெனில்-எது என்றால் யாதொன்றும்- எதுவாயினும் தீமை- கெடுதல் இல்லாத -இல்லாதவற்றை சொலல்- சொல்லுதல் வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால் யாருக்கும் எந்த இடத்திலும் தீங்கு தராதவற்றைச் சொல்லுதலாகும். விளக்கம் : உண்மை யாரையும் காயப்படுத்தாது. உண்மை காலமறிந்து வெளிப்படும். .நமது சொல்லால் எந்த ஒரு உயிரும் காயப்பட்டு விடுமானால் நமது சொல்லில் மெய்ம்மை இல்லை என்று ஆகிவிடும். நாம் சொல்லும் சொற்கள்  பிறர்க்குத் தீமை விளைவிக்காததாக இருந்தால் அதுதான் வாய்மை. உண்மை பேசுகிறேன் என்று சிலர் பேசும் சொற்கள் பிறரைக் காயப்படுத்தலாம்.இந்த சொற்கள் வாய்மை என்ற அகராதியில் வராது. தன் உள்ளம் அறிந்தவரை பிறர்க்குக் கேடில்லா மொழி. நன்மை பயக்கும் மொழி. எல்லா இடத்தும் எல்லா நேரங்களிலும் யாருக்கும் இடர் உண்டாக்காத மொழி. அதுவே வாய்மை எனப்படும் என்கிறார் வள்ளுவர். உள்ளதைச் சொ...

கரவிலா நெஞ்சத்தவர்

கரவிலா நெஞ்சத்தவர் கரவிலா நெஞ்சத்தவர் யார்? இப்படியொரு கேள்வி வந்து  மண்டையில் ஏறி உட்கார்ந்து  அப்படிப்பட்ட நபரைத் தேட ஆரம்பித்தது. அந்தத் தேடலின்போது " உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கல்லாமை வேண்டும்." என்ற வள்ளலாரின் வரிகள் வந்து என்னைத் குறுக்கு விசாரணை செய்ய வைத்தது. இறைவனிடமே  வரம் கேட்கும் அளவிற்கு  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறவர்கள் ஆபத்தானவர்களா? ஏன் வள்ளலார் அப்படியொரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தார்.? அவர்கள் உறவு வேண்டாம் என்று  விலகி ஓடும் அளவுக்கு அவர்கள் தீயவர்களா? வள்ளலாரின் வரிகள்  என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அப்படியானால்... வஞ்சகர்கள் உள்ளம் ஒன்று நினைக்கும் . உதடு ஒன்று பேசும். இதைத்தான் "கண்டு ஒன்று சொல்லேல்" என்று  ஔவையும் சொல்லியிருப்பாரோ? முகத்திற்கு முன்னால் புகழ்ந்தும்  பின்னால் இகழ்ந்தும் பேசும் பண்பு கொண்டோரால் நிறைந்ததுதான் இவ்வுலகு. பேசினால் பேசிட்டுப் போகிறார்கள். நாம் பாட்டுக்கு நம்வழியே செல்ல வேண்டியதுதான். அவர்களால் நமக்கு என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது என்கிறீர்களா? அவர்களால் எந்த நேரத்திலும் ...

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.....

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.... " உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்" என்பார்கள். நண்பன் எப்படியோ அப்படித்தான் அவன் சேர்க்கையும் இருக்கும் . இதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். நட்பு யாரோடு அமையும்? என்னென்ன காரணங்களுக்காக அமையும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லலாம். உதவிக்காக...பணத்துக்காக.... ஒரே கருத்து இருப்பதற்காக..... என்று மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் அதிகப்படியான வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்றால் ஒத்திசைவு  அதாவது ஒத்தக் கருத்துகொண்டோர்  மாட்டு மட்டுமே நட்பு அமையும்  என்ற கருத்துக்காகத்தான் இருக்கும். எப்போதுமே ஒத்த குணத்தாரோடு மட்டுமே சேர்க்கை ஏற்படும். இது இயல்பாக அமையும் ஒரு செயல் என்றுதான் சொல்லவேண்டும். மூடனோடு அறிவாளி கைகோர்த்துச் சென்றால் பார்ப்பவருக்கே வேடிக்கையாக இருக்கும். ஒரு புதுமை நடைபெறுவது போல வினோதமாகப் பார்ப்போம். ஒத்திசைவு இருந்தால் நாட்டமும் ஈர்ப்பும் தானாய் நிகழும். தேனீக்களுக்குத் தேன் இருக்கும் இடம்தான் விருப்பமாக இருக்கும். வண்டுகளுக்கு மலர்மீது ஈர்ப்பு உண்டு. பயன் கருதிய...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

Image
பணி நிறைவுப் பாராட்டு மடல்       செ .. முத்தையா MA.B.Ed,         ஆசிரியர்,         நவாப் டேங்க் தமிழ்ப்பள்ளி,         மும்பை. பணி ஓய்வு நாள்: 01. 04. 2023   செந்தமிழ்ச் செல்வர் நிறை கூடங்குளம் வனப்பு செவ்வியர் செல்வநாயகம் பாக்கியம் தாலசைப்பு செவியில் முத்தையா  நாமமோதி வளர்த்த வளர்ப்பு செந்தமிழ் உரமேற்றி மலர்ந்து நிற்பது பேருவப்பு! அல்லியன்ன ரேணுகாவோடு கொண்டதோர் இணைப்பு மல்லியன்ன மலர்ச்சிதரு பிள்ளைகளால் பூரிப்பு நல்லியன்ன இல்லாள் வாழ்க்கையின் சிறப்பு வல்லியாள் வனைந்ததால் வந்தது முதலிருப்பு! முதலடி ஷஹாஜிநகர்ப் பள்ளியில் கிடைத்த வரவேற்பு ஈரடி சீத்தாகேம்ப்  பள்ளியில் தொடர்த் தடம்பதிப்பு மூவடி நவாப்டேங்க் பள்ளி நிகழ்வெல்லாம் முத்தாய்ப்பு நாலடி நாடறிய கிடைத்ததொரு நல்வாய்ப்பு! கலைகளின்  நினைப்பு அய்யாவின்  உயிர்த்துடிப்பு  கலைக்கூடமாய்க் கல்விக்கூடத்தை மாற்ற காட்டினார் முனைப்பு    தலையாயக் கற்பித்தலில் உண்டு என்றும் அர்ப்பணிப்பு  மலையாய்ப் பரிசுகள் குவித்தது இவரின் ...

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து விண்மீன்கள் ஒளிசிந்த விடிந்ததொரு பொன்னாளென வீசுஇளம் தென்றல் வந்து எடிசன் ஐயா காதோடு கவிபாட விசும்பின் வீழ்த் துளியென விடை காணா நாள்கள் வாழ்ந்தின்பம் காண்கவென வான்மழையும் வாழ்த்துரைக்க கிண்கிணியெனக் கைபேசியும் அணிவகுத்து நின்று அணிசெய் நாயகனுக்கு அணியம்செய் மொழியெடுத்து அழகாய் வாழ்த்தி நிற்க ஓய்விற்குப் பிறகும் ஓய்ந்திராது ஓய்ந்தவரென்று எம்மையும் ஒதுக்கிடாது ஓரணியில் ஒருங்கிணைத்து ஓடி வந்து உதவி வரும் உயர்ந்த உள்ளம் பேருள்ளம் பெருமிதத்திற்குரிய உள்ளம் நெடுவரையன்ன நிலைத்த புகழடைந்து தொடர்பணி தொய்வில்லாது செய்துவர இறையருள் என்றென்றும்  இல்லம் தங்கிட இருகரம்கூப்பி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு ... பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு இன்றுபோல் என்றும் மகிழ்ந்து !