Posts

கொன்றை மலர் சொன்ன பொய்

Image
கொன்றை மலர் சொன்ன பொய்  சங்க இலக்கியப்  பாடல்களில்  கொன்றை மலருக்கு என்று  தனி இடம் உண்டு. காட்டில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சியைத் தம் கவிதைகளில் கொண்டு வந்து காட்டி நம்மையும் கொன்றை மலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமை பல புலவர்களுக்கு உண்டு. தத்தமது கற்பனைக்கு ஏற்ப தாம் சொல்ல வந்த கருத்தை தமது கதாப்பாத்திரங்கள் மூலமாக அழகுபடக் கூறி தமது புலமையை மெய்ப்பித்து நிற்பது புலவர்களின் தனிச்சிறப்பு.  அந்த வகையில் ஓதலாந்தையார் என்ற  புலவர் கொன்றை மலரைப் பற்றிப்  பாடிய பாடல் இப்படி ஒரு பாடலா?  என்று நம்மை வியக்க வைக்கிறது.  எந்தப் பூ மலர்ந்திருப்பதைப் பார்த்தாலும்  நிற்க வைத்து கேள்வி  கேட்க  வைக்கிறது.   கார்காலத்தை வரவேற்பதற்காக  கொன்றை மரங்கள் பூக்களைத் தலையில் சூடி நிற்பது கண்கொள்ளாக் காட்சிதான். மறுப்பதற்கில்லை. அந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியும் மனதை நெகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.  அந்த மலர்ச்சிக்குள் மற்றுமொரு வன்மம் பொதிந்தல்லவா கிடக்கிறது. அந்தப் பூக்களின் புன்சிரிப்புக்குள்  கள்ளப்...

ஊருவிட்டு...

ஊருவிட்டு .... கதவைத் திறந்து மெதுவாக வெளியில்  எட்டிப் பார்த்த நான் படக்கென்று கதவை  சாத்திக் கொண்டு கதவின் பின்னால் சாய்ந்து நின்று கொண்டேன். "என்ன...யாரும் வாராங்களா...?" என்றாள் அக்கா ரமணி. உஷ்....வாயில் கையை வைத்து மெதுவாகப் பேசும்படி எச்சரித்துவிட்டு கதவிடுக்கு வழியாக வெளியிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் பையோடு புறப்படத் தயாரான அனைவரும் பையைக் கீழே வைத்துவிட்டு எனது சிக்னலுக்காக காத்திருந்தனர். அம்மா மறுபடியும் ஒருமுறை சமையலறைப் பக்கம் சென்று ஏதாவது விட்டு விட்டுவிட்டு வந்தோமா என உறுதி செய்து கொண்டிருந்தார். அப்பாவின் கண்கள் எதையோ இழந்துவிட்டு தேடுவதுபோல தேடிக் கொண்டிருந்தது. முகம் வெளிறிப் போய் அப்பாவைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. "சீக்கிரம் பாருடா...நேரம் ஆகிடப் போவுது." ..என்று அவசரப்படுத்தினான் கடைக்குட்டித் தம்பி ரமேஷ். அவனுடைய குரலில் முதன்முதலாக இன்பச்சுற்றுலா செல்லும் சிறுவனின் உற்சாகம் இருந்தது. அவனைப் பொறுத்தமட்டில் இது  இன்பச் சுற்றுலாதான். அடிக்கடி அம்மாவிடம் "எங்காவது  பேருந்தில் வெளியில்  கூட்டிப் போயேன்" என்று நச்சரித்...

உடம்பொடு உயிரிடை என்ன....

உடம்பொடு உயிரிடை என்ன.... " உடம்பொடு உயிரிடை என்னமற்று  அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு               குறள் :  1122 உடம்பொடு- உடம்புடன் உயிரிடை -உயிருக்கான என்ன - எத்தன்மையது அன்ன - அத்தன்மையது மடந்தையொடு - மங்கையோடு எம்மிடை -எங்களுக்கிடையிலான நட்பு - உறவு எனக்கும் என் தலைவிக்குமான நட்பு உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு  எத்தகையதோ அத்தன்மையது. விளக்கம் : அவளில்லாமல் என்னால் உயிர்வாழ முடியாது. எனக்கும் என் காதலிக்கும் இடையிலான நட்பு எத்தகையது தெரியுமா? உடம்புக்கும் உயிருக்கும் இடையினலான நட்பு  எத்தகையதோ அத்தகைய நட்பு எங்கள் நட்பு. உயிர் பிரிந்தால் உடல் இருந்தும் இல்லாததாகிவிடும். எனக்கு என் காதலி உயிர் போன்றவள். அவளுக்கு நான் உயிர் போன்றவன். உடலொடு உயிராய் இணைந்து விட்டோம். இனி எங்களுக்குள் பிரிவு இல்லை.  பிரிந்தால் எங்களால் உயிர் வாழமுடியாது உடலும் உயிரும்  சார்ந்திருக்கும் போதுதான் அந்த வாழ்வில் உயிர்ப்பு உண்டு. அவளும் நானும் சேர்ந்திருந்தால் தான்  எங்கள் வாழ்வு உயிர்ப்புடையதாக இருக்கும். மனம் இணைந்த நட்பு  என்...

இணங்கி இருப்பது நன்று

இணங்கி இருப்பது நன்று "மறவற்க மாற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு" என்றார் வள்ளுவர். சான்றோர் நட்பை ஒருபோதும் விட்டுவிடாதே. துன்பத்தில் துணையாக இருந்தவர்களின் நட்பையும் விட்டுவிடாதே. நட்பு என்றால் இணக்கமாக நடந்து கொள்வது. இணக்கம் எப்போது ஏற்படும்? ஒத்த கருத்துடையோரிடம் இணக்கம் ஏற்படலாம். ஒத்த வயதினரோடு இணக்கம் ஏற்படலாம். ஒரே இடத்தில் வேலை செய்வோரிடம் இணக்கம் ஏற்படலாம். ஒத்த தொழில் புரிவோரிடையே இணக்கம் ஏற்படலாம். இது சூழல் காரணமாக ஏற்படும் இணக்கம். இது நல்லதா? இந்த இணக்கத்தினால் ஏதேனும் நன்மை பயக்குமா? உறுதியாகச் சொல்ல முடியாது. நன்மை இருக்கலாம். அதனால்தானே இணக்கமாக இருக்கிறோம். போக்குவரத்து வசதிக்காக... பேச்சுத்துணைக்காக... தொழில் முன்னேற்றத்திற்காக ... என்று ஏதோ ஒரு காரணம் கருதி வந்த இந்த இணக்கம்  கடைசிவரை தொடருமா? உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால்தான் இது நன்று என்று முடிவு செய்யப்படவில்லை. ஆனால் ஔவை இவை இவை எல்லாம் நன்று என்று ஒரு பட்டியல் தருகிறார் . அப்போது யாரோடு இணக்கமாக இருப்பது நன்று என்றும் கூறுகிறார் கேளுங்கள். இதோ பாடல் உங்களுக்காக.. " நல...

குலத்தளவே ஆகுமாம் குணம்

குலத்தளவே ஆகுமாம் குணம்  நாய் வாலை நிமிர்த்த முடியுமா? முடியாதல்லவா ! அதே போன்றுதான் சிலரின் பிறவிக் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. அது  என்ன பிறவிக்குணம்?  இப்படியொரு கேள்வி எழாமலில்லை.    சில செயல்கள் நமது   பழக்கத்தால் வருவன.  எடுத்துக்காட்டாக   செந்தமிழ் நாப்பழக்கம் வருவது.  கல்வி  மனப்பழக்கம்  ஒழுக்கம் நடைப் பழக்கம்  என்கிறார் ஔவை. ஆனால் நட்பும்  தயையும்  கொடையும் பிறவிக்குணம்  என்று சொல்லியிருக்கிருக்கிறார்.    சிந்திக்க வேண்டிய செய்தி.    சில குணங்கள்  பழகப்பழக  வந்துவிடும்.  ஆனால் இன்னும் சிலவற்றை பழக்கத்தினால்  ஏற்படுத்திக் கொள்ள முடியாது  என்பதுதான் நிதர்சனமான உண்மை. கொடை பிறர் மெச்ச வேண்டும்  என்பதற்காக செய்வோரும் உண்டு. அவர்கள் எதிர்பார்த்த புகழும் அங்கீகாரமும் கிடைக்காதபோது நாளடைவில் அந்தக் கொடை குறைந்து போகும். இல்லாமலே போய்விடும். அதனால்தான் பிறவிக்கு குணத்தால்  வருவதுதான் கொடை, தயை, நட்பு எல்லாம் என்பது  ஔவை கருத்து. அப்படி பிறவிக்...

தளர்ந்து வளையுமோ.....?

தளர்ந்து வளையுமோ....? "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்" என்றார் வள்ளுவர். தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் கவரிமா உயிர் வாழாதாம். அதுபோல சான்றோர் மானம் இழக்க நேரிட்டால் உயிரை  விட்டு விடுவராம். தன்மானத்தோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்பவர்களுக்கு தனது தன்மானத்திற்கு ஓர் இழுக்கு ஏற்படும் சூழல் ஏற்படும்போது அவர்களால் அதனைச் சாதாரணமாக  எடுத்துக்கொண்டு கடந்து போக முடியாது. நமக்கு இப்படி ஒரு சூழல் வந்துவிட்டதே என்று எண்ணி எண்ணி மனம் வெம்பி  போகும்.  ஒரு கட்டத்தில் அதனை   தாங்கிக்கொள்ள முடியாது  மனம் ஒடிந்து அவமானப்பட்டு அப்படியே மடிந்து போவர். எவ்வளவுதான் ஒரு மனிதனால்  தாங்கிக்கொள்ள முடியும்? வளைந்து கொடுக்க முடியாதநிலை வரும்போதுதான் ஒடிந்து போகின்றனர். உயிர் விடத் துணிகின்றனர். தாங்க முடியாத நிலையில் அது ஒருவரை இறப்பு வரை  கொண்டு சென்றுவிடுகிறது. இதே கருத்தைத்தான்  ஔவையும் " உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளைய...

நாகாக்க...!

Image
நாகாக்க ... காக்க ....காக்க...நாவைக் காக்க.. அதென்ன நாவைக் காக்க...?        நாவைக் காக்க முப்பத்து இரண்டு        காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?        இன்னும் வேறு எத்தனை காவலாளிகள்         போட்டு காக்க வேண்டும்?        நானூறு காவலாளிகள் போட்டாலும் போதாதுங்க...        நாமதான் அதை அடக்கி வைக்கணும்.       பகலில் பக்கம் பார்த்துப் பேசணும்.        இரவில் அதுவும் பேசக் கூடாது தெரியுமிலல...               "  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்         சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"        என்கிறார் வள்ளுவர். எதைக் காக்காவிட்டாலும் நாவைக்  மட்டுமாவது காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக் கொள்ளாதிருந்தால் தவறான சொற்களைப் பயன்படுத்திவிட்டு துன்பப்பட நேரிடும்.  வள்ளுவரின் வாய்மொழியை மதியாமல்    வாங்கிக் கட்டிக் கொண்ட ...