Posts

எற்றென் றிரங்குவ செய்யற்க.....

Image
எற்றென் றிரங்குவ செய்யற்க.... "எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று "             குறள் :655 எற்று -  என்ன செய்தோம் என்று- என்பதாக  இரங்குவ- வருந்தும்படியான செய்யற்க- செய்யாதிருப்பீராக செய்வானேல்- செய்யானேயால் மற்று -மறுபடியும் அன்ன - அத்தன்மையதான செயல்கள் செய்யாமை- செய்யாதிருத்தல் நன்று- நல்லது   இப்படி தவறு செய்துவிட்டேனே என்று பின்னர்  எண்ணி வருந்தும் படியான செயல்களைச் செய்யக்கூடாது. அப்படியே ஒருவேளை செய்துவிட்டாலும்  மீண்டும் அப்படிப்பட்ட செயலைச் செய்யாதிருத்தல் நன்று. விளக்கம் : சில நேரங்களில் நாம் ஏதாவது தவறு செய்துவிடுவோம். செய்து முடித்த பின்னர்தான் அது  தவறு என்று நமக்கே புரியும். இப்படி செய்து விட்டேனே என்று எண்ணி எண்ணி   வருத்தப்பட்டிருப்போம். இது இயல்பாகவே அனைவர் வாழ்விலும் நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுதான். போகட்டும் விட்டுவிடுங்கள். தவறு என்பதை உணர்ந்து  விட்டீர்களல்லவா? மறுபடியும் அதையே நினைத்து வருந்துவதால் எந்த நன்மையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மறுபடியும் அதுப...

ஆணவம்

 ஆணவம் மகராசி பெயருக்கு ஏற்றபடி  நல்ல   முகராசியானப் பொண்ணு.  பார்க்கிறவர்களைத் திரும்பிப்   பார்க்க வைக்கிற அழகு.  எப்போதும் துருதுருவென்று வருவாள்.         படிப்பிலும் கெட்டிக்காரி என்று பெயர் எடுத்து  வைத்திருந்தாள்.எந்தக் கேள்வி கேட்டாலும் முதலாளாய் பதில்  சொல்வாள்.  வகுப்பிற்குள் ஆசிரியர்  நுழைந்ததும் ஆசிரியரின் கண்கள்  மகராசியைத்தான் தேடும்.   அன்று முதலாவது பாடவேளை. தமிழ்ப் பாட வகுப்பு. தமிழாசிரியர் தான் பள்ளி தலைமையாசிரியர். வகுப்பிற்குள் ஆசிரியர் நுழைந்ததும் மாணவ மாணவிகள் அனைவரும் எழும்பி நின்று காலை வணக்கம் ஐயா என்றனர்.‌ வணக்கம். உட்காருங்கள் என்ற ஆசிரியரின் கண்கள் தானாக மகராசியைத் தேடின. மகராசி இருக்கும் இடத்தில் மகராசியைக் காணவில்லை. ஒரு வேளை தாமதமாக வருவாளோ...? என்று கண்கள் வாசலுக்கு நகர்ந்தன. அங்கே மகராசியின் தோழி புவனேஸ்வரி உள்ளே வரலாமா என்று கேட்கவா....வேண்டாமா என்பதுபோல தயங்கி தயங்கி வாசலில் நின்று கொண்டிருந்தாள். ஆசிரியர் பார்ப்பதைத் பார்த்ததும் "எங்க அம்ம தண்ணீ எடுக்க  அனுப்...

சாரியை என்றால் என்ன?

சாரியை என்றால் என்ன? ஒரு சொல்லைப் பிரித்து எழுதும்போது தனியாக எந்தப் பொருளையும்   உணர்த்தாமல் பெயர்ச்சொல்லையோ   வினைச்சொல்லையோ  சார்ந்து வரும் இடைச்சொல்லை  சாரியை என்கிறோம். பகுபத உறுப்புகள் பிரிக்கும்போது நம்மைத் தடுமாற வைப்பது இடைநிலையும் சாரியையும்தான். எது இடைநிலை? எது சாரியை? என்ற குழப்பம் எப்போதும் ஏற்படுவதுண்டு. அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பது எப்படி? சாரியை என்றால் என்ன? இடைநிலை என்றால் என்ன? விகுதி என்றால் என்ன? இந்தக் கேள்விகளுக்குத் தனித்தனியாக விடை தெரிந்தால்  மட்டுமே அவற்றை நாம் எளிமையாக அறிந்து கொள்ள முடியும். முதலாவது சாரியை பற்றித்  தெரிந்து கொள்வோம். சாரியை இரண்டு வகைப்படும். 1. எழுத்துச் சாரியை 2. பொதுச் சாரியை எழுத்துச் சாரியை: கரம்,காரம்,கான் ஆகிய மூன்று சொற்களும் எழுத்துச் சாரியைகளாகப்  பயன்படுத்தப்படுகின்றன. அதாவது உயிர் எழுத்துகள் பன்னிரண்டையும் அறிமுகப்படுத்தும்போது இந்த மூன்று சொற்களும் சாரியைகளாக வரும். " அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்ற முதல் குறளிலேயே வள்ளுவர் அகரம் என்று கரம் சாரியையை அறிமுகப்படுத்த...

பகல் கருதிப் பற்றா செயினும்.....

பகல் கருதிப் பற்றா செயினும்.... பகல் கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை"                   குறள் :  852 பகல் - வேறுபாடு கருதி - எண்ணி பற்றா - வெறுப்பன செயினும் -செய்தானாயினும் இகல் - மாறுபாடு கருதி - குறித்து இன்னா - தீங்கு செய்யாமை - செய்யாதிருத்தல் தலை- சிறப்பு. நம்மோடு மனம் வேறுபட்டு ஒருவன் விரும்பத்தகாத செயலைச் செய்தாலும் நாம் அவனோடு  மாறுபாடு கொள்ளாது அவனுக்கு எதிராக தீமை செய்யாதிருத்தலே சிறப்பு. விளக்கம் : ஒருவன் செய்கிற செயலில்  நமக்கு உடன்பாடு இல்லாது இருக்கலாம். அவனுக்கு நம்மீது நல்லெண்ணம் இல்லாதபோது வேறுபாடு கருதியே  அவன் நமக்கு எதிரான ஒரு செயலைச் செய்கிறான். அதற்காக நாமும் அவன் செய்ததுபோலவே அவனுக்கு எதிரான தீமையான செயல்களைச் செய்துவிட்டால் என்ன நிகழும்? பழிதான் வந்து சேரும். அவன் மனம் ஒத்துப் போகாத காரணத்தால் எனக்கும் அவனோடு  மாறுபாடு உண்டு .நானும் அவனுக்கு எதிராக தீங்கு செய்து விடுவேன் என்ற நினைப்பு ஏற்படுவது தவறு. அந்த நினைப்பு நம்மைப் பழிக்குப்பழி செய்ய வைக்கும். அப்படி தீங்கு செய்துவிட்...

உம்மைத் தொகை எண்ணும்மை வேறுபாடு

உம்மைத்தொகை எண்ணும்மை வேறுபாடு உம்மைத் தொகை ,எண்ணும்மை இவை இரண்டிற்குமான வேறுபாடு என்ன? இரணடும் ஒன்றுபோல் தானே இருக்கின்றன. அவற்றை எப்படி கண்டுபிடிப்பது? என்ற குழப்பம் பள்ளிப் பருவத்தில் பலருக்கும்  ஏற்படுதல் உண்டு. அதனால் நாலைந்து எண்ணும்மை சொற்களையும் உம்மைத்தொகையையும் அப்படியே மனப்பாடம் செய்து வைத்து விட்டுத் தேர்வு எழுதச் செல்வோம். அங்கே நாம் படித்ததை விட்டுவிட்டு வேறு ஒரு சொல் வந்திருக்கும். இப்போதுதான் என்ன பதில் எழுதுவது ?என்ற ஓர் ஐயம் ஏற்பட்டு ஏதாவது ஒன்றை எழுதி வைத்துவிட்டு வந்துவிடுவோம். இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கல்ல. சற்று புரிந்து படித்திருந்தால் ஐயம் எழுவதற்கான வாய்ப்பே வந்திருக்காது. தொகை என்றாலே தொக்கி நிற்பது அதாவது மறைந்து நிற்பது என்று பொருள். உம்மைத் தொகை என்றால் உம் என்ற சொல் மறைந்து நிற்கும் சொல் என்று பொருள். எடுத்துக்காட்டாக தாய்தந்தை தாய் தந்தை - உம்மைத்தொகை. தாயும் தந்தையும் என்று சொல்லும்போது இதில் உம்  வெளிப்படையாகத் தெரிகிறது. இவ்வாறு உம் வெளிப்படையாக தெரியும்படி எழுதியிருந்தால் அது எண்ணும்மை எனப்படும். தா...

சாதி இரண்டொழிய வேறில்லை

சாதி இரண்டொழிய வேறில்லை.... " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான்" என்றார் வள்ளுவர். பிறப்பால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டும் திறனுக்கு ஏற்ப வேறுபாடுகள் கண்டறிய முடியுமே  தவிர பிறப்பால் வேறுபாடு இல்லை. பிறப்பில் வேறுபாடு இல்லை எனில் இடையில் எங்கிருந்து நுழைந்தது இந்தப் சாதியப் பாகுபாடு.? உயர்ந்தவர் தாழ்ந்தவர் மேலோர் கீழோர் என்ற பகுப்பு எதனால் ஏற்பட்டது.? பணத்தால் எழுந்திருக்கலாம். செய்யும் தொழிலில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அது எப்படி ஒரு குறிப்பிட்ட  தொழில் செய்யும் பிரிவினர் தீண்டத்தகாதவர்  என்று ஒதுக்குவதற்கு காரணமாக இருக்க முடியும்?  தொழில் என்று பார்க்க வேண்டுமே தவிர  இது உயர்ந்த வேலை இது தாழ்ந்த  வேலை என்று சொல்ல முடியாது. ஒரு தொழிலில் தேர்ச்சி பெற்றவர் எல்லா தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார். அவரவர் தொழிலில் அவரவர் பெரிய  ஆளாக இருப்பார்.  சாதாரண கொத்தனார் வேலைதானே என்று   சொல்லுவோம்.  செய்து பாருங்களேன். அதிலுள்ள நுட்பம்  தெரியாமல் விழிபிதுங்கிப் போவோம்.  சமைய...

வாழ்த்தி வரவேற்கிறேன்

வாழ்த்தி வரவேற்கிறேன்  மகுடம் சூட்டிய நாள்முதலாக மணிமுடியில் வைரக்கற்களென நாளொரு திட்டம் தந்து மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி செய்கின்றீர்! தங்கள் திட்டங்கள் அத்தனையும் படைத்து வருகிறது புதிய வரலாறு அதனால் பெற்றுவிட்டீர் மதிப்பெண் நூற்றுக்கு நூறு! புகுந்த வீட்டில் மகிழ்வாக வாழ்ந்தாலும் பிறந்தவீட்டுப் பெருமை பேசும் சராசரி பெண்ணாக  தமிழகம் என் தாய்வீடு என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு தாயை இழந்தபின்  தாய்வீட்டுப் பெருமை பேசுவதில் ஏது மதிப்பு? ஏதிலியான மனநிலைதான் எம்மிடம் எப்போதும் உண்டு! தாயின் மடிமீது அமர்ந்திருந்து நிலாச்சோறு உண்டிருக்கும் குழந்தையை ஏக்கத்தோடு பார்த்து நிற்கும் அண்டை வீட்டுக் குழந்தை போல ஏக்கத்தோடு தமிழகத்தைப் பார்த்து நின்றேன்! "புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் "என்ற  ஒற்றை அறிவிப்பைத் தந்து உலகத் தமிழரின் உள்ளங்களைக் கற்றையாய் அள்ளிக் கொண்டீர்! "வா..தாய்வீட்டு அரவணைப்பும் பாதுகாப்பும் உனக்கும் உண்டு" என்றுரைத்த உம் கரிசனத்தை என்னவென்பேன்?  ஏது சொல்லி பாராட்டுவேன்? நன்றி என்ற மூன்றெழுத்தைச் சொல்லி அந்நியப்பட்டு நிற்க மனமில்லை உணர்வாய...