Posts

செந்தமிழ் நாடெனும் போதினிலே....

செந்தமிழ் நாடெனும் போதினிலே.... செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..." இந்தப் பாடலை உச்சரிக்கும் போதே உதடுகள் இனிக்கும். செவிகள் தேனினிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மகிழ்வில் சிலிர்க்கும். எத்தனை முறை கேட்டாலும்  இன்னொருமுறை இன்னொருமுறை என இதயம் கேட்கும். என் தமிழ்நாடு ....என் தமிழ்நாடு என்று உரக்கக் கத்த வேண்டும் என்று உள்ளம் துடிக்கும். தமிழ்நாட்டு வரலாற்றைப் படித்ததொரு நிறைவு இருக்கும். பாடியவர் பாரதியார் என்பது நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும் பாடல் எளிமையானது தான். பள்ளிப்பருவத்தில் அனைவரும் பாடி ஆடி மகிழ்ந்த பாடல். பாடல் உங்களுக்காக...                   செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர்  நாடென்ற  பேச்சினிலே- ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே             (   செந்தமிழ்.....) காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி-என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு       ...

பேனாவின் முனை....

Image
பேனாவின் முனை.... "பேனாவின் முனை வாளின் முனையைவிட கூர்மையானது " சொல் வீச்சுக்கு வாள் வீச்சைவிட வலிமை அதிகம். எழுத்தாளர் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் வாசகரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ஒரு வார்த்தையும் வெறுமனே திரும்பி வராது. காயங்களை ஏற்படுத்தவும் தெரியும். காயங்களுக்கு மருந்து போடும்  மருத்துவராக செயல்படும் சக்தியும் எழுத்துக்கு உண்டு. உணர்ச்சியைத் தூண்டும். உத்வேகத்தைத் தணிக்கும். மூடநம்பிக்கைக்குத் துணை நிற்கும். மூடநம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும். அந்தப்பக்கம் காற்று வீசுவதுபோல் இருக்கும். திடீரென்று எதிர்க்காற்று வீச ஆரம்பிக்கும். நேர்மறை ...எதிர்மறை ...என்று  முன்னூற்று அறுபது பாகையிலும் திரும்பி நின்று பேசும். "வாளின் வலிமையைவிட  எனது பேனா முனை கூர்மையான பலம் வாய்ந்தது. எனது எழுதுகோல்  ஒரு கொடுங்கோல் சாம்ராஜ்யத்தையும் அழிக்கும்.  ஒரு செங்கோல் ஆட்சியையும் உருவாக்கும் ""  என்றார் புரட்சி எழுத்தாளர்  வால்டேர். இவரது புரட்சி கருத்துகள்தான் பிரஞ்சு  புரட்சிக்கு வித்திட்டது. தேவையற்றதை அழித்து தேவையானதை ஆக்க நினை...

பிறந்தநாள் வாழ்த்து