Posts

வாள்போல பகைவரை அஞ்சற்க .....

வாள்போல பகைவரை அஞ்சற்க....           " வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு "                         குறள் : 882 வாள் - வெட்டும் ஒரு கூர்மையான கருவி போல் - போன்ற பகைவரை - எதிரியைக் கண்டு அஞ்சற்க - பயப்பட வேண்டாம் அஞ்சுக - பயப்படுவீராக கேள்போல்- உறவினர்போல் உடனிருக்கும் பகைவர்- எதிரி தொடர்பு - நட்பு, உறவு வாளைப் போன்ற வெளிப்படையான பகைவரைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை .ஆனால் உறவினரைப் போல இருந்து உட்பகை கொண்டிருப்பவரோடு தொடர்பு வைத்துக் கொள்ள அஞ்சுதல் வேண்டும். விளக்கம். :.   பகைவர் என்றால் வெளிப்படையாக  பகைமை கொள்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பகைவரிடம் நாம் எப்படி ஒதுங்கி வாழ்ந்து கொள்ள முடியுமோ அப்படி ஒதுங்கி வாழ்ந்து கொள்வோம். அதனால் அப்படிப்பட்ட பகைவரால் நமக்கு பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை. ஆனால் உறவினர்போல கூடவே இருந்துகொண்டு மனதிற்குள் பகைமையை வளர்த்துக் கொள்பவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் பகைவர் என்பது கடைசிவரை நமக்குத் தெரிய...

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே....

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.... நல்லவரையும் தீயவரையும் கொண்டதுதான் உலகு. நல்லவர் யார் என்பதற்கு நாம் ஓர் அளவுகோல் வைத்திருப்போம்.  தீயவர் யார் என்பதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. நாம் நல்லவர் என்று முடிவுசெய்து வைத்திருந்த ஒருவர் திடீரென்று தீயவராக மாறிவிடுகிறார். தீயவர் பல நாட்களாக நல்லவராக நம் கண்களுக்குத் தெரிந்திருக்கிறார். இதுதான் உண்மை. இது என்ன? இது நம் பார்வையில் ஏற்பட்ட கோளாறா? அல்லது உண்மையிலேயே அப்படித்தான் நிகழ்ந்துள்ளதா? நம்பமுடியவில்லை....வில்லை...வில்லை... அவரா இவர்? அவரா இப்படி மாறிப் போனார். சொல்லிச் சொல்லிப் புலம்புகிறோம். நல்லவர் திடீரென்று இப்படி கெட்டவராக மாறமுடியுமா? யாரிடம் போய் கேட்டு என் ஐயத்தைத் தீர்த்துக் கொள்வது?  அங்கேயும் இங்கேயும் தேடி கடைசியில்  கண்ணில் பட்டது அதிவீரராம பாண்டியன் எழுதிய  வெற்றி வேற்கை.   புரட்டினேன். நல்லவர் எப்படி கெட்டவர் ஆவார்.? ஒருநாளும் அது சாத்தியமில்லை என்று உச்சந்தலையில் ஓங்கியடித்துச் சொல்லித் தந்தார் அதிவீரராம பாண்டியன். ஆமா இல்ல...! இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறதே....அப்படியானால் நல்லவ...

அம்மாவும் நானும்

அம்மாவும் நானும் அம்மா...! இந்தச் சொல்தான் எத்துணை இனிமை! முதலும் முடிவுமாய் நம்மோடு பயணமாகும் இந்தச் சொல்லை எத்தனை நாள் எத்தனை இடங்களில்  உச்சரித்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? ஓராயிராம் முறை.... இல்லை....இல்லை . ஒரு கோடி முறை.... ம்கூம்.... எண்ண முடியாத நாட்கள்? அதுவும் இல்லை.  ஒருநாளும் இல்லை. அம்மா என்று ஒருநாளும் நான் அழைத்ததில்லை. என்ன ...அம்மா என்று அழைத்ததில்லையா? அம்மா என்று அழைக்காத உயிரில்லையே! இங்கே அம்மா என்று அழைக்காத ஓர் உயிருள்ளதே..... அம்மா.....அம்மா.... நீ சுமந்த பிள்ளை..... பொய் சொல்கிற கிள்ளை என்று புலம்பணும்போல் இருக்கிறதல்லவா! நான் ஏங்க பொய் சொல்லணும்? நான் ஒருமுறைகூட அம்மா என்று கூப்பிட்டதில்லை. " ஏன்? அம்மா என்றால் உங்களுக்குப் பிடிக்காதா என்பீர்கள்?" "அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? " 'அம்மா என்று கூப்பிட்டதில்லை என்கிறீர்கள்.  பிடிக்கும் என்கிறீர்கள்....  ஒரே குழப்பமாக இருக்கிறது. தலையைப் பிய்த்துக்கொண்டு ஓடிவிடலாம் போல இருக்கிறது."  என்று ஓட நினைக்கிறீர்களல்லவா! அட...எங்க போறீங்க... நின்று நான் சொல்ல வந்ததைக் கேட்டு வி...

தொல்காப்பியர் கூறும் ஆறறிவு

தொல்காப்பியர் கூறும் ஆறறிவு அறிவு என்றதுமே மனிதனுக்கு மட்டுமே உரியது. வேறு எந்த உயிருக்கும் அறிவு என்பதே கிடையாது என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் வேறு விலங்குகளையோ  உயிர்களையோ ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. செடிக்கு உயிருண்டு என்று படித்திருக்கிறோம். ஆனால் இலைகளைப் பறித்து வீசிக் கொண்டே செல்வோம். அவற்றிற்கும் உணர்வு உண்டு என்ற சிந்தனையே மனதில் இருக்காது. நாயைக் கண்டதும் கல்லை எடுத்து வீசுவோம். நாய் பேச முடியாததால் அதற்கு என்ன அறிவு இருக்கப்போகிறது என்று மட்டமாக நினைத்துக் கொள்வோம். ஒரு செயலுக்கு எதிர்வினை ஆற்றும் திறன் இருந்தாலே அந்த உயிருக்கு அறிவு இருக்கிறது என்றுதானே கருதப்பட வேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? படித்தால் மட்டுமே அறிவு பெற முடியும். படிப்பறிவு பெற்றவர்கள் மட்டுமே அறிவுடையவர்கள். புத்தகம் வாசிக்கத் தெரியாதவர்கள் அறிவற்றவர்கள். பணம் பண்ணத்  தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள். நல்ல பதவியில் இருப்பவர்கள் மேலான அறிவுடையவர்கள் என்று அறிவுக்கும் அறிவின்மைக்கும் ஒரு வரம்பு வைத்திருக்கிறோம்.   மனிதர்களையே ஒரு சாரார் அறிவற்றவர்கள் என்று நாம் ஒதுக்கி வைத்...

குடிசெய்வல் என்னும் ஒருவற்கு....

Image
குடிசெய்வல் என்னும் ஒருவற்கு..... குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடித்தற்றுத் தான்முந் துறும்"                  குறள் :    1023 குடி- குடும்பம், குடிமக்கள் செய்வல்- உயரச் செய்வேன் என்னும் - என்ற உறுதியோடு ஒருவற்கு- உழைக்கும் ஒருவர்க்கு தெய்வம்- கடவுள் மடி - ஆடை தற்று - இறுக பற்றிக்கொண்டு தான்- தானாகவே முந்துறும்  - முன் வந்து உதவி நிற்கும் என் மக்கள் உயரச் செய்ய கடமைப்பட்டுள்ளேன் என்ற உறுதியோடு உழைப்பவர்க்கு தெய்வம் தாமாகவே முன் வந்து வரிந்து கட்டிக்கொண்டு துணை புரியும். விளக்கம்: குடிசெய்வானுக்குத் தெய்வம் துணை நிற்கும். எவ்வளவு எளிமையாக சொல்லிவிட்டார் வள்ளுவர். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்தோரும் உயர வேண்டும் என்ற நல்லெண்ணம்  ஒருவர்க்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையோடு  உழைப்பவர்க்கு தெய்வம் தாமாக வலிய முன் வந்து உதவும். குடிசெய்வல் என்றால் என்ன? தன்னைச் சார்ந்தவர்கள் வாழ்வு உயர வேண்டும் என்று உழைப்பவரையே வள்ளுவர் குடிச்செய்வல் என்கின்றார். அப்படிப்பட்டவர்க்கு மடித்தற்று தான் முந்துறுமாம...

வல்லணங்கு

Image
வல்லணங்கு அவளுக்கும் எனக்கும் அப்படி என்னதான் இருக்கிறது? ஏனிந்த கண்ணாம்மூச்சு விளையாட்டு.? என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை. யாரிடம் போய் கேட்பது? என்ன கேட்பது? சே...சே....யாராவது தப்பாக நினைத்து விட்டால்..... அதற்காக? மனசுக்குள்ளே  வைத்துப் பூட்டி வைக்கப் போகிறாயா? நீ மூடி மறைத்தால்.... யாருக்கும் தெரியாமல் போய்விடுமா? தெரிகிற காலத்தில் தெரிந்துவிட்டுப் போகட்டும் என்று சாதாரணமாக  விட்டுவிடுகிற காரியமா இது? நீரு பூத்த நெருப்புபோல உள்ளுக்குள்ளேயே வைத்து எத்தனை நாள் கனன்று கொண்டிருப்பது? விடை தேட முடியாமலும்  விடை கேட்க முடியாமலும்  ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. இதற்கிடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எத்தனையோ நிகழ்வுகள்! அவை எல்லாம் நடந்து முடிந்த சிறிது காலத்தில் துடைத்துப் போட்ட வானமாக  மனம் ஒன்றுமில்லாமல் ஆனது.  அப்படியே போயிருக்கலாமே? இடையில் ஏன் இந்த இணக்கும் பிணக்கும்.? இணக்கம் இல்லாது ஓடிய நாட்கள் இனிமையாக இருந்தன யாரைப் பற்றிய சிந்தனையும் இல்லை. ஆனால் இடையில் இந்த ஒட்டு வேண்டும் என்று யார் அழுதது? விதி செய்த சதியா? சதிகாரர்கள் பின்னிய ப...

கவிதையே நீதானே அம்மா

Image
               கன்னிக் குடம் உடைத்து கன்னி என்னைக் கண் திறக்க வைத்து கன்னி முத்தம்  கன்னத்தில் தந்து கன்னித் தமிழ்ப்  பேசி  கன்னிநடை பயிற்றுவித்து கன்னித் திங்கள் காட்டி  கன்னி மதிசூழ் முகம்  கன்னிவிடாமல்  காத்த  கன்னி இளஞாழலான   கனியம்மா உன்னோடு  கன்னித் தமிழ் மொழியில்  கன்னி நெக்குருகி பேசிய  கவின்மிகு நினைவின் களிப்பில் மிதக்கிறேன் கண்டாங்கிக்குள் காலமெல்லாம் கண்மூடி கிடக்க நினைக்கிறேன் கவித்தார் காலடியில் வைத்து காணத் தவிக்கிறேன்-என் கவிதையே நீதானே அம்மா! அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.