Posts

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை....

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை...! " யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற "                   குறள் :    300 யாம் -நான் மெய்யாய்- மெய்யாக கண்டவற்றுள்-அறிந்தவற்றுள் இல்லை-காணப்படவில்லை எனைத்தொன்றும்-வேறு ஏதேனும் வாய்மையின்-உண்மையினும் நல்ல - நல்லன பிற -மற்றவை நான் மெய்யாக அறிந்தவற்றுள் மெய்மையைக் காட்டினும் வேறு ஏதேனும் சிறந்ததாகச் சொல்லத் தக்கது வேறு எதுவும் இல்லை. விளக்கம்: வாய்மையே எல்லா அறங்களிலும் தலையாய அறமாகக் கருதப்படுகிறது. வாய்மையை ஒரு ஒழுக்க நெறியாக கடைபிடித்துவருபவனிடம் வேறு எந்தத் தீய குணமும் அண்டாது. பொறாமை இருக்காது. புறங்கூறும் பண்பு கிடையாது. திருட்டு இருக்காது. யாரிடமும் சினம் கொள்ள மாட்டான். குற்றங்களில் ஈடுபட அஞ்சுவான். தன்னால் ஒப்புக்கொள்ளத்தக்க செயலை மட்டுமே செய்வான். அவனுடைய நெஞ்சம் எப்போதும் தூய்மையாகவே இருக்கும். நெஞ்சத்தைத் தூய்மை செய்யும் வாய்மைக்கு முன்னர் வேறு எந்த அறமும் நிற்க முடியாது. ஆதலால் வாய்மையே  முதன்மையான அறம். அதனால்தான் யான் மெய்யாய்க்  கண்டவற்றுள் இல்லை...

சங்க இலக்கியத்தில் உவமை

சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியம் என்றதுமே  அது படித்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதுபோல முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு ஒதுங்கி  நின்று விடுவோம். காரணம் பல சொற்கள் பொருள் புரியாததுபோல இருப்பதுதான். படித்தவர்களும் இதைப்போய் யார் படிப்பார்கள் என்று சாதாரணமாகக் கடந்து போய்விடுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள் மட்டும் மாங்குமாங்கென்று படித்து தமிழ் இலக்கிய இன்பத்தை நுகர்ந்து மகிழ்ச்சியில் வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே சங்க இலக்கியம் படித்தவர்களுக்காக எழுதி வைக்கப்  பட்டதா? நமது வாழ்வியலைச் சொல்வதுதான் இலக்கியம். நாம் பார்த்த... நம்மோடு பழகிய .. இன்றும் நாம் கண்டு சுவைக்கக் கூடிய நடைமுறை செயல்பாடுகளைக் கண்முன்  கொண்டு நிறுத்துவதாகவே இலக்கியங்கள்  இருக்கின்றன.   படிக்கப் படிக்கத் தான் இந்த  உண்மை புரியும்.   அந்த அழகியலை  அருமையான சொல்லோவியத்தை சங்க இலக்கியப் பாடல்களில்  நான் கண்டு வியந்ததுண்டு. நான் வியந்து பார்த்த அந்தக் காட்சியை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்த விழைகிறேன். அந்தக் காட்சி உங்களுக்குள்ளும்  இலக்கியம்...

எட்டாம் நம்பர் வீடு

Image
எட்டாம் நம்பர் வீடு "எட்டாம் நம்பர் வீட்டை எட்டிப்பார்காதே...எட்டிப்பார்க்காதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். நீ கேட்க மாட்டியா..."காதைப்பிடித்துத் திருகினார் அம்மா. "ஏன் போனால் என்னவாம்?" குதர்க்கமாகக் கேட்டேன். "போகாதே என்றால் போனால் என்னவாம்? எதிர்த்தா பேசுற.....? இனி ஒருவாட்டி எதிர்த்துப் பேசினா வாயிலேயே போடுவேன். " அம்மா ஆத்திரத்தில் கையைப் பிடித்து இழுத்துக் கூட்டிக்கொண்டு போனார். "போகல தாயி....போகல.... எதுக்கு எட்டாம் நம்பர் என்றதும் இப்படி பயப்படுகிறாய்? அதைச் சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கிடுவேன் இல்லியா?" ஓர் ஆர்வத்தில் கேட்டேன். "உனக்குச் சொல்லிட்டுத்தான்  மறுவேலை பார்க்கணும். எப்பப் பார்த்தாலும் ஏன்? எதற்கு? என்று ஆயிரெத்தெட்டுக் கேள்வி... வாயை கொஞ்ச நேரம் கூட சும்மா வைக்க மாட்டியா?" அம்மா முணுமுணுத்தபடியே  முகத்தில் முத்துமுத்தாக அரும்பி இருந்த  வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டார். ஏன் எட்டாம் நம்பர் வீடு என்றதும் அம்மா இப்படிப் பயப்படுகிறார்? எதற்கு அம்மாவுக்கு வியர்த்து  கொட்டுகிறது. பேச்சில் அம்மா...

பாவ் பாஜி செய்வது எப்படி?

Image
  பாவ் பாஜி செய்வது எப்படி? பாவ் பாஜி என்ற பெயரைக் கேட்டதுமே  இப்போதே தின்ன வேண்டும் போல் நாக்கில் எச்சில் ஊறும். அதன் மணமும் சுவையும் நம்மை அப்படியே  கட்டிப்போட்டு விடும். வேறு எந்த உணவுக்கும் இல்லாத  ஈர்ப்புசக்தி  பாவ் பாஜிக்கு உண்டு. ஊரில் இருக்கும்போது இது எதுவும் தெரியாது. தோசை, இட்லியை தவிர வேறு என்ன தெரிந்திருக்கும் என்று நினைப்பீர்கள். உண்மையும் அதுதான். மும்பை கற்றுக்கொடுத்தவை ஏராளம். எங்கு சென்றாலும் உணவுதானே முதல் தேவை. அந்தத் தேவையை நாடிச் செல்லும்போது என்னை ஈர்த்ததுதான் இந்த பாவ் பாஜி. சாதாரணமான ஒரு ஹோட்டலுக்குள் சென்றால் நீங்கள் ஏதோ ஒன்று சாப்பிட்டுவிட்டு வர வேண்டும் என்று நினைத்து சென்றிருப்பீர்கள். ஆனால் ஹோட்டல் வாசலுக்கு  அருகில் வெளியிலேயே  ஒரு மசாலா தயாராகிக் கொண்டிருக்கும். அதன் மணம் உங்களை அந்தப்பக்கம்  திரும்பிப் பார்க்க வைக்கும். ஹோட்டலுக்குள் சென்று உட்கார்ந்ததும் ஒரு பிளேட் பாவ்பாஜி என்றுதான் ஆர்டர் பண்ணுவோம். அந்த அளவுக்கு அதன் மணம்  நம்மைத் தன்பக்கம் இழுக்கும். மணம் மட்டும்தானா? சுவை ....அப்பப்பா.. வெறும் பாவுக்கு எ...

தன்வினை பிறவினை

தன்வினை பிறவினை விளக்கம் ஒரு செயலைத் தானே செய்வது தன்வினை எனப்படும். ஒரு செயலைச் பிறரைக் கொண்டு  செய்விப்பது பிறவினை எனப்படும். எடுத்துக்காட்டாக சேர்வான்,சேர்ப்பான் என்ற இரண்டு சொற்களையும் எடுத்துக் கொள்வோம். தானே சேர்தலாகிய தொழிலைச் செய்கிறான்.ஆதலால் சேர்வான் என்பது தன்வினை. சேர்ப்பான் என்பது வேறு யாரையோ சேரும்படி இவன் செய்வான் என்று பொருள்படுகிறது. அதனால் சேர்ப்பான்  என்பது பிறவினையாயிற்று. தன்வினை செயப்படுபொருள்  குன்றிய வினையாகவோ செயப்படுபொருள் குன்றாத வினையாகவோ இருக்கும். பிறவினை செயப்படுபொருள் குன்றாத வினையாகவே இருக்கும். இப்போது செயப்படுபொருள் குன்றிய வினை , செயப்படுபொருள் குன்றா வினை என்றால் என்ன என்ற கேள்வி எழலாம். செயப்படு பொருளை ஏற்காத வினை செயற்படு பொருள் குன்றிய வினை எனப்படும். எதை? யாரை?  என்ற இரண்டு கேள்விகளுக்கு விடை தரமுடியாத வினை செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும். எடுத்துக்காட்டாக  போனான் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். எதைப் போனான்? யாரைப் போனான்? என்று கேள்விகள் கேட்க முடியுமா? முடியாதல்லவா? வாசிக்கும் போதே தவறாக இருப்பது புரிகிறதல்லவா? இத...

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு....

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு.... மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் "                        குறள் :942 மருந்தென- மருந்து என்று ஒன்று வேண்டாவாம் - வேண்டியதில்லை யாக்கைக்கு - உடம்புக்கு அருந்தியது- உண்டது அற்றது- செரித்தது போற்றி- கவனித்து உணின்- உண்டால் முன்பு உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு உண்பவர்களின் உடலுக்கு மருந்து என்று ஒன்று தேவையில்லை. விளக்கம் : உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்த பின்னர் மறுபடியும் உண்ண வேண்டும். கிடைக்கிறது என்று வயிறு முட்ட மறுபடியும் மறுபடியும் உண்ணுதல் கூடாது. உணவு செரிக்கும் நடைபெற போதிய இடைவெளி இல்லாது உணவு உண்டால் செரிமானம் சீராக நடைபெறாது. செரிமானம் சீராக நடைபெறாவிட்டால் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும். எல்லா சிக்கல்களும் முதலாவது வயிற்றிலிருந்து தான் தொடங்கும். உணவு சிக்கல் தராதிருந்தால் உடலிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்காது. உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி அறிந்து அதன் பின்னரே உண்ணுங்கள். அதுதான் நோய் வராமல்  நம்மைப் பாதூகாக்கும். ம...

தீவக அணி என்றால் என்ன?

தீவக அணி என்றால் என்ன? தீவகம் என்றால் விளக்கு என்று பொருள். அறையின் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள  விளங்கானது அவ்வறை முழுவதும்  வெளிச்சம் தந்து விளக்குதல் போலச்  செய்யுளின் ஓரிடத்தில் வரும் ஒரே ஒருசொல் அச்செய்யுளின் பல இடங்களுக்களிலும் உள்ள  சொற்களோடு சென்று பொருந்திப்  பொருளை விளங்குவதால் இவ்வணி தீவக அணி எனப்படுகிறது. "குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒருசொல் ஒருவயின் நின்றும் பல்வயின் பொருள் தரின் தீவகம் செய்யுள் மூவிடத்து இயலும்" என்கிறது தண்டியலங்காரம். ஒரு குணத்தையோ தொழிலையோ இனத்தையோ பொருளையோ குறிக்கும் ஒரு சொல் செய்யுளின் ஓரிடத்தில் நின்று அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவகம் என்பது தீவக அடித்துத் தண்டியலங்காரம்  தரும் இலக்கணமாகும். தீவக அணி மூன்று வகைப்படும். 1. முதல் நிலைத் தீவகம் 2. இடைநிலைத் தீவகம் 3. கடைநிலைத் தீவகம் 1. முதல் நிலைத் தீவக அணி:    பாடலில் தீவகமாக வரும் சொல்   முதலில் வந்தால் அது முதல்நிலைத்   தீவகம் எனப்படும்.       "சேந்தன வேந்தன் திருநெடுங்...