Posts

பொருளல் லவரைப் பொருளாகப் செய்யும்....

Image
      பொருளல் லவரைப் பொருளாகப் செய்யும்.... "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்  பொருளல்ல தில்லை பொருள்"                         குறள்    : 751 பொருளல்லவரை- மதிக்கபடத்தக்க பண்பு                                         இல்லாதவரை  பொருளாக - மதிப்புடையவராக  செய்யும் - செய்யக்கூடியது  பொருள் - செல்வம் அல்லது - அல்லாமல் இல்லை - இல்லை பொருள் -(  வேறு )பொருள் ஒருபொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அந்தச் செல்வத்தைத் தவிர  சிறந்த  பொருள் உலகில் வேறு ஒன்றும் இல்லை. விளக்கம் :  செல்வம்தான் ஒருவனுக்கு மதிப்பும் மரியாதையையும் பெற்றுத்தரும். ஒரு மதிப்பும் இல்லாதவரையும்  மதிப்புடையவராக மாற்றும் வல்லமை செல்வத்திற்கு உண்டு.  மக்கட் செல்வம், கல்விச் செல்வம் அறிவுச் செல்வம் ,பொருட்செல்வம் என்று எல்லாவற்றையும் செல்வமாகக் கருதுகிறோம். நா...

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து சிந்தும் சிரிப்பலையே முந்தும் மொழியலையே நடமாடும் பல்கலையே எழிலாடும் புன்னகையே நற்றிணையே !நல்லறிவே! முத்தமிழே !முழுநிலவே! கவித்தேனே!கற்கண்டே! பேசும் சொற்களஞ்சியமே ! என்னவென் றழைப்பேன்? ஏதுசொல்லி அறிமுகம் செய்வேன்? மும்பை மாநகராட்சியின் அறிவுப் பெட்டகமே! நின்பால் கற்றதும் பெற்றதும்  ஏராளம் ஏராளமே!  பேரறிவாட்டிக்கு வாழ்த்துரைக்கும் பெரும்பேறு வாய்த்தது என்றன் நற்பேறென்பேன்  நீலமணிமிடற்று ஒருவன் போல  மன்னுக பெரும நீயே! என்ற வாழ்த்துனக்கு அனுப்பி வைத்தேன்  வாழ்க பல்லாண்டு ....பல்லாண்டு...  பல்லாயிரம் ஆண்டு..  ராஜேஸ்வரியும் சிரிப்புமாய்  இணைந்து!                                    -செல்வபாய் ஜெயராஜ்   

அறம் செய்ய விரும்பு

Image
அறம் செய்ய விரும்பு அறம் செய்ய விரும்பு என்று நான் தொடங்கி விட்டுவிட்டால் போதும். அறம் செய்ய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல்  ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல்.... .... ... .... என்று கடகடவென்று ஒப்பித்து விடுவீர்கள். நானும் உங்கள் ரகம்தான். ஆத்திசூடிக்கும் நமக்கும் பெரிய நெருக்கம் உண்டு. ஆத்திசூடியை நெஞ்சிலேயே குடி வைத்திருப்போம். நேரம் வரும்போதெல்லாம்  சொல்லி சொல்லி மகிழ்வோம். ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது ஒருநாள் பள்ளிக்கு ஆய்வாளர்  வந்திருந்தார். மனப்பாடச் செய்யுள்  தெரியுமா ?என்று கேட்டார். எந்தப் பாடல் என்ற கேள்வி எதுவுமில்லாமல்  "அறம் செய்ய‌விரும்பு ஆறுவது சினம்....  என்று ஒட்டு மொத்த வகுப்பும் உயிர் வருக்க  ஆத்திசூடி முழுமையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தோம். இடையில் நிறுத்தவே இல்லை. ஆய்வாளர் பாராட்டினார். அடுத்து அறம் செய்ய விரும்பு என்றால் என்ன என்று தெரியுமா?  என்று கேட்டார் . அவ்வளவுதான். ஒருத்தரும் வாயைத் திறக்கவில்லை. திருதிரு என்று விழித்துவிட்டு ஆசிரியரையே பார்த்தோம். ஆசிரியர் சொல்லிக் கொடுக்கவ...

யானை வெட்கப்படுமா?

Image
யானை வெட்கப்படுமா? பெண்களுக்கு உரிய நான்கு நற்பண்புகள் என்னவென்று கேட்டால் அச்சம்,மடம், நாணம்,பயிர்ப்பு என்று சொல்லிவிடுவீர்கள் . அதனைக் கேட்டுக் கேட்டு பழகிவிட்டோம். அச்சம் என்றால் பயம். மடம் என்றால் அறியாமை. நாணம் என்றால் வெட்கம் பயிர்ப்பு என்றால் கூச்சம் என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதனால் நன்கு தெரிந்து வைத்திருக்கிறோம். இந்த நான்கு பண்புகளும் பெண்களுக்கே  உரியது என்று உயர்த்திப் பேசி வருகிறோம். கொண்டாடி மகிழ்கிறோம். இதில் நாணம் மட்டும் பெண்களுக்கே உரிய சிறப்புப் பண்பு என்று கூடுதலாகத் கொண்டாடுகிறோம். நாணம் பெண்களிடம் மட்டும்தான் காணப்படுமா? வேறு யாரும் நாணப்படவே மாட்டார்களா?  ஆண்கள் வெட்கப்பட்டால்... நன்றாகவா இருக்கும் என்பீர்கள். மனிதர்களைத் தவிர வேறு யாரிடம் நாணம் இருக்கப்போகிறது? வேறு யாரிடமும் நாணம் இருக்காதா? இருக்கக் கூடாதா? என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஏன் இருக்கக் கூடாது? நான் பார்த்த ஒரு யானையிடம் நாணம்  இருந்ததைப் பார்த்தேன் என்கிறார் ஒரு புலவர். யானையிடம் நாணத்தைப் பார்த்தாராமா? யாரப்பா அந்தப் புலவர்? அப்படி எந்த யானையிடம் ... எந்த இடத்தில் ...

அச்சம் தவிர்

Image
            அச்சம் தவிர் " அறம் செய்ய  விரும்பு " என்று தனது ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார்  ஔவை. பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை " அச்சம் தவிர் "என்று  தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார்.   முதல் வரி மட்டும்தான் தன்னம்பிக்கை கொடுக்கிறதா?  இரண்டாம் வரியைப் பாருங்கள்.  " ஆண்மை தவறேல்" அதாவது மன வலிமையை இழக்காதே! இதுவும் நம்பிக்கை தரும் வரி  இல்லையா? அதைத் தொடர்ந்து மூன்றாவதாக என்ன சொல்லியிருக்கிறார் என்றால்... " இளைத்தல் இகழ்ச்சி" என்கிறார். அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக் கூடாதாம்..அது இகழ்வடைவதற்குக் காரணமாக அமைந்துவிடுமாம். எப்படித்  தட்டி எழுப்பிக் கொண்டே வருகிறார். பாரதியின் பாடல்களில் எல்லாம் ஒரு எழுப்புதல் இருக்கும். இந்த ஒரு துள்ளல் உணர்வு இருப்பதுதான் பாரதியின்  பாடல்களில் நாம் கட்டுண்டு கிடப்பதற்கான மந்திரம் என்று நினைக்கிறேன்.    பாரதியின் பாடல்கள் என்றாலே ஒரு இளமையின் துள்ளலும்  உயிரோட்டமான உணர்வும்  உணர்ச்சியூட்டலும் கொண்டதாகவே இருக்கும். எதற்கும் அஞ்சா துண...

சொற்பொருள் பின்வருநிலை அணி

பின்வரு நிலை அணி ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ பின்னர்ப்  பல இடங்களில் வந்தால் அது  பின்வரு நிலை அணி எனப்படும். " முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின் பின்வரும் என்னில் பின்வருநிலை நிலையே" என்கிறது தண்டியலங்காரம் என்னும்  இலக்கண நூல். பின்வரு நிலை அணி மூன்று வகைப்படும். 1. சொல் பின்வருநிலை அணி 2. பொருள் பின்வருநிலை அணி 3. சொற்பொருள் பின்வருநிலை அணி 1. சொல் பின்வருநிலை அணி:  ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல் பின்னர்ப்  பல இடங்களில் வந்தால் அது சொல்   பின்வருநிலை அணி  எனப்படும் . சொல் பலமுறை வரும்.  ஆனால் ஒரே பொருளில் வராது.  பொருள் வெவ்வேறாக இருக்கும். எடுத்துக்காட்டு: "குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்"                           -   திருக்குறள் குன்று போல உயர்ந்த பெருமை உடையவர்கள் குறுகிய அளவு இழிச்செயலைச் செய்துவிட்டாலும் அவர்கள் பெருமை குறைந்து விடும். குன்று என்பது மலை என்ற பொருளிலும் குறுகிய  என்ற பொருளிலும் குறைந்துபோகும் ...

பண்னென்னாம் பாடற் இயைபின்றேல்....

Image
பண்னென்னாம் பாடற் கியைபின்றேல்.... " பண்னென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்" பண் - இசை என்னாம்- என்ன பயன் பாடற்கு -பாடலோடு இயைபு- பொருத்தம் இன்றேல்- இல்லையாயின் கண்- விழி என்னாம்-என்ன பயன் கண்ணோட்டம் - இரக்கம் இல்லாத- இல்லாத  கண்- இடத்து. பாடலோடு இசை பொருந்தவில்லை  என்றால் இசையால் என்ன பயன் ? அதுபோல கருணை இல்லையென்றால் கண்களால் என்ன பயன்? விளக்கம் : பாடல் என்றால் அது இசையோடு ஒத்துப் போவதாக இருக்க வேண்டும். இசையோடு ஒத்துப் போகாத பாடல் கேட்பதற்கு இனிமை தராது. .தாளம் தப்பாமல் இசையோடு இருப்பதுதான் பாட்டு. அதுபோல கண் என்றால் அது வெறுமனே பார்ப்பதற்கு மட்டும் பயன்படுவதாக இருத்தல் கூடாது.அதில் உணர்வு இருக்க வேண்டும். அதாவது கருணை, இரக்கம் இருக்க வேண்டும்.துன்பப்படும் ஒருவரைப் பார்த்துவிட்டு பாராததுபோல் கடந்து போவதற்குக் கண்கள் எதற்கு? உணர்ச்சியற்று கடந்து போவதற்காக கொடுக்கப்பட்டவை அல்ல கண்கள். கண்கள் என்றால் அதில் உணர்வுகள் இருக்க வேண்டும். அதுவும் கருணை செய்யும் கண்களாக இருக்க வேண்டும். கருணையும் கனிவும்  இருந்தால்தான் அது கண். அது இல்லை என்...