Posts

விலங்காபிமானம்

Image
  விலங்காபிமானம் தொலைவில் பறக்கும் பறவையைத்  தொடர்ந்து பலநாள் பார்த்தபடி சிறுவன் ஒருவன் நின்றிருந்தான் கண்ணால் கடிதம் எழுதியே கருணை மனு அனுப்பி வந்தான் காட்சிப் பொருளாய் நின்றிருந்தும்  பறவை கூட்டம் யாவுமே பாராமுகமாய்ச் சென்றன பச்சைக்கிளி ஒன்று மட்டும் பக்கம் வந்து அமர்ந்தபடி பரிவாய் முகத்தைப் பார்த்தது தம்பி உன்றன்  கண்களிலே கவலை இருப்பதைப் பார்க்கிறேன் ஏதுன் குறை என்றுரைத்தால் இயன்ற மட்டும் உதவுவேன் என்றே சொல்லி நின்றது பலநாள் வீட்டில் அடைபட்டு மனசு நொந்து கிடக்கிறேன் முடமாகித்தான் போவேனோ? முழுசாய் உலகை மறப்பேனோ? நாலுந் தெரியா சிறுவனாய் அறைக்குள் அடங்கிக்  கிடப்பேனோ? பள்ளி என்பதை நான் மறந்து  பலநாள் ஆகி போயிற்று ஓடி ஆடும் நாட்கள் எல்லாம் இனியும் எனக்கு வாராதோ? துளியும் தவறு செய்யா எம்மை முடங்கிப் போடுதல் ஞாயமோ? மனசு நொந்த சிறுவனும் நீர்வார்க் கண்களோடு  நீதி கேட்டு நின்றிட்டான்  துள்ளித் திரியும் பருவத்தில் துவண்டு கிடத்தல் ஆகாது  என்னால் ஒன்றும் இயலாது  என்றன் பறவைகள் கூட்டத்தில் உன்றன் பிரச்சினையை எடுத்துரைத்து ஏதும் வழி உ...

ஒரு க்ளூ கொடுக்க முடியுமா?

Image
                        செய்தி சொல்லும் சேதி -8                                 ஒரு     க்ளூகொடுக்க முடியுமா?                                        "அக்கா அக்கா .... ஒரு க்ளூ கொடுங்கக்கா....ப்ளீஸ் ஒரு க்ளு கொடுத்தால் உடனே கண்டு பிடிச்சுருவேன்" "இதுவரை நான்கு க்ளூ கொடுத்தாயிற்று.... இதற்கு மேலும் என்னால் க்ளூ கொடுக்க முடியாது. தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லேன். இதற்குபோய் ஒரு க்ளூ கொடு...ஒன்பது க்ளூ கொடு என்று கெஞ்சுறா....?" "கொஞ்சம் புரியும்படி  க்ளூ கொடுத்தால் சட்டென்று பதில் சொல்லிருவேன்." "தெளிவாக சொல்லணும் என்றால் விடுகதைக்கான விடையை  நேரடியாக நானே சொல்லி விடலாமே இதற்குப் போய் க்ளூவா? இப்படி க்ளூ கொடுங்கள் க்ளூ கொடுங்கள் என்று கேட்கிறியே. க்ளூ என்றால் என்ன?என்று தெரியுமா ?" "க்ளூ என்றால்  துப்பு கொடுத்த...

உவமை அணி

        உவமை அணி அணி இல்லாத கவிதை மணி இல்லாத மாலை போன்றது. கவிதையின் அழகுக்கு அழகு சேர்ப்பது அணி இலக்கணம். அழகோடு மட்டுமல்லாமல் சொல்ல வந்த கருத்தை எளிதாக புரிய வைப்பதற்காகவும் செய்யுளில் உவமை கையாளப்படுதல் உண்டு. அணி இலக்கணத்தில் முதன்மையான அணி உவமை அணியாகும். ஒரு பொருளை விளக்குவதற்காக அதனோடு ஒப்புமை உடைய இன்னொரு பொருளை உவமையாகக் கூறி விளங்க வைப்பதை உவமை அணி  என்கிறோம். உவமை நாம் அன்றாடம் கேட்ட சொற்களாகத்தான் இருக்கும். "ஆஹா.....இந்த மாம்பழம் தேன் போல  இனிக்கிறது "என்று சொல்லிச் சொல்லி  சுவைத்திருப்போம். ஏதாவது மருந்தைப் குடிக்கும்போது "பாகற்காய் போல கசக்கிறது "என்று சொல்லி குடிக்க மறுத்திருப்போம். "நீர் அருவி போல கொட்டியது" என்று சொல்லக் கேட்டிருப்போம் . "ஒத்த பிள்ளை என்று கறிவேப்பிலை  கண்ணுபோல வளர்த்தேன் "என்று அம்மாக்கள்  சொல்லுவதைக் கேட்டிருப்போம். "பிள்ளை என்றால் பக்கத்து வீட்டு   ரவி போல இருக்கணும்.நீயும் இருக்கியே...." என்று அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். "அந்தப் பெண்ணுக்குப்  பூப்போல மனசு " என்று  சொல்லியிருப்...

திருவள்ளுவர் பார்வையில் காகம்

திருவள்ளுவரின் பார்வையில் காகம் காகம் அல்லது காக்கை  பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கண்ணோட்டம் உண்டு.  காகம் என்றால் சிலருக்கு  ஓர் அலட்சியம்.    கருப்பாக இருப்பவர்களை அண்டங்காக்கா   என்று இழிவாகப் பேசுவர்.    கூட்டமாக சாப்பாட்டுக்கு வந்துவிட்டால் போதும்   காக்கா கூட்டம் மாதிரி வந்து   கூடிட்டானுங்கப்பா என்று  கிண்டலடிப்பர்.   காக்கை கரைந்தால்  விருந்து வரும் என்பது சிலரது  நம்பிக்கை.  இப்படி  காகத்தைப்  பற்றி    ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான   கண்ணோட்டம் உண்டு.      ஆனால் வள்ளுவருக்கு மட்டும்   காகத்தைப் பற்றிய    எண்ணம் மிகவும் உயர்வானது.      ஒரு அரசன் போருக்குச் சொல்லும்போது கூட   அவன் காக்கையைப் பார்த்து கொஞ்சம்   கற்றுக்கொண்டு செல்ல வேண்டும்    என்கிறார் வள்ளுவர்.      அடேங்கப்பா....   அரசனே காகத்திடம் போய் கற்றுக்கொள்ள   வேண்டுமா?     ஏன் கூடாதா?  நல...

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ?

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? " வெற்றி வேண்டுமா  போட்டுப் பாரடா எதிர்நீச்சல்  அட சரிதான் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்....." பாடலைக் கேட்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. எதிர்நீச்சல் போடும்போதல்லவா தெரியும் எத்தனை குட்டிக்கரணம்  போட வேண்டும் என்பது.... முள்ளில் விழுந்து முடங்கில் நொடிந்து கல்லில் முட்டி சுழியில் உருண்டு பிரண்டு ஒருவழியாக கரையேறும்முன் மூச்சு ஆயிரம் முறை அடங்கிப் போயிருக்கும். அதனால்தான் நமக்கு எதற்கு இந்த வம்பு. இப்படியே ஒதுங்கிப் போய்விடுவோம். என்று ஒரு முடிவெடுத்துவிடுவோம். இப்படி ஒதுங்கி ஒதுங்கி பதங்கிபதுங்கி பம்மிப் பம்மியே பாதி நாட்களைத்  தொலைத்திருப்போம். உழைக்க மறந்திருப்போம். சீச்சீ...இந்தப் பழம் புளிக்கும் என்று வெற்றிப் பக்கமே தலைவைத்துப் படுக்காதிருப்போம். இதுதான் நிதர்சனமான உண்மை. நாம் பாட்டுக்கு மூலையில்  முடங்கிக் கிடந்திருப்போம் தொலைந்தவர்களை தொலையட்டும் என்று இந்த உலகம் விட்டுவிடுமா என்ன ? தொலைந்தவர்களைத் தேடிப் பிடித்து தொல்லை தருவதில் வல்லவர்களாயிற்றே! நம்மைச் சும்மா விட்டுவிடுவார்களா? வேண்டுமென்றே ஓடும் நீருக்குள் தள்ளி க...

தெய்வம் தொழாஅள் கொழுநன்.... .....

தெய்வம் தொழாஅள் கொழுநன்..... " தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை "                       குறள் : 55 தெய்வம் - கடவுள் தொழாஅள் - தொழாதவள் கொழுநன் - கணவன் தொழுது - வணங்கி எழுவாள் -  எழுந்திருப்பவள் பெய் - பொழிவாயாக என - என்று சொல்ல பெய்யும் - பொழியும்  மழை - மழை   தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயில் எழுகிறவள் பெய் என்று சொல்ல மழை  பெய்யும். விளக்கம் : இல்லற மாண்பை வலியுறுத்த வந்த வள்ளுவர் கற்பெனும் திண்மை கொண்ட பெண் கட்டளையிட இயற்கை கடந்த நிகழ்வுகளும் நிகழ வாய்ப்புள்ளது என்பதை இந்தப் பாடலின் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளார். வள்ளுவர் எந்த தெய்வத்தையும் வணங்க வேண்டாம். கணவனை மட்டுமே தொழுதால் போதும் என்று சொல்லிவிட்டாரா ?  இப்படி ஒரு கேள்வி உள்ளுக்குள் எழாமல் இல்லை. அது எப்படி திருவள்ளுவரால் சொல்லமுடியும் ?  வள்ளுவர் கடவுள் வாழ்த்து எழுதும்போது, " கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"  என்று சொல்லியிருக்கிறாரே.  அதாவது கடவுளின்...

வினைமுற்று

          வினைமுற்று ஒரு பொருளின் செயலை அல்லது தொழில் நிகழ்ச்சியை  உணர்த்தி நிற்பது வினைச்சொல் எனப்படும். படித்தல், தொழுதல் உழுதல் போன்றவை வினையை  உணர்த்துகின்றன.   செயல் அல்லது தொழிலைக் குறித்து வந்த  முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். எடுத்துக்காட்டாக' பாடினார்' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோமானால் இது வினையின் முடிவைக் குறிக்கிறது. கதிர் ஓடினான் செல்வி பாடினாள். தலைவர் பேசினார். மயில் ஆடியது. பறவைகள் பறந்தன. இந்தச் சொற்றொடர்களில் ஓடினான், பாடினாள், பேசினார், ஆடியது, பறந்தன ஆகிய சொற்கள் பெயர்ச்சொல்லுக்குத் துணையாக நின்று தொடரின் பொருளை முடித்துக் காட்டியுள்ளதால் இவை வினைமுற்று எனப்படும். வினைமுற்றானது தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இரண்டு வகைப்படும். தெரிநிலை வினைமுற்று : திணை, பால் ,எண், காலம் ஆகியவற்றை வெளிப்படையாக உணர்த்தி நிற்கும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும். மாணவன் பாடம் படித்தான். இதில் படித்தான் என்றசொல் வினைமுற்று ஆகும். திணை -  உயர்திணை பால் -  ஆண்பால் எண்  - ஒருமை காலம் - இறந்த காலம் தெ...