Posts

வீடு

      வீடு காலையிலிருந்தே அன்னக்கிளி ஒரு படபடப்போடு இருந்தார். மோட்டைப் பார்ப்பதும் ஏதேதோ நினைவில்  தன்னைத் தொலைப்பதும் என்று பழைய காட்சிகள் எல்லாம் கண்முன் வந்து வரிசைகட்டி வந்து நின்றன. நடந்தவை எல்லாம் கனவா.... இல்லை நனவா....எதையுமே எளிதில்  நம்பமுடியவில்லை. எத்தனை ஆண்டு கனவு. சிறுகச்சிறுக சேர்த்து வைத்தப் பணத்தில் கட்டிய வீடு. ஒவ்வொரு செங்கலுக்கும் ஒருநாள் உழைப்பு கொடுக்க வேண்டியிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகாலம் குடிசை வாழ்க்கை. வெயில் காலங்களில் ஓட்டைவழியாக சூரியவெளிச்சம் அத்துமீறி அடாவடித்தனம் பண்ணும். மழைக்காலங்களில் எங்கு எல்லாம் ஓட்டைத் தெரிகிறதோ அந்த இடங்களைத் தேடிப் பிடித்து தாராளமாய் தண்ணீர் ஊற்றுவதும் சொட்டுச் சொட்டாக சொட்டிச் சேட்டை செய்துவதுமாய் மழை விளையாட்டுக் காட்டும். இது பலநாள் நிகழ்வானதால்  இதை எல்லாம் அன்னக்கிளி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருநாள் பாடென்றால் பெரிதாகத் தெரியும். நித்தம் நித்தம் இதே பாடுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டதால் எல்லாமே பழகி விட்டது. வெயில் அடித்தாலும்  தாங்கிக் கொள்ளும். குளிரும் மழையும் வந்து கும்மாளம் போ...

சத்தியவான்

    சத்தியவான் "அப்பா இருக்காரா" வாசலில் நின்று உரக்கக் கத்தினார் பெரிய வீட்டுக்கார சிதம்பரம். பதில் சொல்லாமலேயே "வாங்க" என்றார் அம்மா. "நான் உட்கார வரல...உங்க வீட்டுக்காரர் வந்துட்டாரான்னு பார்த்துட்டுப் போகத்தான் வந்தேன்" என்று கறாராகப் பேசினார் . "அவுங்க வந்ததும் உங்களை வந்து பார்க்க சொல்லுறேன் " "இதைத்தான் எத்தனை நாளா சொல்லுகிட்டு இருப்பீங்க... எங்க போயி ஒளிஞ்சுகிட்டாரு உங்க வீட்டுக்காரரு. ஊருக்காரன் விளைச்சலை எல்லாம் மூட்டை மூட்டையா அள்ளி லாரியில் அனுப்பத் தெரியுது...அதுக்குப்  பணம் கொடுக்கணும்ன்னா வலிக்குதோ...." "என்ன நீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க... நாங்க அப்படிப்பட்ட ஆளுங்க கிடையாது." "எப்படிப்பட்ட ஆளுன்னுதான் ஊருக்கெல்லாம்  தெரிஞ்சு போச்ச....இன்னும் எத்தனை நாளுக்குதான் பம்மாத்து காட்டுறாருன்னு பார்க்கத்தானே போறோம்" "கமிஷன் கடையில் கொடுத்ததும் கொண்டு வந்து தந்துருவாங்க..." "கமிஷன் கடையில்தான் ஒண்ணு  இல்லாம வாங்கி கட்சி காரனுக்குக் கொடுத்துட்டாராமே... இனி கமிஷன் கடைக்காரர் ஒரு ரூப...

வேற்றுமை அணி

        வேற்றுமை அணி அணி என்றால் அழகு என்று பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு,  பொருளழகு ஆகியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். செய்யுளும் அழகுபடச் சொல்லப்பட வேண்டும். பாடலில் சொல்லப்படும் கருத்தையும் எளிதாக புரிய வைக்க வேண்டும். இதற்காக செய்யுளில் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டிருக்கும். அதனைத்தான் அணி இலக்கணம் என்கிறோம். அணி இலக்கண நூல்களில் மிகவும்  தொன்மையான நூல் தண்டியலங்காரம். தண்டி என்ற ஆசிரியர் எழுதிய  அலங்காரம் அதாவது அணி பற்றி எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம். இந்த நூலில் முப்பத்தைந்து  அணிகளுக்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் வேற்றுமையணிக்காணம் யாது என்பது பற்றிய செய்திகளை இக்கட்டுரையில்  காண்போம். வேற்றுமையணி : " கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள் வேற்றுமைப் படவரின் வேற்றுமை அணியே " என்பது வேற்றுமை அணிக்குத் தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் ஆகும். செய்யுளில் இரு பொருள்களுக்குரிய ஒற்றுமைகளை முதலில்  கூறி, பின்னர் பிரிதொரு காரணத்தால் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதெனக் காட்டுவது வேற்றுமை அணி எனப்படும்...

மியாவாக்கி காடுகள்

Image
மியாவாக்கி காடுகள்               பள்ளியில் செய்தி வாசிக்கும் நேரம். தான் குறித்து வைத்திருந்த நான்கைந்து தலைப்புச் செய்திகளை கடகடவென்று வாசித்துவிட்டு தன் இடத்தில் போய் இருந்து கொண்டான் செய்தி வாசித்த மாணவன். ஆசிரியருக்குப்  பயந்து செய்தியைக் கவனிப்பதுபோல  அனைத்து மாணவர்களும் இருந்து  கொண்டிருந்தனர் . எனக்கு எப்போதுமே செய்தியில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால் கவனமாக செய்தி வாசிக்கும்போது கேட்பேன். இன்று செய்தி வாசித்த மாணவன் பெரிய நகரங்களில் மியாவாக்கி காடு வளர்ப்பு  திட்டத்தைச் செயல்படுத்த  முதல்வர் ஒப்புதல் வழங்கினார் என்று ஒரு செய்தியையும் வாசித்தான். மியாவாக்கி காடுகளாக? புதுமையாக இருக்கிறதே! அது என்ன மியாவாக்கி காடுகள்? சதுப்பு நிலக் காடுகள், பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள்  படித்திருக்கிறோம். இந்த மியாவாக்கி காடுகளைப் பற்றி  கேள்விப்பட்டதாக என் நினைவில் இல்லை. ஒருவிதமான குழப்பமான மனநிலையில்  இருந்தேன். "ஆசிரியரிடம் கேட்கலாமா? வேண்டாம். இதுகூட தெரியாதா?  இப்போ இதைத் தெர...

பிழையின்றி எழுதுவோம் வாங்க..3

பிழையின்றி எழுதுவோம் வாங்க...3 சில சொற்களை எழுதும்போது அப்படி இருக்குமோ இப்படியிருக்குமோ  என்ற ஒரு குழப்பம் ஏற்படும். இறுதியில் எப்படியும் இருக்கட்டும் என்று ஏதோ ஒன்றை எழுதுவோம். இப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்திய சொற்கள் பல உண்டு. அதற்கான காரணம் அந்தக்  குறிப்பிட்ட சொல்லுக்கான சரியான பொருளை நாம் அறியாதிருத்தலே ஆகும். அவை எந்தெந்த இடங்களில் எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன என்பதை சற்று கவனமாக உற்று நோக்கினால் பெரும்பாலான தவறுகளைத் தவிர்க்க முடியும். சரியான சொல்லைச் சரியான இடத்தில் பயன்படுத்தத் தெரிந்தால் பிழைபட எழுதுவதைத் தவிர்க்கலாம். வாருங்கள் தெரிந்து கொள்வோம். தருவாய்,தறுவாய் மரணத் தருவாயில்  என்று எழுதுவது சரியா? மரணத் தறுவாயில் என்று எழுதுவது சரியா ? எத்துணை நேரம் தடுமாறியிருப்போம். தருவாய் என்றால் கொடுப்பாய் என்று பொருள்படும். தறுவாய் என்றால் இடம், காலம் என்ற பொருள்களில் கையாளப்படுகிறது. "புறப்படும் தறுவாயில் போய்ப் பார்க்க வேண்டும்" என்று எழுதினால் புறப்படும் நேரத்தில்  என்று பொருள்படும். ஆதலால் காலத்தைக் குறிப்பிடும்போது தறுவாய் என்று எழுதுவதே சரி. கேளீர், கேள...

இடும்பைக்கு இடும்பை படுப்பர்....

இடும்பைக்கு இடும்பை படுப்பர்... இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஆ தவர் "                            குறள்  - 613  இடும்பை  -துன்பத்திற்கு  இடும்பை  -துன்பம்  படுப்பர்  -   உண்டாக்குபவர்  இடும்பைக்கு. -  துன்பத்திற்கு  இடும்பை. -. துன்பம்  படாஆதவர்  -உறாதவர் துன்பம் வந்தபோது துவண்டுபோகாத மன  உறுதி உள்ளவர்கள் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனைப் வென்று விடுவர். விளக்கம் :        எத்தகைய துன்பம் வந்தாலும் அதனைக் கண்டு  கலங்காத மன உறுதி  உடையவர்களை அத்துன்பம்  ஒன்றும் செய்துவிடாது.மனம் தளராதவர்கள்  எந்த இடையூறு வந்தாலும் அதனால் சோர்ந்து  தனது முயற்சிகளைக் கைவிட்டுவிட்டு   செயலற்றவர்களாக இருப்பதில்லை. இதுதானா என்பது போல மிக எளிதாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து கடந்து போய்விடுவர். இடையூறு செய்ய நினைப்பவர்களே கலங்கிப்போகும்படியாக  அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கும். ...

பேசிக்கொண்டே சாப்பிடலாமா?

பேசிக்கொண்டே சாப்பிடலாமா? "செல்போன் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் பரோட்டா தொண்டையில் விக்கியதால் மரணம்." செய்தியை வாசித்ததும் அப்படியே அதிர்ந்து போனேன். பரோட்டா விக்கியதால் மரணமா? இப்படியும் நிகழுமா? என்னால் நம்பவே முடியவில்லை. இதில் பரோட்டா தின்றதுதான் குற்றமா? இல்லை செல்போன் பேசியபடி பரோட்டாவைத் தின்றதுதான் குற்றமா? என்று என் மனதிற்குள் ஒரு பட்டிமன்றம் ஓட ஆரம்பித்தது. செல்போன் பேசியபடி பரோட்டா தின்பதில் என்ன குற்றம்? செல்போன் பேசவில்லை என்றாலும் சாப்பாட்டுத் தட்டின்முன் அமர்ந்ததும் அனைவரும் பேசுவது இயல்புதானே! எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். செல்போன் பேசுவதற்கும் நாம் சாதாரணமாக பேசுவதற்கும் என்ன வேறுபாடு? இரண்டிலும் பேசுவது வாய்தான். பேசிக்கொண்டே வேலை செய்யவில்லையா? அது போன்றதுதானே இதுவும் என்று நினைக்கத் தோன்றும். இரண்டுக்கும் ஒற்றுமை இல்லை. இரண்டு வேலைகள் ஒரே நேரத்தில் நடைபெறாலாம். ஆனால் ஒரே உறுப்பைக் கொண்டு இரு வேலைகள் செய்யும்போதுதான் பிரச்சினை எழுகிறது. பேசும்போது தொண்டையிலுள்ள குரல்நாண் அதிர்வலைகளை ஏற்படுத்...