கனவிலும் இன்னாது மன்னோ...
கனவிலும் இன்னாது மன்னோ.... " கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு" குறள் : 819 கனவிலும் - கனாவின் கண்ணும் இன்னாது - தீமை தருவது மன்னோ - ( அசைநிலையாக வந்துள்ளது) வினை - செய்கை வேறு - பிறிது சொல் வேறு - சொல்லும் சொல் பிறிது பட்டார் - அப்படிப்பட்டவர் தொடர்பு - நட்பு பேசும் பேச்சும் செய்யும் செயலும் வேறுவேறாக உள்ளவரோடு கொண்டிருக்கும் நட்பு கனவிலும் துன்பம் கொடுப்பதாகவே இருக்கும். விளக்கம் : சொல் வேறு ; செயல் வேறு என்று மாறுபட்ட மனநிலையோடு செயல்படும் ஒருவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அப்படிப்பட்டோர் நட்பு எந்த நேரத்திலும் தீமை தருவதாகவே இருக்கும் சிலர் நம்மிடம் தேனொழுகப் பேசுவர். செயலில் நேர்மை இருக்காது. அவர்கள் செய்யும் செயல்கள் அவர்கள்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதாகவே இருக்கும். தமக்குச் சாதகமானதை முடித்துக் கொள்வதற்காக எந்த நிலையிலும் கீழிறங்கி செயல்படத் தயங்க மாட்டார்கள். பிறழ் நாக்கு உடையோர் தொடர்பு கூடவே கூடாது. அவர...