Posts

எனைத்தானும் நல்லவை கேட்க....

எனைத்தானும் நல்லவை கேட்க.... " எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் "                              குறள் :  416 எனைத்தானும் - எவ்வளவாயினும் நல்லவை - நல்லவற்றை கேட்க - கேட்பீராக அனைத்தானும் - அவ்வளவாயினும் ஆன்ற - நிறைந்த பெருமை - உயர்வு தரும் - கொடுக்கும் எவ்வளவாயினும் நல்லவற்றைக் கேட்பீராக.கேட்ட  சொற்களின் அளவு குறைவாக இருப்பினும்  அவை நிறைந்த பெருமையைத் தரும். விளக்கம் : கேட்பதற்கு எப்போதும் காதுகள் திறந்தே இருக்க வேண்டும். அதுவும் நல்லவற்றைக் கேட்பதற்கு மட்டுமாகவே இருக்க வேண்டும். நாளும் குறைவான சொற்களையாவது கேளுங்கள் . நம் காதுகளில் விதைக்கப்பட்ட விதை மனமென்னும் நிலத்தில் துளிர்த்து  சிந்தனை என்னும் கிளைகளை விரித்து ஏற்றகாலத்தில் அதற்கான பலனைக் கொடுப்பது நிச்சயம். கேட்கும் எந்த வார்த்தையும் வீணாகப் போவதில்லை. சொற்கள் உள்ளுக்குள்  இருந்து நம்மை உறங்கவிடாமல் உந்தித் தள்ளும். நம்மோடு பேசும் தக்க நேரத்தில் உரிய ஆலோசனையை  வழங்கும். உற்ற நேரத்தில் கற்ற கல்வி கை கொடுப்ப...

கடவுள் ஏன் கல்லானான்....

கடவுள் ஏன் கல்லானான்.... கேள்வி கேளுங்கள். கேட்க கேட்கத்தான் அறிவு வளரும். கேள்வி கேட்கும்போது  புதியனவற்றைத் தெரிந்து கொள்கிறோம். அதிகம் கேள்வி கேட்கப்படும் இடங்கள் மூன்று என்பர். முதலாவது வீடு. ஏன் ? எதற்கு ? எங்கே ?  என்ற கேள்விகள் கேட்காத வீடுகள் இருக்க முடியாது. சண்டைக்கான அடித்தளமே கேள்வியில்தான் தொடங்குகிறது. அடுத்து வகுப்பறை .  அதிகம் கேள்விகள் கேட்கப்படும்   இடம் வகுப்பறை. மாணவர்களை அதிகம் கேள்வி கேட்க அனுமதியளிக்காத இடம் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களைக் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை. மூன்றாவது நீதிமன்றம் கேள்வி கேட்கப்படும் இடம். அஞ்சி அஞ்சி விடை சொல்லும் இடம். இவை தவிர நண்பர்களுக்கிடையே  பேசும்போது கேள்வியும் விடையும்  சகஜமாக வந்து விழும். குழந்தைகள் அதிகம் கேள்வி கேட்பர். பதில் சொல்லும் இடத்தில் இருக்கும் பெற்றோர் பல நேரங்களில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவர். இப்படி கேள்வி இல்லா இடம் இல்லை. கேள்விக்கான  விடையைத் தேடி அலைபவன்தான் அதிகம் தெரிந்து கொள்கிறான். அறிவாளியாகிறான். அறிவியல் உலகின் கண்டுபிடிப்புகள் ...

பாரதிதாசனின் புதியதோர் உலகம் செய்வோம்

  புதியதோர் உலகம் செய்வோம் " தமிழுக்கு அமுதென்று பேர்_ அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் " என்ற தேன்தமிழ்ப் பாடல் வரிகளைத் தந்து என்நேரமும் காதுகளில் தேனிசையாய் ஒலித்துக் கொண்டிருப்பவர் பாரதிதாசன். உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் அல்ல. மாற்றங்களை நோக்கிய பயணம் எல்லா காலங்கிலும் நடைபெற்று வந்திருக்கிறது. அந்தப் பயணம்தான் புதிய படைப்புகளையும் புதுமைகளையும் கொண்ட புதிய சமுதாயத்தைப் படைக்கும். பழைமையிலேயே இருந்து கொண்டால் புதுப்பித்தலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ஒரு முடக்கம் ஏற்பட்டுவிடும். முடமாகிப் போவோம். எப்போதும் புதியவற்றை அறிய வேண்டும் புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும். இருக்க வேண்டும். அதுதான் செயலாக்கத்துக்கு வித்திடுவதாக அமையும். நமது கனவு செயல்வடிவம் பெறும்போது சமூகமும் சமூக நடைமுறைகளும் புதிப்பிக்கப்பட்ட நிலையில் புதிய பரிணாமத்தை எட்ட வாய்ப்பு ஏற்படும். மாற்றம் தனிமனிதனால் ஏற்பட்டுவிடாது. ஒருங்கிணைந...

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு...

    வேண்டுதல் வேண்டாமை இலானடி.... " வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல "             குறள் :  4 வேண்டுதல் - விரும்புதல் வேண்டாமை - வெறுத்தல் இலான் - இல்லாதவன் அடி - தாள் , பாதம் சேர்ந்தார்க்கு - தஞ்சமடைந்தவர்க்கு யாண்டும் - எக்காலத்தும் இடும்பை - துன்பம் இல - இல்லை விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனது பாதத்தைத் தஞ்சமடைந்தவர்க்கு  எக்காலத்திலும்  துன்பம் நேர்வதில்லை. விளக்கம் :  இவர் எனக்கு வேண்டப்பட்டவர். அவர் எனக்கு வேண்டாதவர். இவரை எனக்குப் பிடிக்கும். இவர் எனக்குப் பிடிக்காதவர் என்று யார்மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கொள்ளாதவன் இறைவன். இறைவனது பார்வையில் அவன் படைப்புகள் அனைத்தும் சமம். அப்படிப்பட்ட இறைவனின் பாதத்தைத் தஞ்சம் அடைந்தவர்க்கு ஒரு போதும் துன்பம் நேர்வதில்லை. இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் ஆதலால்  நாமும் அப்படிப்பட்ட விருப்பு வெறுப்பு அற்ற மனநிலையோடு  இறைவனைத் தேடும்போது எவ்விடத்தும் எக்காலத்திலும் துன்பம் நிகழ்ந்துவிடாதபடி இறைவன் நம்மைக் காத்துக் கொள்வார். கெட்டவன் அடையும் ...

குணமென்னும் குன்றேறி நின்றார்...

குணமென்னும் குன்றேறி நின்றார்..... " குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேனும் காத்தல் அரிது "                          குறள்   : 29 குணம் - நற்குணம் என்னும் - என்று சொல்லக்கூடிய குன்று - சிறு மலை ஏறி -  ஏறி நின்றார் - நிற்பவர் வெகுளி - சினம் கணமேனும் -நொடிப்பொழுதேனும் காத்தல் - காத்துக் கொள்ளுதல் அரிது - அருமையானது. நற்குணம் என்னும் உயர்குன்றின்மீது  நிற்கும் சான்றோர்க்கு வரும் சினம் நொடிப்பொழுதுக்கு மேல் நீடித்து நிற்பதில்லை. விளக்கம் :  நற்குணங்கள் கொண்டவரிடம் சினம் ஒருபோதும் அண்டுவதில்லை. அப்படியே சினம் கொள்ளும்  சந்தர்ப்பம் அமைந்துவிட்டாலும் அது  கணப்பொழுதும் நீடித்து நிற்பதில்லை. அதுதான் நற்குணநலன்கள்  கொண்டவருக்கான சிறப்பு. எதற்கெடுத்தாலும் சினம் கொள்பவர் எவ்வளவு நற்குணம் கொண்டவராக  இருந்தாலும் அவை எல்லாம் அந்தக் கணநேர கோபத்தில் காணாமல் போய்விடும். இல்லை...அந்தச் சினம் மற்ற நற்குணங்களை அழித்துவிடும்.ஆதலால் நற்குணம் என்னும் நல்லுயரத்தை எட்டியவர்கள் சினம் கொள்ளமாட்டார்....

நினையாரோ தோழி...

நினையாரோ தோழி... "தோழி..." "சொல்லுங்கள்" "கள்வர் பாலை நிலத்தில் நிறைய இருப்பரோ? "பாலைநிலம் என்றால் கள்வர் பயம் இல்லாமலா இருக்கும்?" "கள்வர் கையில் ஏதும் ஆயுதங்கள் வைத்துத் தாக்குவரோ?" "கள்வர்  கையில் ஆயுதமில்லாமலா....? சாணை ஏற்றிய அம்பை கையில் வைத்திருப்பராம்." "சாணை என்றால்..." "கூர்த் தீட்டுதல் என்று பொருள்." "பார்த்திருக்கிறேன் ....பார்த்திருக்கிறேன். அம்பை அப்படி இப்படிப் புரட்டி கூர்த்தீட்டுவதைப் பார்த்திருக்கிறேன்." "செந்தழல் பிழம்பாய் இருக்கும். பார்ப்பதற்குச் செங்கால் பல்லி மாதிரி இருக்கும்." "ஒரு முறை நான் நிஜமாகவே பல்லியோ என்று பயந்தே போய்விட்டேன்." "பார்ப்பதற்கு மட்டும் பல்லிபோல் இருக்காது...." "வேறென்ன  மாதிரி இருக்கும் ?" "கள்வர் கையில் வைத்திருக்கும்  ஆயுதத்தைக் கூர்த்தீட்டும் ஒலியும் பல்லி ஒலி எழுப்புவது போலவே இருக்கும்." "பல்லி கெவுளி அடிக்கிற மாதிரி இருக்கும் என்று சொல்கிறாயா?" "அது ஒரு மாதிரியான ஒலி." "ஒரு மாதி...

பொய்யாமை பொய்யாமை ஆற்றின்...

  பொய்யாமை பொய்யாமை ஆற்றின்.... " பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று "                        குறள்: 297 பொய்யாமை - பொய் கூறாதிருத்தல் பொய்யாமை - தவறாமல் ஆற்றின் - கடைபிடித்து ஒழுகினால் அறம் பிற-  பிற அறச்செயல்களை செய்யாமை -செய்யாதிருத்தல் செய்யாமை-செய்யாதிருத்தல் நன்று - நல்லது பொய் கூறாதிருத்தலை ஒருவன்  தொடர்ந்து கடைபிடித்து ஒழுகினால் பிற அறச்செயல்கள் செய்யாதிருப்பினும் அந்தப் பொய்யாமை அவனுக்கு நன்மையையே தரும் . விளக்கம் பொய் சொல்லாதிருந்தாலே போதும். வேறு எதுவும் செய்ய தேவையில்லை. பொய் மட்டும்தான் எல்லா தீங்குகளுக்கும் அடிப்படை காரணம். பொய் சொல்கிறவனிடம் மற்ற எல்லா தீய குணங்களும் வந்து ஒட்டிக் கொள்ளும். ஒரு பொய்யை மறைக்க களவு, கொலை, கொள்ளை என்று என்னென்ன தீய செயல்களை எல்லாம் செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். பொய் சொல்லாதிருப்பதை மட்டும் ஒரு ஒழுக்கமாகக் கடைபிடித்து வந்தாலே போதும். வேறு அறச் செயல்கள் செய்ய வேண்டிய தேவையில்லை. பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்கள் செய்யாவிட்டாலும் அதன...