Posts

கருப்பும் சிவப்பும்

    கருப்பும் சிவப்பும் "ஏல....ஏ...சின்னவள அந்த கருப்பி அக்கா கடையில போயி ஒரு தேங்காய் சில்லு வாங்கிட்டு வா மக்களே " "நான் கருப்பி கடைக்கும் போகல்ல...சிகப்பி கடைக்கும் போகல....போம்மா" சொல்லிவிட்டு அங்கிருந்து சிட்டாக பறந்து ஓடிவிட்டாள் பரணி. "எம்மோ அவ என்ன சொல்லிட்டு போறா பார்த்தியளா? கருப்பி....சிகப்பி... நல்லா இருக்குல்ல..." என்று சொல்லி சிரித்தாள் அக்கா. இதுவரை  கருப்பி என்று சொன்னோமா?  கறுப்பி என்று சொன்னோமா?  குழப்பமாக இருக்கிறதல்லவா! எனக்கும் அதே குழப்பம்தான். நீங்கள் இதுவரை உச்சரித்து வந்தது கருப்பி என்பதுதான். வல்லின றகரம் போட்டு சொன்னீர்களா இல்லை இடையின ரகரம் போட்டு சொன்னீர்களா என்பது உச்சரிக்கும் போதே புரிந்திருக்கும். புரியவில்லை என்றால்  யரவவழள கசடதபற உச்சரிப்பு வேறுபாட்டை கவனித்துப் பாருங்கள். கருப்பியா? கறுப்பியா? என்பது புரியும். நாமும் இந்த கருப்பி ,சிகப்பி என்ற வார்த்தைகளை எத்தனை முறை பயன்படுத்தியிருப்போம். இப்படி உச்சரித்து எழுத்து வேறுபாட்டைக் கவனித்ததில்லையே என்று தோன்றுகிறதா?  சரி போகட்டும். விட்டுவிடுங்கள். கிராமப்புறங்களில் இருப்...

கண்ணின்று கண்ணறச் சொல்லினும்...

  கண்ணின்று கண்ணறச் சொல்லினும்... " கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் "                                                           குறள்: 184 கண்ணின்று _ கண்ணெதிரே கண்ணற _  கண்ணோட்டமின்றி சொல்லினும் _சொன்னாலும் சொல்லற்க _ சொல்ல வேண்டாம் முன் _ முன்னால் இன்று _ இல்லாமல் பின்னோக்கா _பின்விளைவினை எதிர்பாராத சொல் _ பேச்சு நேருக்கு நேராக ஒருவரைப் பற்றி கண்ணோட்டம் இல்லாமல் எதுவும் சொல்லலாம். நேரில் இல்லாதவரைப் பற்றி பின்விளைவுகளை ஆராயாது எதுவும் கூறுதல் கூடாது. விளக்கம். : ஒருவரைப் பற்றி பேச வேண்டுமா.... துணிந்து முன்னால் நின்று பேசுங்க.... அப்படி பேச தைரியம் இல்லையா... பின்னால் போய் இல்லாததையும் பொல்லாததையும் பேசாதீங்க...    அப்படி ந...

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள்....

  அடுத்து முயன்றாலும்..... வாழும் காலம் கொஞ்சநாள்தான்.  அந்த குறுகிய காலத்திற்குள்  செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்  ஏராளம் உள்ளன.    அவற்றைத் தாராளமாக  செய்து நல்லவர் என்ற  பெயரெடுக்க வேண்டும் என்று  எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் இது முடிகிற காரியமா ? அதற்குள் இடையில் வந்து முட்டுக்கட்டையிட எத்தனையோ  துன்பங்களும் துயரங்களும் வந்து துவைத்துப் போட்டுவிடுகின்றன. இவற்றிலிருந்து விடுபடுவதுதான் எப்படி? உலகியலைச் சொல்லித் தந்து வீழ்ந்துவிடாதபடி தூக்கி நிறுத்த சான்றோர்களின் அறவுரைகளும் அறிவுரைகளும் தேவையாக இருக்கின்றன. அப்படி நமக்கு ஔவையால் வழங்கப்பட்ட  அறவுரை நூல்தான்  மூதுரை.  நல்ல நெறிமுறைகளைக்  கடைபிடித்து வாழுங்கள் என்று  முத்தான முப்பது பாடல்களை  கல் மேல் எழுத்தாக செதுக்கி   வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்  ஔவை.   முப்பது பாடல்களும் முப்பதுவிதமான வாழ்வியல் உண்மைகளை  கற்றுத் தருகிறது. அறம் தவறாது வாழ வேண்டும் என்று சொல்லித் தருகிறது. எது அறம் என்று உணர்த்திச் செல்கிறது. சாலையோரமாகஇருந்த ஆ...

கான முயலெய்த அம்பினில்....

    கான முயலெய்த அம்பினில்.... " கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது."                        குறள் :  772 கான - காட்டின்கண் முயல்  - முயல் எய்த - குறி தப்பாமல் எய்திய அம்பினில் - அம்பை ஏந்துவதைவிட யானை - வேழம், ஆனை பிழைத்த - தவறிய வேல் - கையால் எறியும் ஈட்டி ஏந்தல் - தாங்குதல் இனிது -நன்றானதாகும் காட்டில் ஓடும் முயலை நோக்கி குறிதப்பாமல் எய்தும் அம்பை ஏந்துவதைவிட நின்று கொண்டிருக்கும் யானைமீது எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறப்புடையதாகும். விளக்கம் : ஒருவன் காட்டில் பதுங்கிப் பதுங்கி ஓடும் முயலைக் குறி தப்பாமல் எய்திய அம்பை கையில் ஏந்தி வருகிறான் மற்றொருவனோ வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும்  யானையை எய்திய வேலை கையில் ஏந்தி வருகிறான். இவை இரண்டனுள்ளும் எது சிறப்புடையது எனில் யானையை எய்திய வேலை ஏந்தி வருதலே  சிறப்புடையதாகும். முயல் கையால் பிடித்துவிடக்கூடிய அளவுக்கு சிறிய உருவம் கொண்ட விலங்கு. அது இயல்பாகவே பயந்து பதுங்கிப் பதுங்கி ஓடும். அதனை எய்தும் அம்பை ஏந்துவதால் அந்த வீரனுக்கு...

தாலந்து பற்றிய உவமை

    தாலந்து -உவமை திறமைசாலி யார் என்று கேட்டால் ஆளாளாளுக்கு ஒரு கருத்தைக் கூறுவர். தாங்கள் சொல்லும் கருத்துதான் உண்மை என்று மெய்ப்பிக்கவும் முற்படுவர். உண்மையுள்ளவன் யார் என்று கேட்டால் .... நான் என்று யாரும் துணிந்து சொல்வதில்லை. எப்போதாவது ஒருமுறை பொய் சொல்லி இருப்போம் . நம் மனசாட்சியே நமக்கு எதிராக சாட்சி சொல்ல கிளம்பிக் கொண்டிருக்கும். அதனால்தான் நமக்கு அந்த துணிவு வருவதில்லை. முடிவாக யாருமே இவ்வுலகத்தில் உண்மையுள்ளவுங்க இல்லைங்க...என்று  சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவோம். சிலர் உண்மையாக இருந்து என்னத்தைக் கண்டோம் என்று சலித்துக் கொள்வதும் உண்டு. உண்மையுள்ளவன் என்னத்தைக் காணமுடியும் என்றுதானே கேட்கிறீர்கள்? உங்கள் கேள்விக்கான பதிலை ஒரு  உவமை மூலமாக தெரிந்து கொள்வோம். வாருங்கள். எப்போதுமே ஏசு கிறிஸ்து உவமைகள் மூலமாக தான் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பார். அவர் கூறும் உவமைகள் எல்லாம் பெரும்பாலும் கேள்வி கேட்டு அதற்கான பதிலாகவே அமைந்திருக்கும். நீங்களும் கேள்வி கேட்டுவிட்டீர்களல்லவா? அதற்கான பதில் கிடைக்க வேண்டாமா ? இதோ  உங்கள் கேள்விக்கான பதில்: ஒரு எஜ...

தாயன்பு

              தாயன்பு  திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தன் இரண்டு பிள்ளைகள் மற்றும் தாய் பொன்னம்மாளோடு ஆட்டோவில் வந்து இறங்கினாள் கமலம். ஆட்டோவில் இருந்த சாமான்களைக் கீழே இறக்கி வைத்தார். சாமான் எல்லாம் எடுத்துவிட்டோமா? ஏதாவது கீழே விழுந்து கிடக்கிறதா என்று ஆட்டோவுக்குள் தலையை விட்டுத் துழாவிப் பார்த்துக் கொண்டிருந்தார். "அக்கா நீங்க விடுங்க...நான் பார்க்கிறேன்....சீக்கிரம் எனக்கு காசு கொடுங்க... அடுத்த சவாரி போகணும்" அவசரப்படுத்தினார் ஆட்டோக்காரர். "இருப்பா...வந்த அவசரத்துல அப்படி அப்படியே அள்ளிப் போட்டுட்டு வந்தோம். எதுவும் விழுந்துகிழுந்து கிடக்கப்பிடாதுல்ல" என்றபடியே ஆட்டோக்குள் இருந்து தலையை வெளியில் எடுத்தார் கமலம். "ஏல ...எல்லா சாமானும் இருக்கா என்று எண்ணி பார்த்துகிட்டியளா... இரண்டு சூட்கேசு, இரண்டு அட்டைப்பெட்டி ஒரு குட்டிச்சாக்கு, இரண்டு சோத்துப் பை தண்ணி கேனு ஒண்ணு, கைப்பை ஒண்ணு மொத்தம் ஒன்பது உருப்படி. நல்லா எண்ணிகிட்டியளா...."என்று மகன்களைப் பார்த்துக் கேட்டார். "எம்மோ அண்ணன் பள்ளிகூடத்துப் பை ஒண்ணு......

அறிவினான் ஆகுவ துண்டோ....

"அறிவினான்  ஆகுவ துண்டோ  பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை "                           குறள் :   315 அறிவினான் - அறிவினால் ஆகுவது - ஆகும் செயல் உண்டோ - உளதோ பிறிதின் - மற்றவருடைய நோய் - துன்பம் தம் - தமது நோய் - துயரம் ,இன்னல் போல் - போன்று போற்றாக்கடை - கருதப்படாவிடத்து பிறர் உயிர்கள் படும் துன்பத்தைத் தன் துன்பம் போன்று கருதும் பண்பு இல்லாவிட்டால் பெற்ற அறிவினால் ஏதேனும் பயன் உண்டோ? விளக்கம் :  அறிவு என்பது யாது என்பதற்கு அருமையான விளக்கம் தரப்பட்ட குறள். ஏராளமாக புத்தகங்கள் படிப்பவரை அறிவாளி என்போம். நிறைய பட்டங்கள் வாங்கி வைத்திருப்பவரை என்னே அறிவு ! அதனால்தான் இத்தனை  பட்டங்கள் வாங்கி வைத்திருக்கிறார் என்று வியந்து போவோம். ஆனால் இது எல்லாம் அறிவு இல்லைங்க. அறிவுக்கு இலக்கணம் நான் வகுத்திருக்கிறேன் கேளுங்கள் என்கிறார் வள்ளுவர். ஒருவன் படுகிற துன்பத்தைப் பார்த்து சும்மா இருக்காமல்  உடனே ஓடிச்சென்று உதவும் பண்பு இருக்க வேண்டும். பிறருக்கு வந்த துன்பத்தைத் தனக்கு வந்த துயரென கருதி அத...