Posts

தந்தை மகற்காற்றும் நன்றி ....

தந்தை மகற்காற்றும் நன்றி.... "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் "                             குறள் : 67 தந்தை - அப்பா மகற்கு - மகனுக்கு ஆற்றும் - செய்யும் நன்றி - நன்மையான செயல் அவையத்து - அவையில் முந்தி - முன்னால் இருப்ப - இருக்குமாறு செயல் - செய்தல் தந்தை மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி யாதெனில் கற்றவர் அவையில் தன் மகனை முந்தியிருக்கும்படி கல்வி அறிவில் மேம்படச் செய்தலேயாகும். விளக்கம் :  பிள்ளைகளுக்கு செல்வம் சேர்த்து வைக்கலாம். வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். காடு கழனி என்று ஏராளமான நிலபுலன்களை வாங்கி வைத்திருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும்விட நன்மை தரும் செயல் அதாவது நல்லுதவி ஒன்று உண்டு. அதுதான் பிள்ளைகளுக்கு உயர்ந்த, நிலையான புகழைக் கொடுக்கும் நல்ல கல்வி அறிவைக் கொடுத்தலாகும். அதனால்தான்  கற்றோர் நிறைந்த அவையில் எல்லோர்க்கும் முற்பட்ட நிலையில் முதல்வனாக இருக்கும்படியான நல்ல கல்வி அறிவைக் கொடுத்தலே ஒரு தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையான செயலாக இருக்க முடியும் என்கிறா...

அம்மா எனக்கு வேண்டும்

  அம்மா வேண்டும் அம்மா உன் அன்பு வேண்டும் நீ மட்டுமே  எனக்குவேண்டும் உன் மடியில் தூங்க வேண்டும் உன்னோடு கதை ஓராயிரம் பேச வேண்டும் உன் முகத்தைப் பார்த்து முழுநேரம் கனவு காண வேண்டும் உன் மார்பில் சாய வேண்டும் உன் கையால் என் தலையைக் கோத வேண்டும் பெத்தவள் நீ எனக்கு பேரு சொல்லித் தர வேண்டும் பொய்யான வார்த்தை பேசி நெய்ச்சோறு ஊட்ட வேண்டும் நித்தம் நித்தம் என்னோடு  நிலவு கதைப் பேச வேண்டும் சத்தமில்லா முத்தம் தந்து கன்னத்தை கன்னிட வைத்தல் வேண்டும் சோர்ந்து வந்திடும்போதும்  துயரங்கள் துரத்தும்போதும்  தோள் சாய்ந்து அழுதிட  அம்மா நீ அருகிலேயே இருந்திட வேண்டும் மலையோரச் சிறு பூவாய் காடெங்கும் பூத்தவளே ! காடெல்லாம் கால் ஓயாது காலடி பதித்தவளே ! கடுங்குளிரில் மடையோரம் மடாதிபதியாய் நின்றவளே! அரிக்கன் விளக்கேந்திய ஆவாரங்காட்டு நைட்டிங்கேலே! விடுமுறை எடுக்கத் தெரியாத உழைப்பாளி தாயே ! உயிர்களின் தொடக்கம் நீயே! உணர்வினில் கலந்து எம் உதிரத்தின் இயக்கமாய் நின்றாயே! என் மொழி  யாவும் உன் அருளாலே ! எல்லாம் எனக்கு  நீ தானே அம்மா! கிடைக்காத பொருள் அம்மா! அடைக்காத கதவு அம்மா!...

அம்மா

Image
அம்மா  அரிச்சுவடு கற்றிட ஆசிரியர் முகம் பார்த்ததில்லை ஆலோசனை கேட்டிட ஆலோசகர் வைத்ததில்லை நெல்லைத் தமிழ் பேசிட நெடுங்கணக்கு கற்றதில்லை நிதி மேலாண்மை செய்திட நெட்டுரு எதுவும் செய்ததில்லை ஈசானம் கருத்திருந்தால் இடிமழை பொழியுமென்று வானிலை முன்னறிவிப்பு செய்ய வானவியல் படித்ததில்லை மண் பார்த்துபருவம் செய்ய வேளாண் படிப்புனக்குத்  தேவையாக இருந்ததில்லை நீர் மேலாண்மை படிக்காமல் நீர் மேலாண்மை செய்தவளே! முதலெழுத்துப் படிக்காமல் முதன்மை அறிவு தந்தவளே! சட்டம் படிக்காமல் வீட்டில் சட்டாம் பிள்ளை ஆனவளே! காவல் தெய்வமாய் எம்மைக் கண்ணுக்குள் வைத்துக் காத்தவளே! அரிக்கன் விளக்கேந்திய ஆவரைகுளத்து நைட்டிங்கேலே! நீ இருக்கும் வரை  உன் அருமை தெரியவில்லை... அந்திவரை வேலை செய்து அசந்து நீ வரும்போது ஆறுதலாய் இருந்ததில்லை ஒத்தை மனுஷியாய் நீ ஓடியாடி உழைத்தபோது உன் வருத்தம் புரியவில்லை நீ தொட்ட உயரத்தை எட்டிப் பிடிக்க என்னால்  முடியவில்லை அண்ணாந்து பார்த்தாலும் உன் உயர்வு என் கண்ணுக்கு எட்டவில்லை. அம்மா...நீ எனக்கு வாய்த்தது   பெரும்பேறு  உன்னால் கிடைத்ததுதான் இந்த  நற்பேறு உன் நினைவு...

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம்....

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம்.... ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு "                                  குறள் : 190 ஏதிலார் - மற்றவர் குற்றம் - பிழை போல் - போன்று தம் - தமது குற்றம் - பிழை காண்கிற்பின் - காண்பார்களானால் தீது - தீமை உண்டோ - உளதோ மன்னும் -  நிலைபெறுகின்ற உயிர்க்கு - உயிர்களுக்கு அயலாருடைய குற்றங்களைக் காண்பதுபோல் தம் குற்றங்களையும் காணும் பண்பு  கொண்டவராக ஒருவர் இருப்பாரானால் அவரால் வாழும் உயிர்க்கு எந்தத் தீங்கும் ஏற்படப் போவதில்லை. விளக்கம் :    எப்போதுமே நமக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் செய்வதுதான் சரி என்று மனதுக்குள் ஒரு  தீர்ப்பு எழுதி வைத்துக் கொள்வோம். நம்மிலும் குற்றம் குறைகள் இருக்கலாம். தவறுகள் செய்வது மனித இயல்பு. அதனை ஒத்துக்கொள்ளும் மன பக்குவம் யாருக்குமே கிடையாது. அடுத்தவர்கள் செய்கிற எல்லா செயல்களிலும் குற்றம் கண்டுபிடிப்போம். கண்ணுக்குள் விளக்கெண்ணெய்யை ஊன்றிக்கொண்டு பார்ப்போம். உடுக்கும் உடையில் ...பேசும் பேச்சி...

பிறந்தநாள் வாழ்த்து

    பிறந்தநாள் வாழ்த்து சிந்தும் சிரிப்பலையே முந்தும் மொழியலையே நடமாடும் பல்கலையே எழிலாடும் எளிமையே நற்றிணையே நல்லறிவே முத்தமிழே முதிர்கனியே என்னவென்று அழைப்பேன்  ஏதுசொல்லி அறிமுகம் செய்வேன் மாநகராட்சியின்  அறிவுப் பெட்டகமே! உம்மிடம் கற்றதும்  பெற்றதும் ஏராளம் ஏராளமே! பேரறிவாட்டிக்கு வாழ்த்துரைக்கும் பெரும்பேறின்று வாய்த்ததுவே !  நீலமணி மிடற்று ஒருவன்போல  மன்னுக பெரும நீ என்ற வாழ்த்துனக்கு உரித்தானதுவே! வாழ்க பல்லாண்டு ....பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு... ராஜேஸ்வரியும் சிரிப்புமாய் இணைந்து !    

திருமணநாள் வாழ்த்து

    திருமணநாள் வாழ்த்து இசைச்சாரலாய் மணநாள் வாழ்த்து இருவரையும் நனைக்க பூந்தென்றல் பண்ணலையாய் வந்து சாமரம் வீசி நிற்க எழுகதிர் ஒளியலை கொண்டு வாழ்த்துச் செய்தி வாசித்திருக்க விழுதாய்ப் பிள்ளைகள் உடன் இருக்க கொழுநன் ஸ்டீபனோடு எலிசபெத் முழுதாய் ஐயாறு ஆண்டுக்கு மேல் பழுதிலா இல்லற இன்பம் கண்டநாள் பொழுதாறும் பொதுப்பணியாற்றி விழுதார் மார் சுமக்க இணைந்தே நல்லறம் தொடர்கவென தொழுதார்  கரம்கூப்பி வாழ்த்துகிறேன்!

பிறந்தநாள் வாழ்த்து

  பிறந்தநாள் வாழ்த்து தேனிலா தமிழுலா  தேடலா (ல்) பால்நிலா வானுலா வந்து வாழ்த்துச் செய்தி வாசித்தலா கவியுலா சுமந்து தென்றல் காதோடு கவி பாடலா கைபேசி கிண்கிணியென கிண்ணரம் இசைத்து தத்தைய மொழி  பேசி ஒற்றைச் சொல்லால் ஓயாது வாழ்த்தலா உள்ளம் மகிழ்ச்சி கடலிலா கண்டுலா வந்திட விழைதலா(ல்) யானும் வந்தேன் சிற்றுலா இறையருள் இல்லம் நிறைத்தலா (ல்) நலமும் வளமும் கூட்டாட்சி நடத்தலா இன்பம்  நிரந்தர குடியுரிமை வாங்கலா வரையன்ன நெடிய புகழ் காண்டலா வானும் நிலனும் போல  வாழ்தலா(ல்) நிலைத்த நலன் உமக்குரித்தாதலா என்றன் வாழ்த்துலா எழுத்துலாவாக கட்செவி அஞ்சலேறி இல்லம் வந்தது  இன்பச் சுற்றுலா  வாழ்க...வாழ்க...வாழ்க... பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு இன்றுபோல் என்றும் உவந்து !