Posts

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை.....

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை.... "உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்"                                   குறள்  : 530 உழை -  இடம்  பிரிந்து - நீங்கி காரணத்தின் - ஒரு காரணத்தினால் வந்தானை - திரும்பி வந்தவனை வேந்தன் -மன்னவன் இழைத்து - நுட்பமாக இருந்து - ஆராய்ந்து, பொறுத்திருந்து எண்ணி -  ஆலோசித்து கொளல் -  முடிவு செய்க ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து  சென்றவர் மீண்டும் திரும்பி வரும்போது அவர் வந்த காரணத்தை நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே சேர்த்துக் கொள்ளல் வேண்டும். விளக்கம் :  எந்தவித காரணமும் இன்றி நம்மைவிட்டுப் பிரிந்து செல்பவர்கள் உண்டு. இது மன்னன் வாழ்க்கையில் மட்டும் நடைபெறுவதல்ல. உறவுகளில் நட்புகளில்  வீடுகளில் என்று எல்லா இடங்களிலும் காரணமற்ற பிரிவு  நிகழ்தல் உண்டு. அப்படி பிரிந்து சென்றவர்கள் மறுபடியும்  ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நம்மிடம்   திரும்ப வந்து சேர வருகின்றனர்.  அவர்களை ஐயத்தோடு பார்க்க வேண்டா...

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க....

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க.... சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் "                              குறள் : 827 சொல் -  மொழி வணக்கம் - பணிவு ஒன்னார்கண் _ பகைவரிடத்தில் கொள்ளற்க - கொள்ளாதிருப்பீராக வில் - வில்போன்ற  வணக்கம் - பணிவு தீங்கு - தீமை குறித்தமையான் _ கருதியமையான் வில்லானது வணக்கம் செய்வதுபோல் வளைந்து  இருந்தாலும் தீங்கு செய்தலே அதன் செயலாக இருக்கும். அதுபோல பகைவர் பேச்சில் பணிவு இருப்பதுபோல் இருந்தாலும் அது நமக்கு நன்மை தரும் என்று எண்ணிவிடக் கூடாது. விளக்கம் : வில் வளைந்து வணங்குவது போன்ற தோற்றம் கொண்டதாகத்தான் இருக்கும். அதற்காக வில்லிலிருந்து  புறப்படும் அம்பு எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாது என எதிர்பார்ப்பது மதியீனம். தோற்றம் வணங்குவதுபோல் இருந்தாலும் வில் எய்தப்படுவதன் நோக்கம் பிற  உயிர்களை வீழ்த்துவதற்காகத்தான் இருக்கும். அதுபோல பகைவன் வாயிலிருந்து வரும் சொற்கள் இனிமை தருவதாக இருக்கலாம். கூனிக்குறுகி வணங்கி பணிவாகப் பேசலாம். ஆனால் அது ஒருபோ...

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடலாமா?

Image
ஆற்றில் போட்டதை குளத்தில் தேடலாமா ? எங்கேயோ தவறவிட்ட ஒன்றை  அதற்குச் சம்பந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் போய் தேடிக் கொண்டிருப்போம். மூக்குக் கண்ணாடியை கண்களில் போட்டுவிட்டு அறை முழுவதும்  தேடுவோம். வீட்டுச்சாவியைக் கையில் வைத்துக் கொண்டு வீடெல்லாம் தேடுவோம். இது மறதியால் நடைபெறும் நிகழ்வு என்பதைவிட பெரும்பாலும் பதற்றத்தால் ஏற்பட்ட நிகழ்வுகளாகத்தான் இருக்கும். போட்ட இடம் ஒன்று; தேடும் இடம் மற்றொன்றாக இருக்கும் போது ஆற்றில் போட்டதைக் குளத்தில் தேடுவது போல என்ற சொலவடையைப் பயன்படுத்துவது வழக்கம். அனுபவப்பட்டவர்கள் வாயிலிருந்து  புறப்படும் வார்த்தைகள் சொலவடைகளாக காலங்காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சொலவடையும் ஏதோ ஒரு அனுபவத்தின் அடிப்படையில்  சொல்லப்பட்டதாக இருப்பதால் பொருள் நிறைந்த மொழியாகத்தான் இருக்கும். எதுகை மோனையில் சொல்லப்பட்ட சொலவடைகளாக இருந்தாலும் அவை  வெற்றுச் சொற்களாக இருப்பதில்லை. ஆற்றில் போட்டதைக் குளத்தில் தேடலாமா? என்ற  இந்தச் சொலவடை பற்றிய  சுவாரசியமான வரலாறு ஒன்று உண்டு.   சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையில் நடைபெற்ற...

குடிகாரன் பேச்சு

Image
      குடிகாரன் பேச்சு மாலை ஆறு மணியில் இருந்தே   தெருவில் நின்று காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருந்தான் மணி. தெருவில் வருவோர் போவோரைப் பார்த்தால் குரல் உற்சாக மிகுதியில் சற்று உயர்ந்து நின்றது. யாரும் பெரியவர்கள் வந்துவிட்டால்... பம்முவது போல பாசாங்கு காட்டுவான். இது கடந்த ஒருவாரமாகத்தான் அரங்கேறியிருக்கிறது. மணி ஒன்றும் குடிகாரன் இல்லை. அப்பப்போ வேலை அலுப்புக்காக குடிப்பான். ஆனால் வெளியில்  தலை காட்டமாட்டான்.  அப்படியே வீட்டில் படுத்து தூங்கிவிடுவான். அதனால் வெளியில் யாருக்குமே மணி குடிப்பது தெரியாது. இப்போது இந்த மணிக்கு என்னாயிற்று...? முதல் இரண்டு நாட்கள் மனைவி இழுத்துக் கொண்டு சென்று...வீட்டிற்குள் பூட்டி வைத்துப் பார்த்தாள். சிறிது நேரத்தில் திமிறிக்கொண்டு வெளியில் ஓடி வந்து விடுவான். உங்களால் எங்க மானம் போகுது சொல்லிச் சொல்லி அழுதுப் பார்த்தாள்.  மணி கேட்பதாக இல்லை. அதற்குமேல் அவளால் மணியை அடக்க முடியவில்லை. அவளையும் கண்டமேனிக்குத் திட்டவும் அடிக்கவும் ஆரம்பித்தான். "எக்கேடும் கெட்டுப்போகட்டும் ..சனியன் எங்களை விட்டால் சரி "என்...

தவமறைந்து அல்லவை செய்தல்....

  தவமறைந்து  அல்லவை செய்தல்... " தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.                             குறள் : 274 தவம்  - தவக்கோலம்  மறைந்து  - மறைத்து அல்லவை -தீய செயல்கள் செய்தல்  -  செய்து வருதல் புதல் -  புதர் மறைந்து - மறைந்திருந்து புள் -      பறவை சிமிழ்த்து - பிணைத்துப் பிடித்தல் அற்று - போன்ற தன்மையது தவக்கோலத்தில் மறைந்து நின்று தவறான செயல்களில் ஈடுபடுதல் வேடன் புதரில் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பதற்கு  ஒப்பானதாகும். விளக்கம் :  தவக்கோலம் என்பது பார்த்தவர்கள் கையெடுத்துக் கும்பிடும்படியான புனிதத்தன்மை மிக்கது. அக்கோலத்தில் இருப்பவர்கள் நல்லொழுக்கம்  மிக்கவர்களாக இருப்பர் என்பது அனைவரின்  நம்பிக்கை.  அந்த நம்பிக்கைக் கெடும்படியான தீய செயல்களில்  ஈடுபடுதல் கூடாது.  பிறன் மனைவியைத் தன்வயப்படுத்துதல்,  காணிக்கை என்ற பெயரில் பொருட்களை  அபகரித்தல் போன்ற தவத்திற்கு ஒவ்வாத  ...

தொடர்புக்கு அப்பால்

Image
        தொடர்புக்கு அப்பால் விட்டத்தைப் பார்த்தபடி அப்படியே  படுத்திருந்தார் எமிலி பாட்டி.   வெகுநேரமாக எதையோ தீவிரமாக யோசிப்பது போல் இருந்தது. வேறு என்னத்தை யோசிக்கப் போகிறார்? சதா பிள்ளைகளின் நினைப்போடு படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார். வயதான காலத்தில் தூக்கமும் சட்டுபுட்டுன்னு வரமாட்டேங்குது. சாக்காலமும் சீக்கிரம் வரமாட்டேங்குது... என்று புலம்பிக் கொண்டே இருப்பார். யாருக்கெல்லாமோ கணக்கு முடிச்சி வைக்கிற எமனுக்கு வத்தலும் சொத்தலுமா கிடந்து முனங்குற முதியவர்கள் பக்கம் சட்டுன்னு திரும்ப மனம் வராது. . இன்றைக்கோ... நாளைக்கோ ...போக வேண்டிய உயிர்களெல்லாம் வருடக்கணக்கா கிடந்து நொம்பலப் படுவதும் அதைப் பார்த்தும் பாராமல் இருப்பதும் இந்த எமனுக்கு ஒரு விளையாட்டு. இளமையில் வறுமை கொடிது. முதுமையில் தனிமை கொடிதினும் கொடிது. அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அது எப்படிப்பபட்ட கொடுமை  என்பதை உணர முடியும். வார்த்தையால் விவரிக்க முடியாத ஓர் உணர்வு. அதுவும் பிள்ளைகள் இருந்தும் அநாதையாக தனிமையில் கிடப்பது ....கொடுமையிலும் கொடுமை.  ஒன்று ஒன்றாக நினை...

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்....

Image
  அழக்கொண்ட எல்லாம் அழப்போம்..... அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை "                                     குறள் : 659 அழ - பிறர் அழுமாறு கொண்ட. -   கொள்ளப்பட்ட எல்லாம்-      அனைத்தும் அழ -       தாம் அழுமாறு போம் -  நீங்கிவிடும் இழப்பினும் - இழந்து போனாலும் பிற்பயக்கும் - திரும்பவும் வந்து சேரும் நற்பாலவை - நல்ல வழியில் வந்தவை பிறரை அழ வைத்து வஞ்சகத்தால் சேர்த்த பொருள் எல்லாம் ஒருநாள் அழதுஅழுது அவனைவிட்டுப் போய்விடும் . நல்லவழியில் சேர்த்த பொருள் கைவிட்டுச் சென்றாலும் தக்க நேரத்தில் திரும்பவும் கிடைத்துவிடும். விளக்கம் :  பிறருக்கு மன வருத்தம் கொடுத்து பொருள் ஈட்டுதல் கூடாது. பிறரை அழ அழ வைத்து அதனால் கிடைக்கும் பொருள் ஒருநாளும் நிலையாக இருக்காது. அவன் எப்படி பிறரை அழ வைத்தான...