Posts

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்....

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.... " அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்."                              குறள் : 71 அன்பிற்கும் - அன்பு கொள்வதற்கும் உண்டோ - உள்ளதோ  அடைக்கும் - அடைத்து வைக்கும் தாழ் _ தாழ்ப்பாள் ஆர்வலர் - அன்பு மிகுதியாகக் கொண்டவர் புன் - துன்பம் கணீர் - கண்ணில் பெருகும் நீர் பூசல் _ ஆரவாரம் தரும் _ கொடுக்கும் அன்பினை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புடையவரின் துன்பம் கண்டவிடத்து வெளிப்படும் கண்ணீர் அந்த  அன்பை வெளிப்படுத்திவிடும். விளக்கம் :  அன்பினை மனதிற்குள் வைத்துப் பூட்டி வைக்க முடியாது. என்னால் அன்பை வெளியில் காட்ட முடியாது என்று யாரும் கூறிவிட முடியாது. தமக்கு அருமையானவர்கள்,  நெருங்கிய நண்பர்கள் தன்மீது அன்பு கொண்டவர்கள்மீது கண்டிப்பாக நமக்கு அன்பு இருக்கும். அன்பு  என்பது மூடி வைக்க முடியாத ஒரு உணர்ச்சி. ஆதலால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த அன்பு வெளியில் வந்து எட்டிப் பார்க்கும். உங்கள் உள்ளத்தில் ஒருவர்மீது அன்பு இருக்க...

தாமரை இலை நீர் போல

Image
தாமரை இலைமேல் நீர் போல தாமரை என்றதுமே முகம் அன்றலர் தாமரை மலர் போல மலர்ந்து விடும். தாமரை இலை மேல் நீர் போல என்றால் ஒட்டியும் ஒட்டாமலும் உருண்டோடும் நீர்த்திவலைகள் கண்முன் காட்சிக்கு வந்து போகும். தாமரைக்கு அப்படி ஓர் ஈர்ப்பு  சக்தி உண்டு.தாமரை மலர்ந்திருக்கும் தடாகங்கள் அருகில் செல்லும்போது கண்கள் அக்காட்சிகளைவிட்டு  அகல மறுக்கும். அரைமணி நேரம் தடாகத்தின் அருகில் அமர்ந்துவிட்டுச் செல்லலாமா என்ற  வாஞ்சை எழும். பூக்களும் அதன் மேல் மொய்த்திடும் வண்டும் மட்டுமே நம்மை கவர்ந்து விடாது. தடாகத்தில் மிதந்து கிடக்கும்  தாமரை இலைகளும் என்னை கொஞ்சம் கவனி என்று நம் கவனத்தை ஈர்க்கும்.  தாமரை இலையால் எப்படி தண்ணீருக்கு மேலேயே மிதக்க முடிகிறது என ஒரு சிந்தனையை நமக்குள் விதைத்துவிட்டு மல்லாக்காக கிடந்து மயங்க வைக்கும். நீர் மட்டத்திற்கு மேல் தண்டின் வளர்ச்சி நின்று கொண்டிருப்பதன் பின்னணி என்ன என்பதை ஆராய  வேண்டும் என்று எண்ண வைக்கும். இயற்கை ஆர்வலர்கள் மனதில்  எழும் கேள்விகளும் சிந்தனைகளும் இவைகளாகத்தான் இருக்கும் இந்தச் சிந்தனையும் ஆர்வமும் இருந்ததால்தான் வள்ளுவரும்...

அடக்கம் அமரருள் உய்க்கும்....

அடக்கம் அமரருள் உய்க்கும்..... " அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை  ஆரிருள் உய்த்து விடும் "                              குறள் : 121                               அடக்கம் _ அடக்கமாக இருத்தல் அமரருள் _ சாகாதவரிடையே உய்க்கும் _கொண்டு சேர்க்கும் அடங்காமை _அடங்காதிருத்தல் ஆரிருள் _  கொடிய இருளில் உய்த்துவிடும் _ செலுத்திவிடும் அடக்கம் ஒருவனை உயர்த்தி என்றென்றும்  அழியாத உயர்ந்த நிலையை அடைந்திடச் செய்யும். அடங்காமை பாவமாகிய இருளில் கொண்டு சேர்த்துவிடும். விளக்கம்: அடக்கமாகிய நற்பண்பு ஒருவனை உயர்ந்த நிலையில் கொண்டு நிறுத்தும். எண்ணம்தான் செயலாக மாறும். நம் மனதில் உள்ள எண்ணம்தான் சொல்லாகவும் வெளிப்படும். அடக்கம் என்பது புலன்களை அடக்கி வைத்துக் கொள்ளும் ஒரு நற்பண்பு. மனம், மொழி, மெய் இவற்றைக் காத்துக் கொண்டால் நம்மை எந்தத் தீங்கும் அணுகாது. கட்டுப்பாடற்ற வாழ்க்கை பல தீமைகளுக்கு வழி வகுக்கும். தீய நண்பர்களிடம் கொண்டு சேர்க்கும். தீ...

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்... அரசன் முதல் பாமரன் வரை  அனைவருக்கும் அறிவுரையும் அறவுரையும் தந்து வழிகாட்டும் திருக்குறளையும் ஆத்திசூடியையும் படிக்காதவர் எவரும் இருக்க முடியாது. பேச்சுத் துணைக்கும் இவர்கள் வேண்டும். ஆட்சித்துணைக்கும் இவர்கள் வர வேண்டும். தமிழில் படிப்பதற்கும் பகிர்ந்து கொள்ளுவதற்கும் ஏராளமான நூல்கள் உள்ளன. எல்லா நூல்களிலும் உள்ள மொத்தக் கருத்தையும் கத்தையாக தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நூல் திருக்குறள். பயண நேரங்களில் பேச்சுத் துணைக்கு வைத்திருக்க வேண்டிய நூல். இன்று உலக நாடுகள் எல்லாம் உற்று நோக்கும் இந்திய பாராளுமன்ற உரையில் திருவள்ளுவரும் ஔவையும் ஆட்சி செய்கிறார்கள் என்பதை அறியும்போது மகிழ்ச்சி மேலிடுகிறது. அப்படி என்ன   பெரிதாக ஆட்சி செய்துவிடப் போகிறது... ஏதோ போகிற போக்கில் ஒன்றிரண்டு வரிகளைச் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றும். அந்த ஒன்றிரண்டு வரிகளும் உலகம் முழுவதிலும் பேசுபொருளாகிவிடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வரிகள். இன்றைய சூழலுக்கும் உகந்ததாக இருப்பதில்தான் அதன் பெருமை நிலைநிறுத்தப்படுகிறது. இன்று நாட்டில...

மூவகை மாணாக்கர்

   மூவகை மாணாக்கர் இலக்கண நூல்கள் என்றதும்  தொல்காப்பியம் , நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் இவை யாவும் நம்  மனதில் வந்து போகும். இவை எல்லாம் யார் படிப்பார்கள் ? கடினமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றும். புலவர்கள் படிக்க வேண்டியது எல்லாம் நமக்கு எதற்கு ? என்று கேட்கத் தோன்றும். நன்னூலார் உங்களுக்கும்  எனக்கும்கூட இலக்கணம் எழுதி இருக்கிறார். எங்களுக்கா....ஆச்சரியமாக இருக்கிறதா ? நீங்கள் கட்டுரையைப் படிக்கிறவர்தானே!  அப்படியானால் உங்களுக்குத்தான். உங்களுக்குத்தாங்க... மாணவர்களுக்குத்தாங்க... நாங்கள் மாணவர்கள் இல்லையே ! நாங்கள் எப்போதோ படித்து முடித்து விட்டோம் என்கிறீர்களா?  படித்து முடித்துவிட்டவர் எவருமிலர்.  வாழ்நாள் முழுவதும் நாம் மாணவர்கள்தான். நாளும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கற்றல் என்பது புத்தகத்தைப் படிப்பதால் மட்டும் வருவதல்ல. செவிவழிக் கற்றலும் நாளும் நமக்குள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கற்றல்தான் அதனால் நாமும் மாணவர்கள்தான். மாணவர்களை பள்ளிகளில் முதல்நிலை , சராசரி, சராசரிக்கும் கீழ் என்று மூன்று வகையாக...

சிரிப்பு மத்தாப்பு

Image
              சிரிப்பு மத்தாப்பு "வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்" ஆனால் எவ்வளவுதான் சிரிக்க வைத்தாலும் சிரிக்காமல்  கஞ்சி போட்ட சட்டை மாதிரி எப்போதும் சிலர் விறைப்பாகவே இருப்பார்கள். அது அவர்கள் சுபாவம் . அவர்களையும் சிரிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி சிரிப்பை  அள்ளி விடுவோர் உண்டு. பொதுவாக பேச்சாளர் அனைவருக்குமே நகைச்சுவை உணர்வு இருக்கும். அப்படிப் பேசினால்தான் பேச்சில் ஒரு சுவாரசியம் இருக்கும். கூட்டத்தினரைக் கடைசிவரை இருக்கையில் இருக்க வைக்க முடியும். கிருபானந்த வாரியார் பேச்சில் நல்ல நகைச்சுவை இருக்கும். சிலேடைப் பேச்சும் இருக்கும். மேலோட்டமாக ஒரு பொருளும் பிரித்துப் பொருள் கொண்டால் இன்னொரு பொருளும் வைத்துப் பேசுவார். சிலேடைப்புலி கி. வ. ஜகநாதன் பேச்சுக்குப் பேச்சு இரட்டை அர்த்தம் கொண்ட சொற்களைப் பயன்படுத்துவார். ஒருமுறை கி.வா. ஜ  வாரியாரின்  சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார். கடைசிவரை இருந்து கேட்டுவிட்டுப் போங்கள் என்று கேட்டுக் கொண்டார் வாரியார். எனக்கு வேறு பணி இருக்கிறது.  இறுதிவரை இருக்...

கிண்ணிப் பெட்டியும் மிட்டாய்ப் பெட்டியும்

Image
    கிண்ணிப்பெட்டியும் மிட்டாய்ப் பெட்டியும் கிண்ணிப் பெட்டி என்றதும் ஏன் கிண்கிணியென சிரிக்கிறீர்கள்? கிண்ணிப் பெட்டி தெரியாதா? அட போங்கங்க... பர்கரைக் கையில் வைத்துக் கடித்துக் கொண்டே அலுவலகம் செல்கிறவர்களா நீங்கள்? பாதி சுவை  தெரியாமலேயே வாழ்ந்துவிட்டீர்கள் . " உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி..." என்ற கண்ணதாசன் பாடலைப்பாடி புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நீங்கள் கிண்ணிப்பெட்டி  பார்த்திருக்க வாய்பில்லைதான். சிற்றூர்களில்  இருப்பவர்களே கிண்ணிப்பெட்டியை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மும்பை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் நீங்கள் பார்த்திருக்கவா முடியும்? அது என்னங்க கிண்ணிப் பெட்டி... என்று நீங்கள் கேட்பது  என் காதுகளில் விழத்தான் செய்கிறது.    நீங்கள் கிண்ணிப் பெட்டி என்ற சொல்லுக்கே   கூகுளில் பொருள் தேடும் நவீன கால  மனிதர்கள்.  உங்களிடம் கிண்ணிப்பெட்டி...கிண்ணிப்  பெட்டி  என்று கிண்ணரம்  வாசிக்கிறேன். ...