Posts

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்...

        கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்..... " கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் "                                                குறள்.  : 643 கேட்டார் _சொல்லக்கேட்டவர் பிணிக்கும் _ ஈர்க்கும் தகையவாய்_ இயல்பினை உடையனவாய் கேளாரும் _சொல்லைக் கேட்காத பிறரும் வேட்ப_  விரும்பும் வண்ணம் மொழிவதாம்_ சொல்லப்படுவதாம் சொல் _   சொல்வன்மை கேட்பவர்களை ஆட்கொள்ளும் தகைமையதாகவும் கேட்காதவரும் கேட்க விரும்புவதாக அமைவதே சொல்வன்மையாகும். விளக்கம் : கேட்பவர் உள்ளத்தைத் தன்வசப்படுத்தி, கேட்காதவரும் தாம் கேட்காமல் போய்விட்டோமே என எண்ணும் அளவுக்கு ஒருவருடைய பேச்சு இருக்க வேண்டும். தன் சொல்வன்மையால் தன் பேச்சைக் கேட்போரைக் கட்டிப்போடும் திறம் இருப்பதுதான் நல்லப் பேச்சுக்கு அழகு. பேசப்பேச இன்னும் பேச மாட்டாரா என்ற ஈர்ப்போடு அமர்ந்திருக்க வைப்பதாக ஒரு பேச்சு இருக்க வேண்டும். நல்லப் பேச்சாளர் பேச்சில் அப்படியே கட்டுண்டு கிடப்போம...

ஆசிரியப்பா வகைகள்

                   ஆசிரியப்பா வகைகள் நான்கு வகைப் பாக்கள் உண்டு. 1. வெண்பா 2. ஆசிரியப்பா 3. வஞ்சிப்பா 4. கலிப்பா நால்வகைப் பாக்களுள் ஆசிரியப்பா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.                           ஆசிரியப்பா இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாக உள்ள ஒரு பா வகை என்றால் அது ஆசிரியப்பாகும்.ஆசிரியப்பாவில் கவிபாடுவது மிக எளிது. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்: அடிதோறும் நாற்சீர்களைப் பெற்றிருக்கும். இடையிடையே குறளடி, சிந்தடிகள் வருதல் உண்டு. ஆனால் முதலடியும் ஈற்றடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும். அதாவது நான்கு சீர்கள் கொண்டவையாக இருக்கும்.   ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவல் ஓசை.                      அகவல் என்பது அழைத்தல்  என்னும் பொருள் உடையது. ஒவ்வோர் அடியும் தனித்தனியே  அழைக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் அகவல்  என்பதற்கான காரணம். ஆசிரியற்பாவினை அகவற்பா என்றும் அழைப்பர். முதலாவது ஆசிரியப்பாவில் சீர் எப்படி அமைந...

வெண்பா வகைகள்

  வெண்பா வகைகள் செய்யுள்கள் அல்லது பாக்கள்  அவற்றின் சீர்களுக்கு இடையே உள்ள தளைகளின் தன்மையின் அடிப்படையில் வெவ்வேறுவிதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன.ஓசை வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்கின்றன.     பா வகைகள்: பாவகைகள் ஐவகைப்படும். அவை :        செப்பலோசையை உடைய வெண்பா        அகவலோசையை உடைய ஆசிரியப்பா        துள்ளலோசையை உடைய கலிப்பா        தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா        வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா என்பனவாம்.                          வெண்பா : வெண்பாவிற்கான ஓசை செப்பலோசையாகும். செப்பல் என்றால்  செப்புதல், உரைத்தல் , விடை கூறுதல் எனப்படும்.        வினாவிற்கு விடை கொடுப்பது போன்ற ஓசை இ...

பினாங்குக்காரர்

    பினாங்குக்காரர் கண்ணம்மாவைத்  தெரியாதவர் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது.  அவ்வளவு பிரபலம். எல்லாருக்காகவும் ஓடி ஓடி உதவும் குணம்.  ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால்  முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது  கண்ணம்மா மட்டும்தான். கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா... கண்ணம்மாவைத் தவிர யாரும் அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது. எந்த வீட்டுல குழந்தை பிறந்தாலும் கண்ணம்மாவின் ஆஜர் இருக்கும். கண்ணம்மா வந்தாலே அந்த இடம் கலகலப்பாகிவிடும். முடுக்கிவிட்டு வேலை வாங்குவார்.  என்ன பண்ணணும் ஏது  பண்ணணும் என்று சொல்லிக் கொடுப்பார். வீட்டில் கிடக்கும் தட்டு மூட்டு வேலைகளை கூட இருந்தே செய்து கொடுப்பார். ஆனால் யார் வீட்டிலும் அநாவசியமாக கை நனைக்க மாட்டார். கறாரானப் பேர்வழி. இப்படி ஓடி ஓடி ஊருக்கு உழைத்து வரும் கண்ணம்மா ஓய்ந்து போய் விட்டத்தைப் பார்த்தபடி கிடக்கிறாள். நினைவலைகள் எங்கெங்கோ சுற்றி வருகின்றன. பினாங்குக்காரர் மட்டும் இருந்திருந்தால்.... எங்கு போனாலும் இந்தப் பினாங்குக்காரர் நினைவு மட்டும் நெஞ்சைவிட்டு அகலவே மாட்டேங்குது.... இனி நினைச்சு என்ன ஆ...

முறைசெய்து காப்பாற்றும்....

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்... " முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் "                குறள்   : 388 முறைசெய்து _ நெறி பிறழாது காப்பாற்றும் _  பாதுகாக்கும் மன்னவன் _  மன்னன் மக்கட்கு _  குடிமக்களுக்கு இறையென்று _ தெய்வம் என்று வைக்கப்படும் _ போற்றப்படுவார் நெறி பிறழாது நடுநிலை நின்று  நல்லாட்சி செய்யும் மன்னனைக் குடிமக்கள் தெய்வமாக  வைத்துப் போற்றுவர். விளக்கம் :   பாரபட்சம் பாராது அனைத்து குடிமக்களையும்   சமமாக மதித்து நல்லாட்சி புரிந்து வரும்   மன்னனை மக்கள் தங்களைக்   காத்து வரும் தெய்வமாகவே எண்ணிக்   கொண்டாடுவர்.   இது மக்களுக்கு இயல்பாகவே இருக்கும்   ஒரு குணம்.   உயர்வு தாழ்வு பாராட்டுதல் மன்னனுக்கு   அழகல்ல.   தொழிலால் உயர்ந்தோர் தாழ்ந்தோர்   என்ற பாகுபாடும் கூடாது.   ஒரு மன்னன் தன் குடிமக்கள்    அனைவரையும் பாகுபாடின்றி   சமமாகப் பார்க்கும் பண்பு கொண்டவனாக   இருக்க வேண்டும்.   ஒருவருக்கு நீதி...

வழுத்தினாள் தும்மினேன் ஆக....

    வழுத்தினாள் தும்மினேன் னாக.... " வழுத்தினாள் தும்மினேன் னாக அழித்தழுதாள் யார்உள்ளித் தும்மினீர் என்று"                            குறள்  1317 வழுத்தினாள் _ வாழ்த்தினாள் தும்மினேன்னாக _ தும்மியதற்காக அழித்தழுதாள் _மாற்றி அழுதாள் யார் _ யாரை உள்ளி  _  நினைத்து தும்மினீர் _ தும்மல் கொண்டீர் என்று _ என்றாள் நான் தும்மியதற்காக என்னை வாழ்த்தியவள் உடனே அதனை மாற்றிவிட்டு யாரை நினைத்துத் தும்மினீர் என்று கூறி அழுதாள். விளக்கம் : தும்மலின்போது உயிர் ஒரு வினாடி போய்விட்டு வரும் என்பது பழைய நம்பிக்கை.அதனால்  உடன் இருப்பவர் நீடூழி வாழ்க என்று வாழ்த்துவார். இது காலங்காலமாக இருந்துவரும் ஒரு மரபு. மிகவும் நேசிக்கிற ஒருவர் நினைக்கும்போதுதான் தும்மல் வருமாம். தலைவனைத் தலைவி உயிருக்கு மேலாக நேசிக்கிறாள். தன்னைவிட வேறு எந்தப் பெண்ணையும் தலைவன் ஏறெடுத்துக் கூட பார்க்கக் கூடாது என்று நினைக்கிறாள். அப்போது தற்செயலாக தலைவனுக்குத் தும்மல் வந்துவிடுகிறது. தும்மிவிடுகிறான். உடனே நீடூழி வாழ்க என்று வாழ்த்தி விடு...

துணிந்தவனுக்குத் துக்கமில்லை

      துணிந்தவனுக்குத் துக்கமில்லை "துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டம் "என்பார்கள். ஒரு காரியத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்ற துணிவு வந்துவிட்டால் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் மலைப்பாக இருக்காது. அப்படிப்பட்ட துணிச்சல்காரர்கள் பூ... இவ்வளவு தானா..?. என்று முனைப்போடு களத்தில் இறங்கி வேலை செய்வார்கள். இடையில் எந்த சக்தியாலும் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. இதைத்தான்  "துணிந்தவனுக்குத் துக்கமில்லை" என்று சொல்வார்கள். பறந்தால் கீழே விழுந்துவிடுவோமே என்ற  அச்சமிருந்தால் எந்தப் பறவையும்  கூட்டிலிருந்து வெளிவர முடியாது. விழுந்தாலும் பரவாயில்லை என்ற துணிச்சலோடு பறக்க முற்படும்போதுதான் பறவையால் பறக்க முடிகிறது. பறவை தன் இறக்கைமீது உள்ள ஒரே நம்பிக்கையில் துணிந்து பறக்க முற்படுகிறது. ஏதோ ஒரு துணிச்சலில் மரத்தில் ஏறி விடுவோம். இறந்கும் போது கால் நடுங்கும். வியர்த்து விறுவிறுத்து அண்ணே கொஞ்சம் இறக்கிவிடுங்களேன்..... அக்கா ஒரு கை பிடியேன்..... என்று மன்றாடிக் கொண்டிருப்போம். பல நேரங்களில் நம் துணிவு இப்படித்தான் இர...