சாது மிரண்டால்...
சாது மிரண்டால்.... " சாது மிரண்டால் காடு கொள்ளாது " என்பது முதுமொழி. இயற்கையாகவே சிலர் அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பர். அவர்களுக்கு எளிதாக கோபம் வராது. எத்தனைமுறை நாம் சீண்டினாலும் பொறுத்துக் கொள்வர். ஆனால் ஒருவரின் தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கும்போது யாருமே அமைதியாக போனால் போகட்டும் போடா என்று விட்டுவிடுவதில்லை. பொங்கி எழுந்து விடுவர்.எல்லா நேரங்களிலும் எல்லோராலும் பொறுமையாக இருக்க முடியாது. கோபமே வராதவர்களைக் கோபப்படுத்திப் பார்த்தால் அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. இதைத்தான் இந்த முதுமொழி வலியுறுத்துகிறது. ஓர் ஊரில் சுயம்பு என்றொரு விவசாயி இருந்தார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று யாருக்குமே தொந்தரவு இல்லாமல் வாழ்ந்து வந்தார். அக்கம்பக்கத்தினரிடம் எந்த வம்புதும்புக்கும் போகமாட்டார். மிகவும் சாதுவானவர் என்று பெயரெடுத்து வைத்திருந்தார். அவருடைய சாதுவான குணம் அவரை பலவீனமானவர் என்றும் பிழைக்கத்...