Posts

ஊழையும் உப்பக்கம் காண்பர்.....

Image
ஊழையும் உப்பக்கம் காண்பர்.... "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் "                         குறள் :   620 ஊழையும் _ விதியையும் உப்பக்கம் _ பக்கவாட்டில்,ஒதுக்கித் தள்ளு காண்பர் _ காண்பார்கள் உலைவின்றி _ உள்ளத்தில் சோர்வின்றி தாழாது  _ முயற்சி குறைவு இல்லாமல்,                     காலம் தாழ்த்தாமல் உஞற்றுபவர் _ முயற்சி செய்பவர் மனச்சோர்வின்றி இடைவிடாமல் முயற்சி செய்பவர் விதியையும் தள்ளி விட்டு வெற்றி காண்பர். விளக்கம் :  விதி வலிது என்பது அனைவரின்  அசைக்க முடியாத  கருத்து.   இறைவனால் நமக்கு   நிர்ணயிக்கப்பட்டது அவ்வளவுதான்   என்று பெரும்பாலானோர் நம்பி  அதற்குமேல் எந்த முயற்சியில்  ஈடுபடாது விட்டுவிடுவர்.  இதனை இயற்கையான நிகழ்வு  என்றுகூட ஒரு சாரார் கூறி கடந்து  சென்றுவிடுவர்.  தலையெழுத்தை யாரால் மாற்றமுடியும்?  எல்லாம் விதிவிட்ட வழி என்று முடங்கிக்  ...

மனிதம் மரணித்ததோ....

மனிதம் மரணித்ததோ..... வேற்று மனிதராய் மருத்துவர்           எவரும் மருத்துவம் பார்த்ததில்லை    கொரோனா தொற்று மருத்துவரென்று             உம்மையும்  விட்டு வைக்கவில்லை    ஆறுதல் சொல்லிட          எம்மிடம் வார்த்தையுமில்லை    மருத்துவமனையில் இடமில்லை            மருத்துவர் எவரும் சொன்னதுமில்லை   மனிதம் மரணித்ததால் மயானத்தில்           மருத்துவருக்கு இடமுமில்லை    தொலைத்துவிட்டோம் மாமனிதரோடு            மனிதத்தையும் என்பதைத் தவிர     வேறெதுவும் இப்போது              சொல்லத் தெரியவில்லை!                                                                          ...

திருவிழா கண்ட ஆட்டுக்கல்

Image
திருவிழா கண்ட ஆட்டுக்கல் எங்க வீட்டு ஆட்டுக்கல்லுக்கு இன்று திருவிழா.  வெள்ளைக் கலரை அள்ளிப்பூசி  விடுவடுவெனத் தலையை உருட்டி  கடகடவென கர்ஜித்து ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை  ஆசுவாசப்படுத்தி  இப்படி ஒரு முறையோடு  ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. எங்க வீட்டில் மட்டுமல்ல. ஊரில் உள்ள ஒவ்வொரு ஆட்டுக்கல்லுக்கும் அன்று கொண்டாட்டம்தான். ஆனால் பெண்பிள்ளைகள் எங்களுக்கு  மட்டும் திண்டாட்டம். ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கெல்லாம்  ஒருமணி நேரம் அங்கிங்கு என்று  எங்கும் நகரவிடாமல் ஆட்டுக்கல்லை ஆட்டுவிக்கும் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாலு நிமிடத்திற்கு ஒருமுறை ஊறப்போட்ட  அரிசியில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தேன்.  கோபத்தை ஆட்டுக்கல் மீது காட்டியதால்  வீடு முழுவதும் ஒரு அதிர்வு. முகம் முழுக்க மாக்கோலம் வரைந்த நிலையில் பார்ப்பதற்கே உக்கிரமாக இருந்தது.அதுவும் ஒரு பாதுகாப்புத்தான். அதனால்தான் என் உக்கிரம் கொஞ்சம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளம் ஊர் முழுவதும் சுத்...

வேற்றுகிரகத்துக்கு ஓடிவிடு

வேற்றுக் கிரகத்துக்கு ஓடிவிடு உயர்வென்ன தாழ்வென்ன  வேற்றுமை பேசி நித்தம்  வீணில் திரிந்தவரை எல்லாம்  தூணில் கட்டி வைத்து துவட்டி எடுப்பதுபோல் உச்சந் தலையில் ஓங்கிஅறைந்து யாவரும் என்முன்னே  ஒன்றென்று சப்தமில்லாமல் உரைத்தாய் பேதம் இங்கு இல்லைடா வேற்றுமை பேசி திரியும் மானிடர்காள்! அரவமின்றி நில்லடா அடுத்தவன் மனையைப் பாராதே அடுபகை கொண்டு எம்பாதே ஆறடி தூரத்தில் நில்   மாறுபாடு உன்டெனில் ஆறடிக்குள் செல் என்றாய் அருவமாய்ச் சுற்றித் திரிகின்றாய் அகப்பட்டவரை சுருட்டி  கக்கத்தில்  வைத்துவிட்டு கடகடவென நடக்கின்றாய் தூங்கா நகரையும் தூங்க வைத்து தாலாட்டுப் பாடி தனித்தனியே கிடத்தி விட்டாய் துட்டு பின்னால் ஓடுவோரை  மட்டுப்படுத்தி சற்று  கட்டுப்படுத்தி எட்டு திக்கும் கை பரப்பி  வட்டில் முன்னே இருப்பவரையும் கட்டிலிலே கிடக்க வைத்து தொட்டில் ஆட்டும் மனையாளை எட்டி நின்று பார்க்க வைத்து சுட்டிச் சிறுவரையும் துள்ள தடா போட்டு கட்டி அணைத்தலுக்கு அரைப்புள்ளியிட்டு அண்டம் தாண்டும் அறிவாளியையும் அறைக்குள்ளே அடக்கி வைத்து தண்டம் என்னும் பட்டத்தை தமையருக்கு வாங...

தோன்றின் புகழொடு தோன்றுக....

Image
    தோன்றின் புகழொடு தோன்றுக... "   "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று "                                    குறள் 236                                    தோன்றின் _ பிறர் அறிய தோன்றும்போது, புகழொடு _ புகழ் நோக்கோடு தோன்றுக  _தோன்றுவீராக அஃதிலார் _ அந்த நோக்கம் இல்லாதவர் தோன்றலின் _ தோன்றுதலின் தோன்றாமை _  தோன்றுதல் இல்லாதிருத்தல் நன்று _ நன்மையுடையது பிறர் அறியும்படி ஒரு செயலில் ஈடுபட்டால் புகழ் மிக்கவர்களாக மாற வேண்டும். அப்படி புகழ் நோக்கு இல்லாதவர்  வருவதிலும் வராமல் போவதே நன்று . விளக்கம் : ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினால் புகழ் பெற்றே ஆக வேண்டும் என்ற உ...

முதல் வகுப்பில் நான்...

               பதவி உயர்வு மூன்று வயதினில் கையில்  டம்ளரோடு பள்ளி வாசலில் நின்றிருந்தேன். பள்ளியில் சேர்த்துவிட்டால் தன் கடமை முடிந்தது என்று கையைப் பிடித்து தரதரவென்று பள்ளிக்குள் இழுத்துச் சென்றார் அம்மா.   பள்ளிக்குள் நுழைந்ததும் "பள்ளிக்கூடத்தில் சேர்க்கணுமா அதோ அந்த அறையில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை இருப்பார். போய் சேருங்கள் " கை காட்டிவிட்டார் பள்ளி ஊழியர் கமலம். கமலம் கை காட்டிய அறையை நோக்கி சென்று, நானும் அம்மாவும் சேர்ந்து எட்டிப் பார்த்தோம். "பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க வந்தீங்களா...வாங்க...வாங்க "வரவேற்றார் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை விமலா. "ரொம்ப சின்ன பொண்ணாக  தெரிகிறாளே...வயசு ஐந்து  ஆயிட்டுதா..." கேட்டார் ஆசிரியை. தலைக்குமேல் கையைக் இழுத்து காதைத் தொட்டுவிடச் சொன்னார் ஆசிரியை. சட்டென்று கையை வைத்து  தொட்டு விட்டேன். "நல்ல சாமர்த்தியம்..."சிரித்துக்கொண்டே கையை இழுத்து காதைத் தொட உதவி செய்தார் ஆசிரியை.  என்னால் தொட முடியவில்லை. "வயசு இன்னும் ஆகலியே... அடுத்த வருடம் வாங்க..." என்று சொல்லி அம்மாவின் கோரிக்கையை ...

மூன்றாவது மொழி தேவையா ?

              மும்மொழிக் கொள்கை புதியன புகுதலும் பழையன   கழிதலும் வழுவல"  இது காலத்தின் கட்டாயம்.  புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப  தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்கள்  நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதனால் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே வைத்துக் கொண்டு திட்டங்கள் கொண்டுவருவது நன்மை பயக்குமா என்றால் சற்று  ஐயம்தான் எழுகிறது. மொழிப்பாடம் படிப்பது வேறு. துறைசார் பாடங்கள் படிப்பது வேறு. துறைசார் பாடங்கள் படிப்பது காலத்தின் கட்டாயம். மொழிசார் பாடங்கள் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுபவையாக இருத்தல் வேண்டும். பன்மொழிப் புலமை பெறுவதில் தவறில்லை. அது நாமாக விருப்பப்பட்டுப் படிப்பதாக இருக்க வேண்டும். வலிந்து திணிக்கப்படும்போது ஒரு சலிப்பு ஏற்படும். அதுவும் சிறுவர்களாக இருக்கும்போது என்பது பாடச் சுமை ஏற்பட்டு படிப்பு என்றாலே ஒரு வெறுப்பு வந்துவிடும். கல்வி சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்கக் கூடாது  என்றுதான் எத்தனையோ...