Posts

நச்சப் படாதவன் செல்வம்...

    நச்சப் படாதவன் செல்வம்.... " நச்சப் படாதவன்  செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று  "                குறள்.     :       1008 நச்சப்படாதவன் _ விரும்பப்படாதவன் செல்வம் _ பொருள் நடுவூருள் _ ஊரின் நடுவே நச்சுமரம் _ விஷத் தன்மை கொண்ட மரம் பழுத்தற்று _ பழுத்தது போன்றது ஒருவராலும் விரும்பப்படாதவன்கண் இருக்கும் செல்வமானது ஊர் நடுவே நச்சு மரம் ஒன்று  காய்த்து கனிகளைத் தந்து நிற்பதற்கு  ஒப்பானதாகும். விளக்கம் :  ஊர் நடுவில் ஒரு மரம் பூத்துக் குலுங்கி கிடக்கிறது. ஆனால் இலை, பூ ,பழம்  எல்லாம் விஷத்தன்மை கொண்டது. யாருமே பயன்படுத்திவிட  முடியாது. யாருக்குமே பயனில்லா இந்த மரம் பூத்தென்ன?  காய்த்தென்ன ?  காயாது இருந்தென்ன ?  அது போன்றதுதான் ஒருவருக்குமே உதவாதவன் வீட்டில் நிறைய பொருள் வைத்திருக்கிறான். யாருக்குமே உதவுவது இல்லை. என்ன பயன்?  அவனிடம் பொருள் இருந்தென்ன?  இல்லாமல் போயென்ன ? ஏழைக்கு உதவாதவனுடைய செல்வம் நச்சுமரம் பழுத்துக் கிடப்பதற்கு ஒப்பானது எ...

உரமொருவற்கு உள்ள வெறுக்கை...

Image
      உரமொருவற்கு உள்ள வெறுக்கை....    " உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்    மரம்மக்க ளாதலே வேறு "                                 குறள்.   :   600   உரம் ,_ வலிமை ஒருவற்கு  _ ஒருவனுக்கு   உள்ள  _  ஊக்கம் வெறுக்கை  _  மிகுதி   அஃது  _ அது   இல்லார்  _ இல்லாதவர்    மக்கள்  _  மாந்தர்   ஆதலே  _ ஆகுதலே     வேறு _ பிறிது ஒருவனுக்கு வலிமையாவது ஊக்கம் மிகுதியே ஆகும்.ஊக்கம் இல்லாதவர்கள்   பார்ப்பதற்கு மனிதர்கள் போல  காணப்பட்டாலும் உண்மையில் மரத்திற்கு  ஒப்பானவரே ஆவர். விளக்கம் : ஒருவனுக்குப் பலம் என்பது மனோபலமே ஆகும். அந்த மனோபலம் இல்லாதவர் மக்களாகவே கருதப்படமாட்டார்.  மக்களாக இருத்தல் என்பது வேறு . மக்கள் என்று சொல்லப்படுபவர்  மனத்தால் இயங்குபவர். வெறும் காலால் இயங்குபவர் மனிதர் அல்லர். மரங்களுக்கும் இயக்கம...

அதியமான் ஔவை நட்பு

Image
   அதியமான் ஔவை நட்பு ஔவையைப்  பற்றி எழுதும் எவரும் அதியமானை விட்டுவிட்டு வெறுமனே ஔவையை மட்டும் எழுதிவிட்டு சென்றுவிட முடியாது. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட நட்பு எவ்வாறு தமிழ் இருக்கும்வரை எல்லோராலும் பேசப்படுமோ அது போன்றுதான் ஔவை அதியமான் நட்பும்  தமிழும் தமிழரும் இருக்கும் வரை பேசப்படும்.  அந்த அளவு உயர்வான நட்பு  அதியமான் ஔவை நட்பு. அதியமான் என்றதும் , "நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கு ஈந்த அதியன் " என்று சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார் கூறுவது  நினைவுக்கு வரும். ஒருநாள் தனது அமைச்சர் மற்றும் படைகளோடு காட்டிற்குச் செல்கிறான் அதியமான் நெடுமான் அஞ்சி.  முட்செடிகளுக்கிடையே ஒரு நெல்லி மரம். அதில் அரிதாக ஒரே ஒரு  நெல்லிக்கனி கிடக்கிறது. மன்னனின் கண் எதேச்சையாக நெல்லிக்கனி மீது விழுகிறது.  மனதிற்குள் ஏதோ ஒரு கணக்குப் போட்டுப் பார்க்கிறான் மன்னன். மன்னனின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்ட வீரன் ஒருவன்  முட்செடிகளுக்கு இடையே நுழைந்து சென்று ,அதைப் பறித்து வந்து மன்னனிடம் தருகிறான் . " மன்னா! ...

இளையதாக முள்மரம் கொல்க....

Image
              இளையதாக முள்மரம் கொல்க.... "    இளையதாக முள்மரம் கொல்க களையுநர்    கைகொல்லும் காழ்த்த விடத்து  "                                            குறள்  : 879 இளையதாக _ இளமையானதாக முள்மரம் _ முட்களைக் கொண்ட மரம் கொல்க _ பிடுங்கி ஏறிக களையுநர்  _ வெட்டுபவர்,அப்புறப்படுத்துபவர் கை _ கைகளை  கொல்லும் _ வருத்தும், காயப்படுத்தும் காழ்த்தவிடத்து _ முதிர்ச்சி அடைந்த நிலையில் முள் மரத்தை அது இளையதாக இருக்கும்போதே  வெட்டிவிட  வேண்டும். அப்படியே வளர விட்டுவிட்டால் அது நன்கு முற்றி தன்னை வெட்டுபவருடைய   கைகளைக் கிழித்து காயப்படுத்திவிடும். அதுபோல பகைமையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.அப்படி செய்யாது வளர விட்டுவிடுவோமானால் அது வளர்ந்து நமக்கு என்றும்  தீராத துன்பத்தைத் தந்து நிற்கும்.  பகைமை மட்டுமல்ல நோய் வந்தாலும் ஆரம்பத்திலேயே  மருந்து எடுத்துக் கொண்...

நீர்இன்று அமையாது

            நீர்இன்று அமையாது உலகெனின்...   " நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்     வான்இன்று அமையாது ஒழுக்கு "                                          குறள்  :  20 நீர்இன்று _ நீர் இல்லாமல் அமையாது _ நிலைபெறாது உலகெனின் _ உலகு என்றால் யார்யார்க்கும் _  எவ்வகைப்பட்டவர்க்கும் வான்  _   மழை இன்று _  இல்லாமல் அமையாது _  அமையாது ஒழுக்கு  _  ஒழுக்கம் நீர் இல்லாமல் உலகில் எவ்வுயிரும் வாழ இயலாது. அதுபோல மழை இல்லை எனில் எந்த ஒழுக்கவாழ்வும் நடைபெறாது. விளக்கம் : எப்படிப்பட்டவராயினும் நீர் இல்லாமல் உலக வாழ்வை நடத்திட முடியாது. அதுபோல எத்திறத்தாராயினும் மழை இல்லாமல் போகுமானால் வாழ்க்கைக்குச் சிறப்பு தரும் தவ ஒழுக்கங்கள் நடத்திட இயலாது. உயிர்கள் நிலைபெற்றிருப்பதற்கு மட்டுமல்ல ஒழுக்கத்திற்கும் மழைதான் காரணம்.நீரில்லாமல் உலகியல் நடவாது என்பது உண்மையானால் மழை இல்லாமல் எவர்க்க...

குழலினிது யாழினிது...

Image
  குழலினிது யாழினிது.... " குழலினிது யாழினிது என்பதம் மக்கள்   மழலைச்சொல் கேளா தவர்                             குறள்.  : 66 குழல்  _  புல்லாங்குழல் இனிது  _  இனிமையானது யாழ்     _ யாழ் என்னும் இசைக்கருவி இனிது _ இனிமையானது என்ப    - என்று சொல்லுவர் தம் மக்கள் _  தமது மக்கள் மழலை  _ குதலை , பால் மணம் மாறா பேச்சு சொல்.    _ மொழி , பேச்சு கேளாதவர் _  கேட்காதவர் தங்களுடைய குழந்தைகள் குழறும் மழலைச் சொல்லைக் கேட்டு  மகிழாதவர்கள்தாம் பிறர் வாசிக்கும் புல்லாங்குழல் இசையையும் மிழற்றுகின்ற யாழிசையையும்  இனிது என்று கூறி மகிழ்வர். இசை என்பது செவிக்கு இன்பம் ஊட்ட வல்லது. குழல் , யாழ்  ஆகிய கருவிகளை மீட்டி எழும் இசை விலங்குகளைத் தன்வயப் படுத்தும் ஆற்றல் மிக்கதாகும். எத்தகைய இசைக்கருவியாலும் மீட்ட முடியாத இனி...

காய் நெல் அறுத்து....

Image
    காய் நெல் அறுத்துக் கவளம்.... பாண்டியன் அறிவுடை நம்பியைப் பிசிராந்தையார் என்னும் புலவர் பாடியது. மக்களவையில் பட்ஜெட் உரையின்போது   நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறிய புறநானூற்றுப் பாடல். பட்ஜெட் உரைக்குப் பின்னர் அனைவராலும் பலவாறு விமர்சிக்கப்பட்ட... பாராட்டப்பட்ட பாடல். பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும்  ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே  நட்பு கொண்டிருந்தனர். சோழ மன்னன் வடக்கிருந்து உயிர் நீத்தப்போது  பிசிராந்தையாரும் அவரோடு வடக்கிருந்து உயிர்  நீத்தார் என்று வரலாற்றேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களது நட்பை தமிழ்கூறு நல்லுலகு இன்றளவும்  உயர் நட்பாகப் பேசி வருகிறது. பிசிராந்தையார் வெறுமனே பாட்டு எழுதும் புலவர் மட்டும் அல்லர். நல்ல அரசியல் புலமை மிக்கவர். பிசிராந்தையார் புறநானூற்றில் நான்கு பாடலும் அகநானூற்றில் ஒரு பாடலும்  நற்றிணையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். பாண்டியன் அறிவுடை நம்பி என்ற மன்னன் தன் குடிமக்களை வருத்தி வரி வாங்கினான். இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாயினர் . மன்னனிடம் சென்று எடுத்துரைக்கும் துண...