Posts

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்...

Image
          துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்....  " துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்   துப்பாய தூஉம் மழை "                                          - குறள் : 12 துப்பார்க்கு -உண்பவர்க்கு துப்பாய - வலிமை தருகின்ற துப்பு - உணவு ஆக்கி - ஆகும்படி செய்து,விளைவித்து துப்பார்க்கு - உண்பவர்க்கு, குடிப்பவர்க்கு துப்பாய - வலிமையாக தூஉம் - ஆவதும், பெய்து வருவதும் மழை - மழை உண்பவர்களுக்குத் தக்க உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு பருகுவார்க்குத்  தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். விளக்கம் : மழை இல்லை என்றால் உணவுமில்லை....உயிருமில்லை. மழையானது நாம் உண்ணும்  உணவுப் பொருட்களான காய்கறிகள்,  தானியங்கள் யாவும் விளைவதற்குக்  காரணகர்த்தாவாக இருக்கிறது..இப்படி துய்ப்பவர்க்கு உரிய உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு   அவற்றை உண்பவர்க்கு தானும்  துய்ப்பதற்கு உரிய ஒரு பொருளாக இருந்து வலிமை தரும் ந...

உணவு உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை

Image
            உணவு உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை பழந்தமிழ் நூல்கள் நம் வாழ்க்கை நடைமுறைகள் எப்படி இருக்கவேண்டும்...    எப்படி எல்லாம் இருக்கக் கூடாது... என வலியுறுத்துகிறது.    ஆசாரக்கோவை என்னும் நூல் உணவு உண்ணும்போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சில நற்பண்புகளை நமக்குச் சொல்லித் தருகிறது.    நாம் இன்றுவரை எப்படி இருந்தால் என்ன ?    சாப்பிட வேண்டும் அவ்வளவுதான் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்போம்.    அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் இன்றுமுதல் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.    சாப்பிடுவதற்கு என்று சில வழிமுறைகளை கடைபிடித்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.    சாப்பிடுவதற்கு அப்படி என்ன வழிமுறைகள் இருந்துவிடப் போகிறது.சாப்பிட வேண்டும். அவ்வளவுதான்.    எங்கே இருந்து சாப்பிட்டால் என்ன?    எப்படி இருந்து சாப்பிட்டால் என்ன?    என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிருக்கிறீர்கள்.    அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் எண்ண...

நேர்மறை எண்ணம்

Image
                நேர்மறை எண்ணங்கள்  எண்ணம் போல வாழ்வு என்பார்கள்.      "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"என்றார் சுவாமி விவேகானந்தர்.      நாம் பேசும் பேச்சு செயல் யாவும் நேர்மறையாக இருக்க வேண்டும்.      அப்போதுதான் நடப்பவையும் நன்றாகவே நடக்கும்.      *     சூழ்நிலையை சாதகமாக்குங்கள்.             சூழ்நிலை சரியாகவே இல்லை.நாம் அன்றாடம் காண்பவை யாவும் தாறுமாறாக இருக்கிறது.        கேட்பவை யாவும் சகிக்க முடியவில்லை.    நம்மைச்சுற்றி நடப்பவை யாவும் விரும்பத் தகாததாகவும் தவறானதாகவுமே இருக்கிறது.       "நம்மால் மட்டும் எப்படி நேர்மறை சிந்தனையாளராக இருக்கமுடியும்?"       இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழலாம்.      இவற்றை எல்லாம் கடந்து நம்மை நாமாக செதுக்கிக் கொள்வதுதான...

விடை தர மறுக்கும் பள்ளி நினைவுகள்

Image
       விடை தர மறுக்கும் பள்ளி நினைவுகள்     பள்ளிப்பருவத்தில்       துள்ளி விளையாடிய      இடங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்!      கண்களில் ஏக்கம்      நடந்த இடங்களில்      மறுபடி என் காலடி பதித்து      தடம் அழிந்து போகாதபடி     மெல்ல நடக்கிறேன்!           தூண்களை சுற்றி சுற்றி      தேய்த்த இடங்களில்      சேதாரம் இருக்கிறதா       பட்டு விரல்களால் மெல்ல       தொட்டுப் பார்க்கிறேன்       கண்களில் இட்டு  வணங்குகிறேன்!                முட்டிபோட மறுத்த         முழங்கால் மறுபடி        தனக்கு ஒரு வாய்ப்பு கேட்டு        தடுமாறி நின்றிட         வகுப்பறையின்  வராண்டாவில்         வாய்தா கே...

பழமொழியும் புதுமொழியும்

              பழமொழியும் புதுமொழியும் 1 .    உருளுகிற கல்லில் பாசி பிடிக்காது        உழைக்கிறவன் வீட்டில் வறுமை இருக்காது ! 2.     நிறைமதி காணா வானுமில்லை         நிம்மதி விரும்பா மனிதருமில்லை! 3.      இன்பத்தில் இணையும் உறவு          துன்பத்தில் துணை நிற்கும் நட்பு! 4.       சட்டிப்பானை இல்லா வீடும் இல்லை           வட்டியும் முதலும் வாங்கா வார்த்தையுமில்லை! 5.        பள்ளத்தில் வீடு கட்டாதே            கள்ளரோடு உறவு வைக்காதே! 6.       பருவம் பார்க்காது விதைக்காதே           பக்குவம் இல்லாரோடு பழகாதே! 7.       அலை இல்லா கடலும் இல்லை            கவலை இல்லா மனிதனும் இல்லை!  8.      விடியாத இரவும் இல்லை           முடியாத துன...

முயலின் கனா

Image
                          முயலின் கனா வானத்தைப் பார்த்தபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது முயல்.    வானத்தில் ஓடும் குட்டிக்குட்டி மேகங்கள் தன்னைப் போன்றே இருப்பதைப் பார்த்து வியந்து போனது.     எங்கே இந்த மேகங்கள் ஓடுகின்றன?     அப்பப்பா...என்ன வெண்மை...என்னைவிட வெண்மையாக இருக்குமோ ?     தொட்டுப் பார்த்துவிட ஆசை. ஆனால் முடிகிற காரியமா என்ன?     எப்படி வானத்திற்குப் போக முடியும்.     ஏணி வைத்தால் கூட எட்டாதே.     இன்று எப்படியாவது தொட்டுப் பார்த்துவிட வேண்டும் .ஆசை ஆசையாக  மேகத்தையே பார்த்தது.     எட்டி நின்று தன் குட்டிக் குறும்பால் சுண்டி இழுத்து என்னை தூங்க விடாமல் செய்கிறதே .     இந்த மேகங்களுக்குத்தான் எத்தனை குறும்பு.     அப்படியே ஏதேதோ  சிந்தனையில் அசந்து தூங்கிப் போனது.     சற்று நேரத்தில் ஒரே தாவல்.... வானத்தைப் போய் சேர்ந்தது முயல்.     பக்கத்தில்  மேகக் கூட்டம்.   ...

திருவள்ளுவர் கூறும் நிலையாமை

Image
                  திருவள்ளுவர் கூறும் நிலையாமை    நெருநல் உளனொருவன்  இ்ன்றில்லை என்னும்        பெருமை உடைத்து இவ் வுலகு"     நேற்று இன்று இல்லை என்று சொல்லும்படியான நிலையாமையை உடையது இவ்வுலகம்.     நேற்று நான் அங்கே பார்த்தேன் .....இன்று இங்கே பார்த்தேன் அதற்குள் இப்படியா!     வாயைப் பிளந்து அதிர்ச்சியோடு நிற்கும் அளவுக்கு நிகழ்வுகள் நாளும் நடந்து கொண்டிருக்கின்றன.     இப்படி இறப்பு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.     அப்படிப்பட்ட பெருமை இப்புவிக்கு உண்டு என்கிறார் திருவள்ளுவர்.     திருவள்ளுவர் இறப்பைப்பற்றி மட்டும்தான் கூறி இருப்பாரா என்றால் இல்லை என்றுதான் கூறுவேன்.     எப்படி பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் வருகிறதோ அதுபோன்றதுதான் வாழ்க்கையும்.     மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.     எல்லோர் வாழ்க்கையிலும் அந்த மாற்றங்கள் நிகழும்.     ஒரு பொருள் காணாமல் போய்விட்ட...