Posts

அன்னையர் தினம்

            அன்னையர் தினம்  அம்மா என்றால் உயிர்               அம்மா என்றால் அன்பு               அம்மா என்றால் பாதுகாப்பு               அம்மா என்றால் நிம்மதி                அம்மா என்றால் மொழி                அம்மா என்றால் தெய்வம்        இப்படி அம்மாவைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.        ஒப்புவமையற்ற ஓர் உன்னத உயிர் அம்மா.         ஆனால் சும்மா கெட என்று கிடப்பில் போடப்பட்ட பாவப்பட்ட ஜீவனும் அம்மாதான்.         கூடவே இருக்கும் எந்த பொருளின் மதிப்பும் நமக்குத் தெரிவதில்லை.   ...

காமராசரின் நகைச்சுவை உணர்வு

Image
காமராசர் சில சமயங்களில் நகைச்சுவையாகப் பேசுவார்.          அவற்றுள் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒருசில செய்திகளை உங்கள்முன் வைக்கிறேன்.                 #   காமராசர் முதலமைச்சரானதும் தலைமைச்செயலகம் நோக்கிச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றன.          காவல்துறை அதிகாரிகள்   வண்டிகள் சைரன் ஒலியுடன் பின் தொடர வண்டி புறப்பட்டது.          சைரன் ஒலியைக் கேட்டதும் காமராசர் "நான் உயிரோடதானே இருக்கேன்.          அதுக்குள்ள எதுக்கு சங்கு ஊதுறீங்கன்னேன்" என்றாராம்.          கேட்ட அனைத்து அதிகாரிகள் முகத்திலும் சிரிப்பு.          பின்னர் இருக்காதா என்ன?          சைரன் ஒலிக்கு இப்படியும் அர்த்தம் இருக்கா....          அதன் பின்னர் அவர் அலுவலகம் செல்லும்போது சைரன் ஒலிப்பதே இல்லையாம்.            எப்ப...

காமராசர் ஓர் ஆச்சரியம்

Image
  "சோலை என்றால் பூத்துக் குலுங்க வேண்டும்.  தோட்டம் என்றால் காய்த்துக் கனிதர வேண்டும்.   தலைவன் என்றால் மக்கள் பணி ஆற்ற வேண்டும்"  என்பதற்கு இணங்க மக்கட்பணியை  மட்டுமே செய்த மகத்தான தலைவர் காமராசர். அரசியல்வாதிகள் மத்தியில் காமராசர்  ஓர் ஆச்சரியம். பாட்டாளி வர்க்கத்தின் அடையாளம். இப்படியும் ஓர் அரசியல்வாதியா? ஆச்சரியப்படத்தக்க அரசியல் செய்தவர் காமராசர்.  வெளிநாட்டுக் காரும் பெட்டி நிறைய பணமும் என்று சுற்றிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் பணமில்லா பாமரன். அவரைப்பற்றிய ஆச்சரியப்படத்தக்க செய்திகள் உங்களுக்காக...           *   ஒருமுறை உலகக் கண்காட்சி  திறப்புவிழாவிற்காக  அன்றைய பிரதமர்  நேருவுடன் காமராசரும்  டெல்லிக்குச் சென்றிருக்கிறார். கண்காட்சியை அனைவரும்  சுற்றிப் பார்த்தாராம். கண்காட்சியில்  காசு போட்டு எடை பார்க்கும் எந்திரம்  ஒன்று வைக்கப்பட்டிருந்திருக்கிறது. எந்திரத்தைப் பார்த்ததுமே ஆளாளுக்கு  எடை பார்க்க அவர்முன் போய் நின்று கொண்டனர்...

சின்ன சின்ன ஆசை

               சின்ன சின்ன ஆசை                   அசைந்து ஆடும் கொம்பில் தொங்கி         ஆட்டம் போட ஆசை                  கயிறுபோல வீழும் துளியைக்         கட்டி இழுக்க ஆசை                  வட்டம்போடும் குட்டி நிலவை         எட்டிப் பிடிக்க ஆசை                  கண்ணைச் சிமிட்டும் வின்மீனோடு         கதைகள் பேச ஆசை                  கானம் பாடும் குயிலோடு         கவிதை பாட ஆசை                  மழைவிட்ட வானம்போல        மனதை  வைக்க ஆசை                 நித்தம் வரும்  கதிரவனைக் கட்டி        முத்தம் தந்து...

அம்மாவின் மடியில்.....

Image
      "தாயின்  மடியில்  தலை வைத்திருந்தால்          துயரம் தெரிவதில்லை"          எவ்வளவு அனுபவப் பூர்வமாக உணர்ந்து எழுதியப் பாட்டு.          ஆம்.துயரத்துக்கு ஒரே மருந்து அம்மா.    அம்மாவின் மடிதான் குழந்தைக்குச் சொர்க்கம்.     அம்மா வருடிக் கொடுத்த அந்த  நாட்கள் கவலையில்லா பேரின்ப நாட்கள்.எத்தனை வயதானாலும்..எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அம்மாவின் அன்பிற்காக...அம்மாவின் அரவணைப்புக்காக அனைவர் உள்ளமும் ஏங்கும்.இது உண்மை. உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை.     அம்மா என்றால் அன்பு :      "   தாயிற் சிறந்த கோவிலுமில்லை.         தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."        அம்மாவுக்கு முன்னால் எதுவும் ஈடில்லை.     தாயின் அரவணைப்பில்தான் உண்மையான பாதுகாப்பு கிடைக்கிறது. இது அறிவி...

ஏட்டுச் சுரைக்காய்

Image
                              ஏட்டுச் சுரைக்காய்  பள்ளியிலிருந்து வந்த நேரத்திலிருந்து ஏதோ ஓர் நினைவிவிலேயே இருந்தாள் தாரகை.     சியாமளா  ஏன் அப்படி கூறினாள்?      மண்டையைப் போட்டு உருட்டி உருட்டிப் பார்த்தாயிற்று.      ஒரு விடையும் கிடைக்கவில்லை ....அப்படியானால்...அப்படியானால்...சியாமளா சொல்லியதுதான் சரியாக இருக்குமோ?      இல்லை ...இல்லை..அப்படி எல்லாம் இருந்துவிடவே கூடாது.      அப்படி இருந்துவிட்டால் எனது  ஆசிரியை இதுவரை சொல்லித் தந்தது எல்லாம் தவறாகிவிடுமே..     " எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் "என்ற ஔவையின் கூற்று  ஒரு போதும் பொய்யாக இருக்காது.          அதெப்படி இருக்கும்....      "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்      கண்ணென்ப வாழும் உயிர்க்கு"      என்ற பொய்...

பழமொழிகளும் பழக்கமொழிகளும்

                பழமொழிகளும் பழக்கமொழிகளும்  பழமொழிகள் என்பது அனுபவத்தின் மொழி.        அனுபவத்தை அறிவுரையாக  தந்த மூத்தோர்மொழி.   இந்தப் பழமொழிகள் காலங்காலமாக  பலர் நாவினில் பயின்று   பயின்று      பழக்கமொழியாகப் போகின்றன. பழக்கமொழியாகிப் போனபோது பழமொழியாய் இருந்தபோது சொல்லப்பட்ட பொருள் மாறுபட்டுப் போய்விடுகிறது. ஒத்துவராத பொருளில் திரிந்து உலவ ஆரம்பித்தது. திரிந்த பொருள்தான்உண்மையான பொருள் என்று நம்மை அனைவரையும்  நம்ப வைத்தது. அப்படி திரிந்து உலா வரும் ஒரு சில பழமொழிகளில் உண்மையான பொருள் என்ன என்று தெரிந்து கொண்டால் அதிர்ந்து போவோம். என்ன.. இவ்வளவு நாளும் இப்படி ஒரு தவறான பொருளிலா  பேசிக்கொண்டிருந்திருக்கிறோம் என்று  நினைக்க வைக்கும். வாருங்கள். சில பழமொழிகள் எப்படி பழக்கமொழியாகி ,பொருள் மாறிபோயிருக்கின்றன என்பதைப் பார்ப்போம். 1.  " களவும் கற்று மற "                  ...