மனங்களைக் கொள்ளையடியுங்கள்.
மனங்களைக் கொள்ளையடியுங்கள் கொள்ளையடிக்க வேண்டுமா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது.? மொகலாய மன்னர்கள் கோவில்களில் கொள்ளையடித்துச் சென்றார்கள் என்று படித்திருக்கிறோம். முகமூடிக் கொள்ளையர்கள் கடைகளில் கன்னக்கோலிட்டு திருடிச் சென்றதாக கேள்விப்பட்டிருக்கிறோம். லாரி லாரியாக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக வாசித்திருக்கிறோம். இது என்ன புதுக்கொள்ளை? மனக்கொள்ளையா? வேண்டவே வேண்டாமப்பா. கொள்ளை என்ற சொல்லைக் கேட்டாலே எனக்கு அப்படி ஒரு அலர்ஜி. விடுங்கடா சாமி....."என்று அலர வேண்டும் போல் தோன்றுகிறதா? இதுக்குப்போய் அலட்டிக்கலாமா? என்று எனக்குப் பாடவேண்டும் போல் தோன்றுகிறது. கொள்ளை என்றாலே ஏதோ தீண்டத் தகாத ஒரு சொல் என்று ஏன் ஓடி ஒளியப் பார்க்கிறீர்கள்? நீங்கள் இதுவரை கொள்ளையடித்ததே இல்லையா? அட...போங்கங்க ...உங்கள் வாழ்நாளில் பாதி நாளை வீணாக கழித்து விட்டீர்கள் என்று உங்களுக்காகப் பரிதாப்படுகிறேன். உங்கள் பரிதாபம் யாருக்கு வேணும்? விசயத்துக்கு வாங்க...